உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 1 250

மைதிலியை வீட்டில் விட்ட பின், என் வீட்டிற்க்குப் போக பிடிக்கவில்லை! நான் மீண்டும் கோடம்பாக்கம் வீட்டுக்கே வந்தேன்! நான் நிறைய யோசிக்க வேண்டும்! அதற்கு தனிமை தேவை!

முதலில் கன்னா பின்னாவென்று கோபம் வந்தது! வந்த கோபத்தில் இருவரையும் கொன்றுவிடத் தோன்றியது! ஆனால், கோபத்தில் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது என்றுதான் கட்டுப்படுத்திக் கொண்டேன்!

யோசிக்க யோசிக்க இன்னொன்றும் தோன்றியது! அவர்களைக் கொன்றால், அவர்களை விட எனக்குதான் தண்டனை. அவர்கள் ஏன், என்று தெரியாமலே இறந்து விடுவார்கள்! வீணாக எனக்கு கெட்ட பெயர்! என் பெற்றோருக்கு கெட்ட பெயர்! என் தங்கை என்ன செய்வாள்? கல்யாணம் ஆனதிலிருந்தே, ஏமாற்றங்களை சந்தித்துக் கொண்டு, இப்பொழுது இவ்வளவு பெரிய துரோகத்தை சந்தித்து, இன்னும் எதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்? கூடாது! இனியும் தண்டனை கூடாது!

தீர்வு கிடைக்கா விட்டாலும், அவர்களைக் கொல்லக் கூடாது என்று எடுத்த முடிவு மனதை மெல்ல, ஆசுவாசப்படுத்தியது! கண் மூடி சாய்ந்தேன்!

நினைவுகள், இன்னும் முன்னோக்கிச் சென்றன!

ஊரில் ஓரளவு வசதியானக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். நாந்தான் மூத்தவன். ஒரு தங்கை. அவள் பெயர் லாவண்யா! (ஆமாங்க, மைதிலி என் கூடப் பொறந்த தங்கச்சி கிடையாது!). அப்பாவுக்கு ஊரில் ஓரளவு செல்வாக்கு உண்டு! அம்மா மிக அன்பு, அமைதி! எவ்வளவு காசு இருந்தாலும், ஒழுக்கம் முக்கியம் என்று சொல்லி வளர்த்த பெற்றோர், படிப்பின் தேவையையும் சொல்லியிருந்தனர்! எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, ஊரின் சொந்த பந்தங்கள் மத்தியில் கூட நாந்தான் முதல் பட்டதாரி! அதுவும் இஞ்சினியர், அண்ணா யுனிவர்சிட்டியில்! +2 வில் மாவட்டத்திலேயே முதலிடம்! ஸ்டேட் ரேங்கிங்கிள் முதல் 25 இடத்திற்குள்!

படிப்பு மட்டுமல்ல, என்னுடைய பண்புகளும், அப்பாவின் மீதான மரியாதையும், மற்ற படிக்கிறவர்களுக்கு வழிகாட்டியாய் இருப்பதாலும், எல்லாருக்கும் என் மேல் பாசம், மரியாதை! அதுவும், படிப்பு முடித்து, நல்ல சம்பளத்தில் வேலையில் அமர்ந்து, அப்பொழுது போஸ்ட் கிராஜூவேஷன் மேனேஜ்மெண்ட் முடித்து, அமெரிக்காவில் 8 வருடங்கள் இருந்து வந்தாலும், அப்படியே பண்பு மாறாமல் இருப்பது அனைவருக்கும் என் மேல் இருந்த பாசத்தையும், மரியாதையையும், அதிகப்படுத்தியது!

5 வருடம் முன்பு நடந்த எனது திருமணம், இதில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், என் மேல் இருக்கும் பாசம் காரணமாக, யாரும் அதை வெளிக்காட்டியதில்லை!

எங்களுடையது, பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம்! 5 வருடம் முன்பு, அப்பொழுதுதான் கல்லூரியை முடித்திருந்த ப்ரியாவின் ஜாதகம் வந்திருந்தது! பெண்ணின் அப்பா, நல்லவர், சாது என்று கேள்விப்பட்டதால், அப்பாவிற்கு ஓகே! மிடில் கிளாஸ்! வசதியில் எங்கள் அளவு இல்லை என்றாலும், எங்களுக்கு காசு முக்கியமில்லை என்பதால் அப்பா அதனை கண்டு கொள்ளவில்லை! சொல்லப்போனால், கொஞ்சம் வசதிகுறைந்து இருந்தால், நம்மிடம் இன்னும் ஒட்டிக் கொள்ளுவாள். பக்குவம் இருக்கும் என்று தப்புக் கணக்கு போட்டிருந்தார்!

நான் யாரையும் காதலித்திருக்கவில்லை! பெற்றோரின் முடிவு போதும் என்று ஃபோட்டோவில் பெண் அழகாயிருந்தவுடன், சம்மதம் சொல்லிவிட்டேன்! அன்று ஆரம்பித்தது என் பிரச்சினை!

உண்மையாலுமே ப்ரியா அப்பா நல்லவர்தான், சாதுதான். ஆனால், பிரச்சினை ப்ரியாவின் அம்மாவும், ப்ரியாவும்! இருவருக்கும் ஒரே குணம்! சுயநலம், பிடிவாதம், அகங்காரம் இப்படி பல! ஆனால், எதுவும் ஆர்ப்பாட்டமாக இருக்காது! பார்த்தால் அமைதியாக இருப்பது போல் இருந்தாலும், சமயங்களில் அதனை வெளிப்படுத்துவர்!

கல்யாணத்தின் போதே, அப்பாவிடம், தூரத்து சொந்தம் ஒருவர் சொல்லியிருந்தார்! தப்பு பண்ணிட்டீங்களே பங்காளி, அப்பாவை பத்தி விசாரிச்சீங்களே?! பொண்ணைப் பத்தியும், அம்மாவைப் பத்தியும் விசாரிச்சிங்களா? இந்தக் குடும்பம்னு எனக்குத் தெரிஞ்சிருந்தா, நான் விட்டிருக்கவே மாட்டேன்! நம்ம பையனுக்கு இந்தக் குடும்பத்துல இருந்து பொண்ணா?! மனசு தாங்கலை, அதான் உங்ககிட்ட கொட்டிட்டேன்! இனி உங்க குடும்ப மருமக. பாத்து ஆரம்பத்துலியே இறுக்கிப் புடிங்க!

அப்பொழுதிலிருந்தே அப்பாவிற்கு மனசு சரியில்லை. தானே, தன் பையனுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கவில்லையோ என்று ரொம்ப உள்ளுக்குள் மறுகிக்கொண்டாலும், என்னிடம் கொண்டு வரவில்லை! என் தங்கைதான், அப்பாவின் வேதனையை பார்க்க முடியாமல், என்னிடம் சொல்லிவிட்டாள்!

2 Comments

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அந்த
    நாய்கள் வச்சு செய்யனும்

  2. Raji un msg waiting maa

Comments are closed.