கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 25 6

“நம்ப வீட்டுக்கே அவ இன்னும் வரலை; அதுக்குள்ள ரொம்பத்தான் அவளை தலை மேல தூக்கி வெச்சிக்கிறீங்க!? மல்லிகா மெல்ல முனகினாள்.

“நம்ம வீட்டுக்கு வர்ற குழந்தை … சந்தோஷமா வரட்டுமே?” நடராஜன் தன் தோள் துண்டை உதறினார்.

“உன் கை பிளாஸ்டர் இன்னைக்கு பிரிக்கணும்டா… ஞாபகமிருக்கா? சீனு செல்வாவை கேட்டான்.

“என்னங்க … நாங்க காரை எடுத்துக்கிட்டு போறோம் … சீனு இவனை ஹாஸ்பெட்டல்லா டிராப் பண்ணிட்டு … எங்களை டி.நகருக்கு கூட்டிக்கிட்டு போகட்டும். செல்வா கட்டு பிரிச்சதும் அவன் பாட்டுல அவன் ஆட்டோவில வீட்டுக்கு வந்திடட்டும்.. அவன் வந்ததுக்கு அப்புறமா, நீங்க இன்னைக்கு பஸ்ல ஆஃபீஸுக்கு போயிட்டு வந்துடுங்களேன்! மல்லிகா தன் திட்டத்தை சொல்லிக்கொண்டே மெல்ல வீட்டுக்குள் நுழைந்தாள்.

“சீனு ஆஃபீஸ் போக வேண்டாமா? அவனை ஏண்டி நீங்க உங்க கூட இழுக்கறீங்க? நீங்களும் ஆட்டோவுல போங்களேன் ஒரு நாளைக்கு?அவனுக்குத்தான் நான் ஒரு வேலை குடுத்து இருக்கேனே?…” நடராஜன் முனகினார்.

“அப்பா நீங்க சொல்லிட்டீங்கள்ல்ல… அதோட விடுங்க… சீனு அவர் ஆஃபிஸ்ல எதாவது தில்லு முல்லு பண்ணி அட்டெண்டன்ஸ் போட்டுடுவாரு..! என்ன சீனு நான் சொல்றது சரிதானே? மீனா அவனை கண்ணடித்து வம்புக்கு இழுத்தாள். சீனு தஞ்சாவூர் பொம்மையைப் போல தலையாட்டினான்.

“சரி சரி .. உங்க பாடு; அவன் பாடு; ஏதாவது பண்ணுங்க … சீக்கிரமா பர்சேஸை முடிச்சிக்கிட்டு வந்து சேருங்க..” நடராஜன் எழுந்து குளிப்பதற்கு விரைந்தார்.

மாப்ளே கார் சாவி எடுத்துக்கிட்டு வரேன்.. நீ உன் வீட்டுக்குப் போயிட்டு ஜல்தியா வந்துடு … செல்வாவும் தன் தந்தையின் பின்னாலேயே வீட்டுக்குள் நடந்தான்.

“நம்ம வீட்டுல உன்னையும் சேத்து அஞ்சு பேரு…” ன்னு கொஞ்ச முன்னாடி அப்பா சொன்னாரே; அதை நீங்க கவனிச்சீங்களா? அதுக்கு என்ன அர்த்தம்? அவர்கள் மூவரும் உள்ளே சென்றதும், மீனா சீனுவை மெதுவாக நெருங்கினாள். அவள் அணிந்திருந்த வெள்ளி கொலுசின் ஒலி, அவன் காதுகளில் ஒரு கவிதையாக ஒலித்தாலும், சீனுவின் இதயத் துடிப்பை அது ஒரு நொடி நிறுத்தியது.

“தக தஜணு தஜணு ததிமி ததிமி தக தித் தாம் தகதாம் தரிகிட தாம்
தத்த ரீத்தா ஜணு தகதா ரீத்த ஜணு தத்த தீம் தகத தீம் தஜம் தஜம்”

“மீனா என் கிட்ட விளையாடாதே? எனக்கு மனசுக்குள்ள திக் திக்குன்னு இருக்கு… நம்ம விஷயம் உங்க அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு… நான் பயந்துகிட்டு இருக்கேன்..