உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 1 250

காரில் ஏறி உட்கார்ந்து கண்ணை மூடினேன். இரண்டு நிமிடத்திற்குள், யாரோ காரில் ஏறி அமர்ந்தார்கள்.

போட்டிருந்த செண்ட் வாசனையும், அதையும் மீறி தெரியும், அவளுக்கே உரிய உடல் வாசமும், துணிகளின் சர சர ஓசையும், கண்ணைத் திறக்காமலே சொல்லியது, அது மைதிலிதான் என்று!

கண் திறந்து பார்த்தவனை வரவேற்றது, அவளது புன்னகை முகம்!

நான் திட்டுவேனோ என்பதனால், கொஞ்சம் முகம் கழுவி வந்திருப்பாள். இல்லாவிடின், இன்னும் சுமாராகவும், கொஞ்சம் வயசானவளாகவும்தான் காட்டிக் கொள்வாள்.

ஹாலோ, உங்களுக்காக இவ்ளோ சீக்கிரம் வந்திருக்கேன். ஒரு தாங்க்ஸ் கூட கிடையாதா? என்னிடம் மட்டும், அவளை மீறி எப்போதாவது வெளிப்படும் சின்னக் குறும்பு, அப்பொழுது வெளிபட்டது!

ஏய் வாலு! அப்ப பொய்தான் சொன்னியா என்று கேட்டவனைப் பார்த்து,
நான் வாலா, என்று மிக மிக மெல்லியதாக சிணுங்கினாள்.

எனக்குத் தெரியும், அவளை வாலு என்று சொன்னால், அவளுக்குப் பிடிக்கும் என்று. எவ்வளவுதான் முகமூடி போட்டுக் கொண்டாலும், என்னிடம் மட்டும் சில சமயம் அவளுடைய குழந்தைத் தனங்களை, அவளையும் மீறி வெளிப்படுத்தி விடுவாள்!

சரி சொல்லு, எப்புடி இவ்ளோ சீக்கிரம் வந்த?

நீங்க கால் பண்ணவுடனே, பார்க்கிங்ல இருக்கேன்னு சொன்னீங்க இல்ல! அப்ப, பேசப் பேசவே எல்லாத்தையும் ரெடி பண்ணி காருக்கு வர ஆரம்பிச்சிட்டேன். எல்லாமே ரெடியா இருந்துது. பர்மிஷன்லாம் ஏற்கனவே வாங்கி வெச்சிருந்தேன். சும்மா உங்ககிட்ட விளையாடலாம்னு சொன்னது, 30 நிமிஷ வேலைன்னு!

ம்க்கும், எவ்ளோ கஷ்டப்பட்டு, யார் யார் கால்லியோ விழுந்து, எக்ஸ்பீரியன்ஸ்ல லாங் கேப் இருந்தாலும் பரவால்லைன்னு ஒத்துக்க வெச்சு, நான் இருக்குற டெக் பார்க்லியே இன்னொரு கம்பெனில வேலை வாங்கிக் கொடுத்து, அதுக்கு ட்ரீட் கூட இதுவரைக்கும் கேக்காம, இன்னிக்குதான் ஒரு சின்ன ஹெல்ப் கேட்டா, என்னையே ஒட்டுற? எல்லாம் நேரம், என்று மூச்சு விடாமல் பேசிய என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் மைதிலி!

உங்களுக்கு பாட்டு பாடத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும். அதுனால, மூச்சு உடாம பாடுற பாட்டுக்கு பதிலா, பேசி ப்ராக்டீஸ் பண்றீங்களா அண்ணா என்றாள் சிரித்துக் கொண்டே!

இந்த மைதிலி எனக்கே கொஞ்சம் புதிதுதான்! என்னதான் அவளை மீறி அவளது சிணுங்கல்களை, குழந்தைத்தனங்களை கடந்த 6 மாதங்களில் அவ்வப்போது வெளிப்படுத்தினாலும், மிக உடனடியாக அவளது கூட்டுக்குள் சுருண்டு விடுவாள். ஆனால், இன்று தொடர்ந்து என்னிடம் வம்பிழுக்கிராள்! அதுவும் எனக்கு பாட்டு பாட வராது என்று!

நான் மிக நன்றாகப் பாடுவதும், என் பாடல்கள் அவளுக்கு மிகப் பிடிக்கும் என்பதும் எனக்குத் தெரியும். எனக்குத் தெரியுமென்பது, அவளுக்கும் தெரிந்திருந்தும் வம்பிழுக்கிறாள்!

என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கிறா? வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடத்திற்குள் ப்ரமோஷனா?

2 Comments

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அந்த
    நாய்கள் வச்சு செய்யனும்

  2. Raji un msg waiting maa

Comments are closed.