கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 25 6

“கேட்ட கேள்விக்கு எப்பவும் நேர் பதில் சொல்லமாட்டீங்களே? போன் எடுக்க இவ்வளவு நேரமான்னு கேட்டேன்?” மீனா பதில் வாங்காமல் விடமாட்டாள் போலிருந்தது.

“தூங்கிட்டிருந்தேம்மா! ரூம்ல செல்வாவும் தூங்கிக்கிட்டு இருக்கான்; அதனால வெளியில வந்து பேசறேன் மீனா..”

என்னா உரிமையா மிரட்டறா? இவ கழுத்துல நான் தாலியை மட்டும் கட்டிட்டேன்; எனக்கு அப்பவே சங்குதான். என்னை பலி ஆடா ஆக்கி … கழுத்துல மாலையைப் போட்டு, மஞ்சாத்தண்ணி தெளிச்சி, குன்னாத்தாம்மா கோவுல்ல கொடிகம்பத்துக்கு கீழே நிக்க வெச்சி, ஒரே வெட்டா வெட்டிடுவா போல இருக்கே?

“குட்மார்னிங்” பரவாயில்லையே! என் சீனுவுக்கு கொஞ்சம் புத்தியும் இருக்குது. என் அண்ணணுக்கு கேக்கவேணாம்ன்னு வெளியில வந்து பேசறான்!. மீனா சீனுவை மனதுக்குள் மெச்சிக்கொண்டாள். அவள் குரல் இப்போது இனிமையாக மாறி வந்தது.

“வெரி குட்மார்னிங் … சொல்லு மீனா?

“கீழே இறங்கி வரும்போது, உங்க மூஞ்சை சுத்தமா செதுக்கிக்கிட்டு வாங்க..! நேத்து ராத்திரி பாக்க சகிக்கலே! கண்றாவியா இருந்தது..!”

“என்ன சொல்றே மீனா..?”

“ம்ம்ம்… உங்க ஆட்டுக்கடா தாடி…கெளுத்தி மீசை இதெல்லாத்தையும் வழிச்சு போட்டுட்டு … ஒரு டீசன்ட் லுக்கோட, பாக்கறதுக்கு எங்கப்பா மாதிரி அழகா வாங்கன்னு சொல்றேன்…!” மீனாவின் குரல் எதிர்பார்ப்புடன் வந்தது.

“மீனா … நான் வீட்டுக்குப் போய்தானே ஷேவ் பண்ண முடியும்…!” சீனு பம்மினான்.

போச்சுடா!. இன்னைக்கே எங்கப்பா மாதிரி மீசையை எடுடாங்கறா! அந்தாளு வயசு என்னா? என் வயசு என்னா? ஆம்பளை தாடியில்லாம இருக்கலாம். மீசையில்லாம என்னை மாதிரி ஒரு தமிழ் குடிமகன் இருக்க முடியுமா? மீசையை எடுத்துட்டு எப்படி ஆஃபீசுக்கு போறது? அங்க இருக்கற ஆண்டிங்கள்ளாம் என்னைப் பாத்து வழிச்சிக்கிட்டு சிரிப்பாளுங்களே?!

“ம்ம்ம்…”

“என்னா ம்ம்ம்ம்…ங்கறீங்க?”

“மீனா ரேசர் வேணுமே?”

“உங்க உயிர்
“நண்பேண்டா” கிட்ட ஒரு ரேசர் கடன் கேக்கறது?”

“ம்ம்ம்..”

“என் ஆசையை நான் சொல்லிட்டேன் … அப்புறம் உங்க இஷ்டம்…! நான் சொன்னபடி வந்தா சூடா காஃபி கிடைக்கும்… வந்து சேருங்க நேரத்துக்கு…!” சீனு பதில் சொல்வதற்கு முன் லைன் கட் ஆகியிருந்தது.

“நீங்கங்கறா… வாங்கங்கறா…போங்கங்கறா!” ஒரே ராத்திரியில, மீனா எனக்கு ஒரு
“லைக்” போட்டு, என் ஸ்டேட்டஸையே இந்த வீட்டுல தலை கீழா மாத்திட்டா! எனக்கு குடுக்கற மரியாதையையும் தாறுமாறா ஏத்திட்டா! இது வரைக்கும் ஓ.கே. தான். சீனுவின் மனம் துள்ளியது. ஆனா கூடவே அழும்பு வேற பண்றாளே?

மீசையை எடுடா; தாடியை வழிடா; இதெல்லாம் ஒரே நச்சால்ல இருக்கு!? இது என் ஆசைன்னு, கிடைக்கற கேப்புல கெடா வெட்டறாளே? நம்ம பசங்க என்னடான்னா
“மச்சான் உனக்கு இந்த தாடி நல்லாருக்குடான்னு” நேத்துதான் தண்ணி உற்சவம் நடத்தும் போது ஒத்து ஊதினானுங்க! கட்டிங்கைத்தான் இவ மொத்தமா கட் பண்ணிட்டாளே? நான் இப்ப எந்த பக்கம் போறது? சீனு தன் தலையை சொறிந்துகொண்டு நின்றான்.

நடராஜன், அன்று, நிதானமாக தனது காலை
“வாக்கிங்கை” முடித்துக்கொண்டு, புத்துணர்வு நிறைந்த மனதுடன், வீட்டுக்குள் நுழைந்த போது, என்றுமில்லாத திருநாளாக, மல்லிகா வெரண்டா படியில், கையில் ஹிண்டுவுடன் உட்க்கார்ந்திருந்தாள்.

“குட்மார்னிங் மல்லி..”

“குட்மார்னிங் …” மல்லிகா கணவனை நோக்கி மென்மையாக புன்முறுவல் செய்தாள்.

“பசங்கல்லாம் எழுந்தாச்சா..?”

“இப்படி பக்கத்துல செத்த உக்காருங்களேன் …” மல்லிகா தன் கணவனின் கையைப் பிடித்து இழுத்தாள்.

மனைவியின் பக்கத்தில் உட்க்கார்ந்தவர், மல்லிகாவை தன் ஓரக்கண்ணால் அன்றுதான் புதிதாகப் பார்ப்பது போல் பார்த்தார். சும்மா சொல்லக்கூடாது… மல்லிகா இன்னும் இளமையாத்தான் இருக்கா.. இவ பக்கத்துல சுகன்யா நின்னா, அக்காத் தங்கைன்னுதான் சொல்லுவங்கா. தான் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்து, வீட்டின் உள்ளேயும் வெளியேயும் ஒரு முறை தலையை திருப்பியவர், சட்டென மல்லிகாவின் கன்னத்தில் அவசர அவசரமாக ஒரு முத்தத்தைப் பதித்தார்.

“கிட்ட வான்னா போதும்! … அடுத்த செகண்ட் … கிழவன் நீங்க துள்ளி குதிக்க ஆரம்பிச்சிடுவீங்களே? மல்லிகா தன் முகம் சிவக்கப் பேசினாள்.

“என் கெழவிக்குத்தானே குடுத்தேன் …”

“நேரம்…காலம் …எடம் எதுவும் கிடையாதா?”