கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 25 6

மீனாட்சியின் கண்கள், அவள் பேருக்கு ஏற்றவாறு, மீனாக இங்கும் அங்கும் துள்ளிக்கொண்டிருந்தன. அவள் விழிகளில் அன்பு எல்லையற்று வழிந்து கொண்டிருந்தது. தன் பிரியத்துக்குரியவளின் கண்களை காலையில் பார்த்ததும், சீனுவின் மனம் புத்துணர்ச்சியுடன் துள்ளியது. மனம் துள்ளியதுமட்டுமல்லாமல், உடலும் இலேசாக தடுமாற ஆரம்பித்தது.

மீனா இப்ப செய்யறதெல்லாம், அதுவே இயல்பா நடக்குதா? இல்லே? நான் சொன்னதை கேட்டு மூஞ்சை மழிச்சுக்கிட்டு வந்திருக்கியேன்னு என் மேல இரக்கப்பட்டு, நாய்க்கு எலும்புத் துண்டு போடறமாதிரி எனக்கு தன் இடுப்பை காமிச்சி என்னை கட்டிப்போடறாளா? இல்லே; வெறுப்பேத்தறாளா? சீனு ஒன்றும் புரியாமல் மவுனமாக மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தான்.

இந்த வீட்டுல புதுசா ஒரு காதல் நாடகம் அரங்கேறுதுன்னு தெரியாம, அம்மாவும், அப்பாவும் ரொமாண்டிக் மூடுல பக்கத்துல பக்கத்துல உக்காந்து சிரிச்சுக்கிட்டு இருக்காங்க? என் எதிரிலேயே என் தங்கச்சி, என் ஃப்ரெண்டுக்கு கடலைப் போடறா; என்னாக் கொடுமைடா இது? நான் வாயைப் பொத்திக்கிட்டு இவங்க ட்ராமவை வேடிக்கைப் பாத்துக்கிட்டு இருக்கேன். என் கதையே இன்னும் ஒரு சரியான ட்ராக்ல செட் ஆவலை. இவங்க ரெண்டு பேரு கதையை அம்மா கிட்ட இப்ப சொல்லலாமா? வேணாமா?

இவங்க கதையை அம்மாகிட்ட சொல்லப் போய், என் கதையில இடைவேளை போட்டுட்டா; நான் ஒழிஞ்சேன். இப்ப நான் என்ன பண்ணணும்? கொஞ்சம் பொறுக்கறது நல்லதுன்னு உள்ளுக்குள்ள எனக்குத் தோணுது? இந்த கம்மினாட்டி சீனு ஏன் மீசையை எடுத்துட்டு சிவன் கோவில் பண்டாரம் மாதிரி உக்காந்து இருக்கான்? மீசை தாடியை வழிடான்னு மீனா சொல்லியிருக்கணும்! செல்வா தன் இருகைகளையும் தன் தலை மேல் வைத்துக்கொண்டு மனதுக்குள் எண்ண அலைகள் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருக்க, மீனாவையும், சீனுவையும், மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.

சீனு…! சீனு..! என் சீனு…!!! என் முழுமனதையும் ஒரு ராத்திரியில ஆக்கிரமித்துக் கொண்டவன், என் எதிர்ல உக்கார்ந்திருக்கிறான். என் விருப்பத்தை அவன் நிறைவேத்திட்டான்.
“ஃபட் ஃபட் ஃபட்” … மீனா தன் தலைமுடியை வேண்டுமென்றே மீண்டும் ஓங்கி ஓங்கி அடித்தாள். அவள் நினைத்தது போலவே, சீனு வேகமாக அவள் பக்கமாக திரும்பினான். தான் அவனுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்துவிட்டாள்.

மீனா தன் ஓரக்கண்ணால் சீனுவைப் பார்த்து ஒரு மில்லிமீட்டர் தன் இதழ்கள் அசைய, புன்னகை புரிந்து, தன் உதடுகளை ஈரமாக்கிக்கொண்டு, நேற்றிரவைப் போல், காற்றில் சீனுவுக்கென ஒரு பிரத்தேயக முத்தத்தை அனுப்பினாள். அதே தருணத்தில் தான் தன் நேசத்துக்குரியவனை பார்த்து புன்முறுவல் பூத்ததையோ, அவனை முத்தமிட்டதையோ யாரும் பார்த்துவிடவில்லையே என்றும் நோட்டமும் விட்டாள்.

சீனுவுக்கும், தனக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும், அன்னியோன்யத்தை, தற்சமயம் ரகசியமாக வைத்திருக்க அவள் மனம் விரும்பியது. செல்வா உளறிட்டான்னா? அவன் கிட்டவும் சொல்லி வெக்கணும்! இதை எப்படி என் அண்ணன் கிட்ட நான் பேசறது? என் அண்ணன் கிட்ட பேசறதுக்கு நான் ஏன் தயங்கறேன்…? சுகன்யாவை விட்டு இவன் கிட்ட சொல்லலாமா? ஒரே இரவில், தன் தாய், தன் தந்தை, தன் தமையன் அத்தனை பேரும் தன்னிடமிருந்து சற்றே அன்னியமாகிப்போனதை நினைத்து அவள் மனம் வியந்தது.

மீனா…என்னடி பேசறே நீ? அவங்க உங்கிட்டேயிருந்து அன்னியமாகலைடி! நீ சீனுவை நெருக்கமா உணர ஆரம்பிச்சிருக்கே! அதனால அவங்கள்ளால்லாம் உனக்கு அன்னியமாத் தெரியறாங்க! அவள் மனது அவளுடன் ஒன்றி நடந்தது.

என் மனசு இவனை விரும்பத் தொடங்கி விட்டது. ஆனா அதே மனசே மெல்லப் போடீன்னு ப்ரேக்கும் போடுது; இது பெரிய கொடுமை… என் மனசு ஆசைக்கு நான் முதலிடம் கொடுக்கறதா? இல்லே என் மனசுக்கு ஒரு பெரிய காட்ரேஜ் பூட்டைப் போட்டு பூட்டறதா? ஒரு தரம் மனசு ஓட ஆரம்பிச்சிட்டா அதை பிடிச்சி நிறுத்த முடியாது. எரியற நெருப்புல நெய்யை ஊத்தற கதைதான்!. நெய்யை ஊத்தி நெருப்பை அணைக்க முடியுமா? மீனாவின் மனசு வேகமாக ஓடியது.
மீனாட்சியின் முத்தம் கிடைத்தவுடன், சீனுவாசனின் மனம், மிகுந்த பரவசத்தில் ஆழ்ந்தது. ஓரக்கண்ணால் தன் இருபுறத்தையும் பார்த்தான். நடராஜனும், மல்லிகாவும் காஃபியின் சுவையில் மெய் மறந்திருந்தார்கள். சீனு அன்றைய பேப்பரில் தன் தலையைப் புதைத்துக் கொண்டிருந்தான். சீனு தன் வலது கை நுனிவிரல்களை தன் உதட்டில் ஒற்றி முத்தமிட்டு, அந்த முத்தத்தை மீனாவின் பக்கம், தன் உதடுகளை குவித்து ஊதினான்.

மீனா, சீனுவின் பதில் முத்தத்துக்காக காத்துக்கொண்டிருந்தவள் போல், தன் உதட்டைக் குவித்து காற்றில் பறந்து வந்த முத்தத்தை எதிர்கொண்டவள், தன் தலையை ஒருமுறை சுழற்றி தன் கூந்தலை மார்பில் போட்டுக்கொண்டவள், விறுவிறுவென தன் கொலுசதிர வீட்டுக்குள் நடந்தாள். சீனுவின் திருட்டு கண்கள், தங்களின் பார்வையை அவள் அசையும் பின்னழகின் பின்னால் செலுத்தின.

சீனுவின் குறும்பான பார்வையும், அவன் தன் உதட்டால் செய்த வித்தையையும், அது தனது உடலில் ஏற்படுத்திய ஜாலத்தையும் உணர்ந்த மீனாவின் மனதில் சட்டென தோடி ராகம் எழுந்தாடி உள்ளத்தில் ரீங்காரமிடத் தொடங்கியது. அவள் உற்சாகத்துடன், தங்களுக்காக காஃபியை கலக்கத் தொடங்கினாள். அவள் உதடுகள் அவளுக்குப்பிடித்த பாடலை முனக ஆரம்பித்தது

“தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி…!
தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை…!