கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 25 6

“இருபத்தாறு வருஷமா உன் பெத்தவ கையால தின்னதுல்லாம் மறந்து போச்சா? உனக்கு சுத்தமா நன்றியே இல்லடா… நீயெல்லாம் ஒரு புள்ளையாடா? உன்னைப் பெத்தவ தன் வயித்துல பெரண்டையை வெச்சுத்தான் கட்டிக்கணும்…” மனசு அவனை காறித் துப்பியது.

“அது வேற இது வேற… கஷ்டமான கேள்வில்லாம் நீ என்னை கேக்கக்கூடாது!” மனதிடம் வெள்ளைக் கொடி காட்டினான் சீனு..

மீனா, மூன்று கோப்பைகளில் ஆவி பறக்கும் காஃபியை கொண்டு வந்து அவர்களிடம் நீட்டினாள். தன் கப்பை எடுத்துக்கொண்டு, சீனுவின் பக்கத்தில் இயல்பாக உட்காருவது போல் உட்க்கார்ந்தாள். சீனுவின் பல்ஸ் வேகமாக எகிறியது. பக்கத்தில் உட்க்கார்ந்தவள், தன் கண்களால் காஃபியை குடியேன்! ஏன் பயந்து சாகறே? இதுக்கு முன்னாடி நான் உன் பக்கத்துல உக்கார்ந்ததே இல்லையா? அவள் கண்களில் கேலி கூத்தாடிக்கொண்டிருந்தது.
“சீனு, ஒரு டெம்போ டிராவலர் ரெண்டு நாளைக்கு வாடகைக்கு வேணும்… உனக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?”

“ம்ம்ம்… எத்தனை பேரு ட்ராவல் பண்ணணும்?” சீனு அவரைப் பார்த்தான்…

“நம்ம வீட்டுல உன்னையும் சேத்து அஞ்சு பேரு… அப்புறம் என் தம்பி, அவன் ஒய்ஃப், மல்லிகா சைடுல ரெண்டு பேரு .. செல்வாவோட கசின்ஸ் ஒரு ரெண்டு, மூணு பேரு … மொத்தத்துல ஒரு பத்து… பன்னண்டு பேருன்னு வெச்சிக்கியேன்” நடராஜன் நிதானமாக பேசினார்.

“எங்கப்பா போறோம் …?”

மீனாவுக்கு குஷி கிளம்பியது. சீனு ஒதுங்கி ஒதுங்கி உக்கார்றான்… அவனை கொஞ்சம் சீண்டலாமா? அவள் புடவை முந்தானை ஓரம் சீனுவின் வலது கையை உரசிக்கொண்டிருந்தது. அவள் உடலிலிருந்து, அவளுடைய சுகந்தமும், சந்திரிகாவும் ஏக வாசனையை கிளப்பிக்கொண்டிருந்தார்கள். சீனுவுக்கு தன் நிலை கொள்ளவில்லை. இந்த பக்கம் மீனா, அந்தப்பக்கம் நைட்டியில மீனாவோட அம்மா மல்லிகா… அவனால் அசைய முடியவில்லை.

அம்மா என்னடா? இன்னும் அம்மா…! அவங்க நேத்து வரைக்கும் உனக்கும் அம்மா! இப்ப மாமியார்ன்னு சொல்லுடா! சீனுவின் மனம் உரக்க கூவ, தன் மூச்சைப் பிடித்துக்கொண்டு இருவரையும் இடித்துவிடாமல், அவன் கல்லைப் போல் உட்க்கார்ந்திருந்தான். மீனா அவன் இடுப்பில் தன் இடது முழங்கையால் குத்தினாள். பேசாம இருடி! மீனா இதெல்லாம் இப்ப வேணாம் .. ப்ளீஸ்… அவன் கண்களால் அவளைக் கெஞ்சினான்

“ராத்திரி, சுகன்யாவோட மாமா போன் பண்ணியிருந்தார்… நிச்சயதார்த்தம், கல்யாணத்தோட வெச்சுக்கலாம்ன்னு நான் சொன்னதால, வர்ற வெள்ளிக்கிழமை, நாள் நல்லாருக்கு… நீங்களும் நம்ம வீட்டை வந்து பாத்த மாதிரி இருக்கும்; சின்னதா ஒரு பங்ஷன் வெச்சு, தாம்பூலம் மாத்திக்கலாம்ன்னு சொன்னார்; நானும் சரின்னுட்டேன்; வியாழக்கிழமை காலையில டிஃபன் சாப்பிட்டுட்டு கிளம்பினா, சாயந்திரத்துகுள்ள கும்பகோணம் போயிடலாம். மறு நாள் போன வேலை முடிஞ்சா … ராத்திரிக்கு கிளம்பிட வேண்டியதுதான். மல்லிகா நீ என்ன சொல்றே?

“ட்ரெயின் டிக்கட் கிடைக்காதா? உடம்பு அலுப்பு இல்லாம போய் வந்துடலாமே? மல்லிகா தன் கணவனைப் பார்த்தாள்.

“நடுவுல ஒரு நாள்தான் இருக்கு! பத்து …பதினைஞ்சு டிக்கட் ஒண்ணா கிடைக்குமா? எல்லோருக்கும் ரெண்டு நாளைக்குத் துணிமணி எடுத்துக்கிட்டு போகணும்… அதுக்கு மேல தேங்காய் பழம் … ஸ்வீட்ஸ்ன்னு, மத்த பொருள்கள் வேற இருக்கு….”நடராஜன் இழுத்தார். சீனு எதுவும் பேசாமல் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்னடா சொல்றே சீனு?” செல்வா எழுந்து நடந்துகொண்டே கேட்டான்.

“ட்ராவலர் ஆப்ஷன் பெஸ்ட்ன்னு தோணுது எனக்கு… ஈஸியா, சேஃபா, 15 பேர் போவலாம்… பிளஸ் ஒரு டிரைவர் … ஒருத்தர் தீடீர்ன்னு வரேன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு ஏத்திக்கலாம். யாரும் வர்றலேன்னா பின்னாடி காலி சீட்டுல லக்கேஜ் அடுக்கிடலாம். நெனைச்ச எடத்துல நிறுத்தி, நம்ம சவுகரியப்படி காபி, டீ, சாப்பிட்டுக்கிட்டு, ட்ராவல் பண்ணல்லாம். நம்மப் பையன் ஒருத்தன் ட்ராவல்ஸ் நடத்தறான். இப்ப போன்ல சொன்னா வண்டியை அனுப்ச்சிடுவான்…” சீனு நடராஜன் சொன்னதையே ஆமோதித்தான்.

“சரிப்பா.. சீனு நீ அட்வான்ஸ் கொடுத்துடுப்பா … நல்ல ஏ.ஸி. வண்டியாப் பாரு! அம்பது நூறு அதிகமானலும் பரவாயில்லே! பணம் எவ்வள குடுக்க? நடராஜன் எழுந்தார்.

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன்..! அப்புறம் நீங்க மொத்தமா குடுங்க…” சீனுவும் எழுந்தான்.

சீனு எழுந்த போது மீனா தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அவன் இடுப்பில் இலேசாக குத்தினாள். ஆடுடி நீ! இப்ப எவ்ள முடியுமோ அவ்வள ஆட்டம் ஆடி முடிச்சிடு! மாமன் கிட்ட தனியா மாட்டுவேடி … அப்ப வெச்சிக்கறேன் உனக்கு கச்சேரியை… எழுந்து நின்ற சீனு தன் கண்களால் மீனாவை முறைத்தான். முறைத்தான் என்று நினைத்தானே தவிர, அவன் பார்வையில் ஒரு வித கெஞ்சல்தான் இருந்தது.

“மல்லிகா .. அப்ப நீ சீக்கிரமா குளிச்சிட்டு ரெடியாவு… மீனாவும், நீயுமா போய், சுகன்யாவுக்கு சிம்பிளா ஒரு பட்டுப் புடவையும் …செயினும் வாங்கிட்டு வந்திடுங்க… நிச்சயதார்த்தப் புடவை நாம தானே எடுக்கணும்? அப்ப அவளையும் கூப்பிட்டுகிட்டு போய் அவளுக்கு பிடிச்ச மாதிரி கிரேண்டா வாங்கிடலாம். நான் ஆபீஸ் போய் லீவு அப்ளை பண்ணிட்டு சாவியெல்லாம் குடுத்துட்டு, ஒரு ரெண்டு மணிக்குள்ள திரும்பி வந்துடறேன்.