உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 1 250

அதன் பின் ப்ரியாவின் ஆட்டம்தான்! வெளிப்படையாக பெரிதாக இருக்காது, ஆனால், வீட்டுக்கு வந்தவர்களை கண்டு கொள்ளாதது, ஏன், மாமனார் மாமியாரையே கண்டு கொள்ளாதது, தான் இஞ்சினியரிங் படித்ததால் மற்றவர்களை முட்டாள்கள் என நினைப்பது (இத்தனைக்கும் பேமெண்ட் சீட்டுதான்!) இப்படி பல… இத்தனைக்கும், சில நாட்களில் சென்னைக்கு எனது வேலைக்காக வந்து விட்டோம்! அவளுக்கு வேலைக்கும், எனது கம்பெனியிலியே, நான் வாங்கிக் கொடுத்த பின் ஆட்டம் இன்னும் அதிகமாகியது! இவள் செயல்களால், அப்பாவின் வேதனை அதிகமாகும் என்று உணர்ந்ததால், உடனடியாக் கிடைத்த அடுத்த ஆன்சைட் ப்ராஜக்டில், அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

நான் எப்படி புத்திசாலித்தனமாக செயல்பட்டாலும், என்னை புரிந்திருந்த என் பெற்றோர், என் செயலுக்கான காரணத்தை தெரிந்திருந்தாலும் என்னிடம் காட்டிக் கொண்டதில்லை. அவர்கள் மட்டுமல்ல, என் தங்கை, இரண்டு வருடங்களுக்கு முன்பு என் தங்கையை மணந்திருந்த என் தங்கை கணவர் கூட என் மேல் அன்பும் மரியாதையை வைத்திருந்தார். என்னைப் புரிந்து கொண்டார். அவர்களை ஏமாற்றி விட்டதாக நினைத்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்! ஆனால், எல்லாவற்றையும் விட பெரிதாக ப்ரியா இப்பொழுது ஏமாற்றியிருக்கிறாள்!

5 வருடங்களாக தொடர்ந்த எனது முயற்சியினாலும், அன்பினாலும், கொஞ்சம் கொஞ்சமாக அவளை மாற்றியிருந்தாலும், அவள் முழுதும் மாறவில்லை என்பதை அவ்வப்போது நிரூபிப்பாள்! இருந்தாலும் அவளை சகித்துக் கொள்ளும் முக்கியக் காரணம், கட்டிய மனைவியை எப்பொழுதும் கை விடக் கூடாது என்ற பயிற்றுவிக்கப்பட்ட ஒழுக்கமும், எனது பெற்றோர் தங்களால்தான் தன் மகனுக்கு என்று வேதனைப்படுவார்களே என்ற உண்மையும்தான்…

ஆரம்பத்திலிருந்தே அன்பால் திருத்த நினைத்ததன் பலனைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறேன். அப்பொழுதே அடித்திருந்தால், இன்று இந்த நிலைமை இல்லை!

இப்படி என் நினைவுகளுடன், என்னையும் அறியாமல் தூங்கியவன், அடுத்த நாள் காலையில் எழுந்த பொழுது, முழுதும் இல்லாவிட்டாலும், ஓரளவு என்ன செய்ய வேண்டும் என்று முடிவாகியிருந்தது! அதற்க்கான ஏற்பாடுகளைத்தான் இந்த இரண்டு நாட்களாக செய்துவிட்டு, மைதிலியைச் சந்திக்கிறேன்!

என் நினைவுகளை கலைத்தது மைதிலியின் குரல்!

அண்ணா? என்னண்ணா, கேட்டதுக்கு பதிலே சொல்ல மாட்டேங்குறீங்க?

ஒன்ணுமில்லை மைதிலி, வேற ஞாபகம். என்ன கேட்ட?

எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்ண்ணா! அவள் பாசத்தில் எனக்கு சிரிப்பு வந்தது.

புன்னகையுடன், இருக்கேன் மைதிலி! நீ எப்டி இருக்க?

நானும் இருக்கேண்ணா! ஆனா…

ஆனா? ஆனா என்ன மைதிலி?

ஆனா, ஏன் உயிரோட இருக்கேன்னு இருக்குண்ணா!

அவளும்தான் எவ்வளவு வேதனையை அனுபவிப்பாள்? யாரிடம் கொட்டுவாள்? எனக்குத் தெரியும், அவள் இந்தளவு தெளிவாக இருப்பதே நான் இருக்கும் தைரியத்தால்தான்!

நாம என்ன தப்பு பன்ணோம் மைதிலி? அப்பிடி ஃபீல் பண்றதுக்கு?

——–

எனக்கும் வருத்தம், கோவம் எல்லாம் இருந்துது! ஆனா, அதுக்கு அவிங்க தகுதியானவிங்க இல்லன்னு இப்ப நல்லா புரிஞ்சிகிட்டேன்!

——–

2 Comments

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அந்த
    நாய்கள் வச்சு செய்யனும்

  2. Raji un msg waiting maa

Comments are closed.