கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 25 6

“சும்மா இருடி … இந்தாண்டை … அந்தாண்டை பாத்துட்டுத்தான் குடுத்தேன்..”

“இந்த ஜம்பத்துக்கெல்லாம் ஒண்ணும் கொறைச்சல் இல்லே?” மல்லிகா தன் முகத்தைச் சுளித்தாள்.

“ரோடுல நடந்து போவும் போதே பசங்க ஒண்ணுக்கு ஒண்ணு முத்தம் குடுத்துக்குதுங்க… நீ என்னமோ வீட்டுக்குள்ளே உக்காந்துகிட்டு அல்ட்டிக்கிறே?” நடராஜன் தன் மனைவியின் தோளில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டார்.

“ஆமாம்! உங்க மஹாகவிகள்ல்லாம்…பொம்பளை ஒடம்பையும், யானை… அங்குசத்தையும் தவிர வேற எதைப்பத்தியும் எழுதலியா? இல்லே..! அதெல்லாம் நீங்க படிக்கறது இல்லையா? மல்லிகா கண்களில் குறும்புடன் வினவினாள்.

“நெறைய விஷயத்தைப் பத்தி எழுதியிருக்காங்களே? ஏன்?”

“இல்லே .. லீவு நாள்லே, கொஞ்சம் கையை காலை ஆட்டி … காலையில காப்பீ … டீன்னு … பொண்டாட்டிக்கு போட்டுக் குடுக்கறதைப் பத்தி அவங்க எழுதலையான்னு கேக்கிறேன்…!

“நேரா சொல்லேன் … காஃபி வேணும்ன்னு… எதுக்காக சுத்தி வளைக்கிறே?”

“ஒரு நாளைக்கு நீங்க எனக்கு காப்பி போட்டுக்குடுத்தா கொறைஞ்சா போயிடுவீங்க…?”

“அம்மா .. ஏம்மா அப்பாவை தொந்தரவு பண்றே … நான் ஏற்கனவே காஃபியை போட்டாச்சு! இந்தா புடி உன் காஃபியை…” மீனா குளித்திருந்தாள். தலையிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது.

“தேங்க்ஸ்ம்ம்மா … நீதான் என் செல்லப் பொண்ணாச்சே!…” நடராஜன் மனம் குதூகலித்தது.

“மீனா நீ முதல்ல உன் தலையை துவட்டுடி! அப்புறம் நாள் பூரா தும்மி தும்மியே, தலை வலிக்குதுன்னு என் உயிரை எடுப்பே” மல்லிகா அவளை வாயால் அதட்டிய போதிலும், மனதுக்குள் தன் பெண்ணின் பொறுப்பை நினைத்து பெருமிதம் பொங்க தன் கணவனைப் பார்த்தாள்.
“டேய் … சீனு… நீ எப்படா வந்தே? மல்லிகா மாடியிலிருந்து மெதுவாக கீழிறங்கி வந்து கொண்டிருந்த சீனுவைப் பார்த்தவள் ஆச்சரியத்துடன் வினவினாள். செல்வாவும் அவன் பின் இறங்கி வந்துகொண்டிருந்தான்.

“நேத்து ராத்திரி பத்துமணிக்கு மேல ஆயிடுச்சி… வாழைக்காய் பஜ்ஜி மீனா கொடுத்தா… சூப்பரா இருந்தது…” சீனுவும் மல்லிகாவின் பக்கத்தில் வெராண்டா படிக்கட்டில் உட்க்கார்ந்து கொண்டான்.

“உனக்குத்தாண்டா போன் பண்ணி வரச்சொல்லணும்ன்னு நெனைச்சிக்கிட்டிருந்தேன்… நீயே வந்துட்டே?” நடராஜன் சீனுவை நோக்கி புன்முறுவல் செய்தார்.

“ஏண்டா … இது என்னடா கோலம்? கூத்துல வேஷம் கீஷம் கட்டப்போறியா என்னா? தாடி மீசை எல்லாத்தையும் வழிச்சிக்கிட்டு வந்து நிக்கறே? மல்லிகா சிரிக்க ஆரம்பித்தாள்.

“இப்பத்தான் பாக்கறதுக்கு டீசண்டா இருக்கான்…” நடராஜன் சான்றிதழ் கொடுத்தார். செல்வா ஒரு சேரை இழுத்துப் போட்டு தன் தந்தையின் பக்கத்தில் உட்க்கார்ந்து கொண்டான்.

“என்ன விஷயம் சொல்லுங்கப்பா…” சீனு நடராஜனை நோக்கினான்.

“மீனா இவங்களுக்கும் ஒரு கப் காஃபியை குடேன்ம்மா?”

மீனா சீனுவைப் திரும்பிப்பார்த்தாள். கூர்மையான மூக்கு, எத்தனை முறை பின்னால் தள்ளிவிட்டாலும், நெற்றியில் திரும்ப திரும்ப வந்து விழும் தலைமுடி. சீனு சுத்தமாக ஷேவ் செய்து இருந்தான். நான் சொன்னதை கேட்டு தில்லுமுல்லு படத்துல வர்ற
“ராகங்கள் பதினாறு உருவான வரலாறு” பாடும் ரஜினியை மாதிரி வந்திருக்கறவனுக்கு தன் தரப்புல இருந்து என்ன கொடுக்கலாம்? மீனா தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.

மீனா அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். தோட்டத்தில் சற்றே குனிந்து நின்று, வெகு லாகவமாக துண்டால்,
“பட் பட்” என சத்தம் வர தன் தலை முடியை ஓங்கி தட்டி தட்டி, அதன் ஈரத்தை உலரவைத்துக் கொண்டிருந்தாள். அவள் காதில் அணிந்திருந்த மெல்லிய ஜிமிக்கி அவள் உடல் அசைவுகளுக்கு ஏற்றவாறு அசைந்து கொண்டிருந்தது.

ஜிமிக்கியில் புதைக்கப்பட்டிருந்த சிறிய வெண்மையான கற்களில், காலை வெயிலின் ஓளிக்கற்றைகள் பட்டு, வர்ண ஜாலம் காட்டிக்கொண்டிருந்தது. அவள் காலில் போட்டிருந்த வெள்ளி கொலுசு
“ஜல் ஜல்” எனக் கொஞ்சின. அவள் கழுத்தில் போட்டிருந்த வெள்ளை முத்து மாலை அசைந்து, அவள் மார்பை அவ்வப்போது தொட்டு தொட்டு விலகிக்கொண்டிருந்தது. அவள் கையும் காலும் ஒரு வித தாள கதியுடன் உடல் அசைவுக்கு ஏற்றவாறு அசைந்து கொண்டிருந்தன.

மீனா, வெள்ளையில் நீலப் பூக்கள் இறைந்திருந்த, காட்டன் புடவை ஒன்றை லூசாக தன் உடலில் சுற்றியிருந்தாள். அவள் புடவையின் ஒரு நுனியை இடுப்பில் தூக்கி செருகியிருக்க, இடது காலின் வெண்மையும், இலேசாக பளிச்சிட்ட அவள் தொப்புள் குழியும், ஓரக்கண்ணால் அவளைப் பார்த்த சீனுவின் இதயத்தை ஒரு நொடி நிறுத்தின. அவன் இதயம் ஒரு முறை நின்று மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. விருந்து கொடுக்கற மாதிரில்ல இருக்கு இவ ட்ரஸ்…? சீனு தன் தலையை தாழ்த்திக்கொண்டான்.