கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 27 9

சம்பத், சுகன்யாவின் மீதிருந்த எரிச்சலையும், சினத்தையும், ஏற்கனவே செல்வாவிடம் போனில் முழுசாக காண்பித்துவிட்டான். கனகா குடுத்த காஃபியை குடித்துவிட்டு, அவன் கிளம்பும் போது கூட, தன் தாத்தாவின் அறைக்குள் படுத்திருந்த சுகன்யா, அந்த அறையைவிட்டு வெளியில் வரவேயில்லை.

“பாட்டி, சுகன்யாகிட்ட சொல்லிடுங்க; நான் போய்ட்டு அப்புறமா வர்றேன்!” அறையின் உள்ளிருந்த சுகன்யாவின் காதில் விழுமளவிற்கு சம்பத் தான் கிளம்புவதை சத்தமாக அறிவித்தும், அதற்கும் எந்தவித பலனும் இல்லை.

சம்பத்துக்கு, சற்றே மனதுக்குள் அடங்கியிருந்த ஆத்திரம், மீண்டும் பொங்கி எழுந்தது. நான் கிளம்பறேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும், உரக்க குரல் கொடுத்ததுக்கு அப்புறமும், ஒரு மரியாதைக்கு கூட வெளியில வர்றலயே? இந்த சுகன்யா மகாத்திமிர் பிடிச்சவளா இருக்கணும்? இவ லவ்வர் தமிழ்செல்வனுக்கும், இவளுக்கும், கூரா ஆப்பு வெச்சதுல ஒரு தப்பும் இல்லை? நடுவுல ஒரு நிமிஷம் நான் இவளை நினைச்சு பரிதாபப்பட்டது தப்புத்தான் போல இருக்கே? இவளை நான் மட்டும் எதுக்காக என் சொந்தம்ன்னு நினைக்கணும்? மதிக்கணும்?

ரெடி … ஒன்…. டூ… த்திரி … ஸ்டார்ட் மீயூஜ்ஜிக்! கத்திரிக்கா கடைத் தெருவுக்கு வந்தாச்சு! இன்னொருத்தன் இவளை ஏற்கனவே தொட்டு பாத்துட்டான்னு சுத்தமா தெரிஞ்சுப் போச்சு. நாங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்ன்னு இவளைத் தொட்டவனே கன்பார்ம் பண்ணிட்டான். இவ்வளவு நாளா ஒருத்தரை ஒருத்தர் தொட்டுக்காம, தடவிக்காமலா இருந்து இருப்பாங்க? எனக்கு சத்தியமா சுகன்யா கிடைக்கப் போறதும் இல்லே! இப்ப இவளை கல்யாணம் பண்ணிக்கணுங்கற இன்ட்ரஸ்ட்டும் எனக்கு சுத்தமா இல்லே! இவளை மாதிரி திமிர் புடிச்சவளைக் கட்டிக்கிட்டா, என் சவுகரியப்படி வாழ்க்கையில ஃபிரீயா இருக்க முடியாது.

ஒரு விஷயம்தான் புரியலே? சுகன்யாவோட லவ்வர் செல்வா, சுத்தமா கொஞ்சம் கூடவா சூடு, சொரனை இப்படி எதுவும் இல்லாம இருப்பான்? சோத்துல உப்புப் போட்டுத்தானே திம்பான் அவன்? ஆப்பு வெச்சு கால் மணி நேரமாச்சு; அவன் பொலம்பி அழுவற சத்தத்தைக் காணோம்! திருப்பியும் சுகன்யாவுக்கு அவன் போன் பண்ணலயே? அவன் போன் பண்ணட்டும்! பண்ணாம போவட்டும்! இல்லே, இங்க நேரா என்கொயரிக்குத்தான் வரட்டுமே? உனக்கென்னடா? உங்கிட்ட மேட்டர் வரும்போது பாத்துக்க! சர்தானே? போ… போ.. எடத்தைக் காலி பண்ணு நயினா…

டேய் சம்பத்து… நீ உன் வேலையை கச்சிதமா முடிச்சிட்டே! உன் ரூட்டைப் பாத்துக்கிட்டு போய்கிட்டே இருடா; பலனை அனுபவிக்கறவங்க அனுபவிக்கட்டும்! தேவிடியா முண்டை…! மனதுக்குள் சுகன்யாவை வெறுப்புடன் திட்டினான். திட்டியதால் மனதுக்குள் ஏற்பட்ட போலியான சந்தோஷத்தையும், சுகன்யாவின் பாராமுகத்தினால் ஏற்பட்ட வெறுப்பையும் தன் முகத்தில் காட்டிக்கொள்ளாமல்,
“பாட்டீ, தேங்க்ஸ் பாட்டீ… பில்டர் காபி அருமையா இருந்தது..” கனகாவைப் வாயாரப் பாரட்டிவிட்டு சிவதாணுவின் வீட்டிலிருந்து கிளம்பினான்.

வீட்டுக்கு வரும் வழியில், தன் பழைய நண்பன் ஒருவன் எதிர்படவே, அவனுடன் நேரம் போவது தெரியாமல் அரட்டையடித்தவாறு, சுகன்யாவால் புண்பட்ட தன் மனதை, ஃபில்டர் வில்ஸ் புகையால் சிறிதளவு ஆற்றிக்கொண்டான். பசியுடன் வீட்டுக்குத் திரும்பியவன், மிச்சம் மீதியிருந்த எரிச்சலை, முதலில் தன் எதிரில் வந்த தாயின் மீது காட்டினான். ஒரு முரடனின் செல்லாத கோபம், வீட்டில் தாயிடமும், தாரத்திடமும்தானே செல்லுபடியாகும்!.

சம்பத், தான் அணிந்திருந்த ஜீன்சையும், டீ ஷர்ட்டையும் கழற்றி, ஹாலில் திசைக்கொன்றாக எறிந்தான். ராணி, தன் செல்லப்பிள்ளை சம்பத், ஆடும் ஆட்டத்தை மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கோபத்தில் இருக்கும்போது யார் எது சொன்னாலும் அவன் காதில் ஏறாது என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். இப்போதைக்கு அவனை விட்டுப் பிடிக்கவேண்டும் என்ற முடிவுக்கு அவள் வந்தாள்.

நல்லசிவம், சம்பத்தைப் பெற்றெடுத்தவர், அவன் ஆடும் கூத்தைக் கண்டவர், தன் மகனையும், மனைவியையும் மாறி மாறி மவுனமாக பார்த்துக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தார். சரிதான்… இன்னைக்கு அம்மாவும், புள்ளையும், வழக்கம் போல ஒரு டிராமா போடத்தான் போறாங்க; அதுல எனக்கு என்ன ரோல்; அதை நான் எப்படி டீல் பண்ணணும்? அவருக்குத் தன் மீதே எரிச்சல் வந்தது.

ராணியும் அதையேதான் சிந்தித்துக்கொண்டு இருந்தாள். ஒரே புள்ளே; ஒரே புள்ளேன்னு தலைக்கு மேலச் செல்லம் குடுத்து கெடுத்துட்டேன். பத்மாசூரன் மாதிரி இப்ப இவன் ஒவ்வொரு விஷயத்திலேயும், இவன் என் தலைமேலேயே கையை வெச்சுப் பாக்கிறேங்கிறான். என்னத்தப் பண்றது? பெத்ததை எங்க கொண்டு போய் விடறது?

பெத்தவரு என்னடான்னா, எப்பவும் தலையில கையை வெச்சிக்கிட்டு உக்காந்து இருக்கார்? பெத்தது ஒரு வக்கிரம்ன்னா, வாச்சது அதுக்கு மேல ஒரு வக்கிரம்; அப்பனும், புள்ளையும் நேருக்கு நேர் ஒருத்தரை ஒருத்தர் நேரா முகம் கொடுத்து பேசறது கூட கிடையாது. சூரியனும், சனியும் மாதிரி தான். அடுத்த வாரம் இவன் பெங்களூரூக்குத் திரும்பிப் போயிடுவான். அதுக்குள்ள ஒண்ணு ரெண்டு இடத்துல இவனுக்குப் பொண்ணுங்களை காட்டணும்! எதைப்பத்தியும் இவரு கவலைப்படாம உக்காந்து இருக்காரு?

இவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா, நம்ம கடமை முடிஞ்சதுன்னு நிம்மதியா இருக்கலாம். ஒரு எடமும் சரியா அமைஞ்சுத் தொலையலை? சம்பத்து, படிச்சவளா, வேலை செய்யறவளா வேணுங்கறான். வர்ற எடத்துல பொண்ணு, கொஞ்சம் சுமாரா அழகாயிருந்தா, அவளுக்கு சரியான வேலையில்லே! வேலையிலயிருந்தா இவன் நெனைக்கற மாதிரி செவப்பா இல்லே?

அப்பன் அந்தக்காலத்துல அலைஞ்ச மாதிரி, புள்ளையும் செவப்புத் தோலா பொண்டாட்டி வேணுங்கறான். செவப்பு, கருப்புல என்னா இருக்கு? எப்படியிருந்தாலும் பொம்பளை பொம்பளைதான்னு ஏன் இந்த ஆம்பிளைங்களுக்குப் புரிஞ்சுத் தொலைக்கலை? ஆம்பளைங்களை மட்டும் நான் ஏன் குறைச் சொல்றேன்? பொண்ணுங்க மட்டும் யோக்கியமா?

ஒரு எடத்துல பொண்ணுப் பாக்க போனா, பெத்தவங்களுக்கு மேல, இதுங்களே கண்டீஷன் மேல கண்டீஷன் போடுதுங்க! வர்றவன் உசரமா இருக்கணும்; செவப்பா இருக்கணும்; மீசை இருக்கணும்; சமையல் தெரியணும்; கார் வெச்சிருக்கானா? வீடு வெச்சிருக்கானா? வீடு வெச்சிருந்தா, வீட்டுக்கு என்னை ஈ.எம்.ஐ. கட்டுன்னு சொல்லக்கூடாது! கல்யாணம் ஆனதும் உடனே தனிகுடித்தனம் போயிடனும். ஆம்பளை கண்டீஷன் போட்ட காலம் போய், இப்ப பொண்ணுங்க கண்டீஷன் போடற காலமாயிருக்கு!

இந்தக்காலத்து பொண்ணுங்களுக்குத்தான், என்னன்னா ஆசைகள்! என்னன்ன விருப்பங்கள்! என்னன்ன கற்பனைகள்! மாமானார், மாமியார், நாத்தானார்ன்னு பிக்கல் பிடுங்கல் இருக்கக்கூடாதுன்னு, மனசுக்குள்ளத் ரொம்பத் தெளிவா இருக்காளுங்க! பின்னே என்னா? சொந்தக்கால்ல நிக்கறாளுங்களே? ஒண்ணு அமைஞ்சி வந்தா, ஒண்ணு அமைய மாட்டேங்குது… சுகன்யா, எல்லாவிதத்துலயும் ஒத்துவர்றா! ஆனா அவ அப்பனும், ஆத்தாளும் ரொம்பவே பிகு பண்றாங்க… நீங்க ஒரு தரம் நேராப் பாத்து அந்த குமார்கிட்ட பேசுங்கங்கறேன்… காதுல வாங்கினாத்தானே? என்ன மனுஷனோ? புள்ளை கல்யாணத்துல கூட அக்கறையில்லே?

சம்பத்தை, காலையில சுகன்யாவைப் பாத்துட்டு வாடான்னு சொன்னேன்; என்னமோ சொன்னதும் எதுத்துப் பேசாமா எழுந்துப் போனான். அங்கப் போனானா? இல்லையா? ஒண்ணும் தெரியலை? இவனோ ஒரு குரங்கு… இவனுக்கு ஏத்த மந்தி எங்கப் பொறந்து இருக்கோ? ராணி தன் மனதுக்குள் சலித்துக்கொண்டாள்.
“ஏண்டா, சுகன்யாவைப் பாத்தியா? உனக்குப் பிடிச்சிருக்கா அவளை? அவ என்ன சொன்னா?” வரிசையாக கேள்வி மேல் கேள்வியை ராணி அடுக்கினாள்.

“ம்ம்ம்… சொன்னா சுரைக்காய்க்கு உப்பு இல்லேன்னு!”

“என்னடா உளர்றே?” மகன் அர்த்தமில்லாமல், தன் மேல் காட்டும் கோபத்தைக் கண்டு ராணி ஒரு வினாடி திகைத்தாள்.

“புரியலை…உனக்கு? இப்ப என்னைக் கேள்வி கேக்காதேன்னு சொல்றேன்..!?”

“அவங்க வீட்டுல ஒரு வாய் உன்னை சாப்பிடக்கூட சொல்லலையா?”

Updated: April 15, 2021 — 3:36 am