கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 27 9

“நடந்தது நடந்துப் போச்சு! நீங்களே உங்கப் புள்ளையை ஏன் இப்படி கொறைச்சுப் பேசறீங்க… எந்த ஆம்பிளை கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி அப்படி இல்லமா இருந்திருக்கான்?”

“நான் இப்படி அப்படீன்னு இருந்தது இல்லடி… உன்னைத்தவிர வேற எவளையும் என் லைஃப்ல நான் தொட்டது இல்லடி..!”

“உங்களை யாரும் இப்ப கொறை சொல்லலை… அதோட நிறுத்துங்க..”ராணி பதிலுக்கு நல்லசிவத்திடம் சீறினாள்.

“மை டியர் ஃபாதர்… நீங்க என்னை ஆசை ஆசையா பெத்து எடுத்தீங்க; அதுக்காக நீங்க உங்க கடமையை அப்ப அப்ப செய்தீங்க… செய்யறீங்க; எல்லா அப்பனும் அவன் அவன் புள்ளைக்கு இதெல்லாம் செய்துதான் ஆகணும்; நான் உங்களை அப்பான்னு கூப்பிடறேனே… அதுக்கு பதிலுக்கு நீங்க எதாவது செய்ய வேண்டாமா?”

“என் கோபத்தை அதிகமாக்காதே… நீ இத்தோட நிறுத்திக்க்க…” நல்லசிவம் அவனை கையெடுத்துக் கும்பிட்டார்.

“அப்பா… போலீஸ் ஸ்டேஷனுக்கு போக இருந்த என்னை, ஒரு தரம் போன் பண்ணி அப்படி நடக்காம பாத்துக்கிட்டீங்க; உங்க அஃபிஷியல் லிங்க்சை யூஸ் பண்ணீங்க? நான் ஒத்துக்கறேன்; போலீஸ்காரன் எத்தனை தடவை உங்க கிட்ட ஹெல்ப்புக்காக வந்திருக்கானுங்க? இதெல்லாம் ஒரு கிவ் அண்ட் டேக்ன்னு எடுத்துக்கணும்…” சம்பத் கேலியாகச் சிரித்தான்.

“டேய் … யானை கொழுத்தா தன் தலையில அதுவே மண்ணை வாரிப் போட்டுக்குமாம்…!” கோபத்தில் நல்லசிவத்தால் பேசமுடியவில்லை.

“அப்பா … நான் திரும்பவும் சொல்றேன்… நீங்க கும்பிடற அந்த ஆண்டவன் எனக்கு ஒரு சாய்ஸ் கொடுத்திருந்தா…”

“கொடுத்திருந்தா?” நல்லசிவம் சீறினார்.

“சிம்பிள்… உங்களுக்கு பிள்ளையா நான் பொறந்தே இருக்க மாட்டேன்; வேற ஒரு ஃபாதரைத் தேடிக்கிட்டு அந்த வீட்டுல பொறந்திருப்பேன்;” சம்பத் சிரித்தான்.

“பாத்தியாடி… நீ பெத்திருக்கற உன் புள்ளை லட்சணத்தை?”

Updated: April 15, 2021 — 3:36 am