உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 1 250

மைதிலியின் மவுனத்தை, அவள் இன்னமும், தற்கொலை ஞாபகத்தில் இருக்கிராள் எனத் தவறாகப் புரிந்த, நான், இன்னும் கடுப்பானேன்.

கோபத்தில், போ, போய் தூக்கு போட்டுட்டு சாவு. உன்னைக் கூட்டிட்டு வந்தது நான்னு நிறைய பேருக்கு தெரியும். நான், மும்பைல இருந்து சீக்கிரம் வந்ததும் உடனே தெரிஞ்சிரும். நீ தற்கொலை பன்ணதுக்கப்புறம், நாந்தான் உன்னை ஏதோ பன்ணிட்டேன், அதுனாலதான் நீ தற்கொலை பண்ணிகிட்டன்னு போலீஸ் சொல்லும். என்னையும் புடிச்சி ஜெயில்ல போட்டுடுவாங்க. அப்புறம் அவிங்க ரெண்டு பேரும், நம்மை பேரைச் சொல்லி, இன்னும் ஜாலியா இருப்பாங்க. இதான உனக்கு வேணும்? போ, போயி சாவு!

மெல்ல மைதிலிக்கும் உண்மை உறைக்க ஆரம்பித்தது. ஆதங்கத்தில் பிதற்ற ஆரம்பித்தாள்.

இல்லண்ணா, என்னால, உங்களுக்கு எந்த வருத்தமும் வர உட மாட்டேண்ணா. உங்களை ரொம்ப உசரத்துல வெச்சிருக்கேண்ணா. என்னால உங்களுக்கு சங்கடமா? நீங்க என்ன சொல்றீங்களோ அதே மாதிரி செய்யுறேண்ணா. என்னை மன்னிச்சிருங்கண்ணா.

அதிர்ச்சி, துரோகத்தின் வலி, என்னுடைய கோபம் எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வழி ஆக்கியிருந்தது. விடாமல் கண்ணீரில் பிதற்றிக் கொண்டிருந்தாள்!

பாட்டிலில் இருந்த தண்ணீரை நீட்டினேன். அவள் குடித்து மெல்ல அமைதியானாள்.
அவளது கையைப் பிடித்து, பெட்ரூமிற்க்கு அழைத்துச் சென்றேன். அவள் அமைதியாக வந்தாள்.

நீ ரொம்ப அதிர்ச்சில இருக்க, கொஞ்ச நேரம் படுத்திரு. ஒரு மணி நேரம் கழிச்சு 8 மணிக்கு கிளம்பிடலாம். எப்டியும் ப்ரேம் வர லேட் ஆகுமே என்றேன் கடுப்புடன்.

அவள், என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நீங்கதாண்ணா, ரெஸ்ட் எடுக்கனும். எனக்கு மட்டுந்தான் அதிர்ச்சியா? என்னை விட உங்களுக்குதான் வருத்தமா இருக்கும். நானும் ப்ரேமும் வாழ்ந்த வாழ்க்கையோட லட்சணம் உங்களுக்கே தெரியுமே! ஆனா, நீங்க ப்ரியா மேல எவ்ளோ பாசமா இருந்தீங்க? அப்படி இருந்தும் அவளால் எப்பிடி இப்பிடி?

—–

கவலைப்படாதீங்கண்ணா, அடுத்து நாம என்ன செய்யனும்ங்கிரதை யோசிச்சி செய்யலாம். இப்போதைக்கு எதுவும் நடக்காத மாதிரிதான் இருப்பேன். நானும் எதுவும் செஞ்சுக்க மாட்டேன்.

நீங்க படுங்கண்ணா, என்னால உங்களை, இப்பிடிப் பாக்க முடியலண்ணா! அவள் கண்ணீரில் இருந்த அன்பு என்னை மறு பேச்சு பேசாமல் படுக்க வைத்தது!

நீ என்ன பண்ணப் போற?

அப்படியே தரையில் அமர்ந்த அவள், அப்படியே கட்டில் பெட்டின் மேல் தலையை வைத்தாள். நானும், சும்மா கொஞ்ச நேரம் கண்ணை மூடி இருக்கேண்ணா. நீங்க, கொஞ்சம் தூங்குங்க ப்ளீஸ்!

அதிர்ச்சியில் கூட ஆடாத மனது, அவளது அன்பில் இலேசாக ஆட்டம் கண்டது. லேசாக என் கண்களும் கலங்கியது!

அதைப் பார்த்த மைதிலி, பதறி எழுந்து மெத்தையின் மேல் அமர்ந்து, என் கண்ணீரைத் துடைத்தாள்.

நீங்க ஏண்ணா, அழறீங்க? உங்க கண்ணீருக்கு அவ தகுதியே இல்லைண்ணா. நீங்க கண் கலங்காதீங்கண்ணா, ப்ளீஸ்!

உன் கண்ணீருக்கு மட்டும் ப்ரேம் தகுதி வாய்ந்தவனா?
மைதிலிக்கு பதில் தெரியாவிட்டாலும், என் தலைவிதி, அழுது பழகிடுச்சி. இன்னிக்கு ஒட்டு மொத்தமா அழுதுட்டேன். இனி அழமாட்டேன். ஆனா, நீங்க மட்டும் அழக்கூடாது. நானே அழுதாலும், நீங்க அழக்கூடாது! நீங்க தைரியமா இருக்கனும்! உங்க பேரு மட்டும் ராஜா இல்லை! உண்மையாலுமே ராஜா! (ஆம், என் பெயர் ராஜாதான் – ஹப்பா, இவ்ளோ நேரத்துக்கு அப்புறம் ஹீரோ பேரு சொல்லிட்டாங்கப்பா!)

அவளது குழந்தைத்தனம் கலந்த பரிசுத்தமான அன்பில், என் மனம் நெகிழ்ந்தது. ஏதோ ஒரு விதத்தில், அது எனக்கு பெரிய தெம்பைத் தந்தது.

கட்டிலில் அமர்ந்தவாறே, அவளது கைகள், என் கண்களை துடைத்து விட்டது. என் கேசத்தை தடவி விட்டது. இத்தனைக்கும் நடுவேயும், அவள் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

என்னாலும், அவளை அப்படி பார்க்க முடியவில்லை.

என்னையறியாமல் என் கை உயர்ந்து, அவள் கண்ணீரைத் துடைத்தது. நான் துடைத்தவுடன், அவளது கண்ணீர் அதிகமானது. அது என்னை மிகவும் பாதித்தது.
எழுந்து கட்டிலில் சாய்ந்தவாறு உட்கார்ந்து, அவளை எனது மார்பில் மெல்ல சாய்த்துக் கொண்டேன்.

ஸ்ஸ்ஸ்ஸ்… ஒண்ணுமில்லை. அழாத.

என் மார்பில், அவளையறியாமல் இன்னும் ஒண்டிக் கொண்டாள். எனது கன்னம், அவளது முன் நெற்றியில் இருந்தது. அவளது கை, எனது சட்டையை பிடித்திருந்தது. எனது ஒரு கை, அவளது தலையை தடவிக் கொடுத்தது. இன்னொரு கை, அவளை தழுவிக் கொள்ள விரும்பினாலும், நான் கட்டுப் படுத்திக் கொண்டேன்.

2 Comments

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அந்த
    நாய்கள் வச்சு செய்யனும்

  2. Raji un msg waiting maa

Comments are closed.