பழிக்குப்பழி End 95

நானும் பவித்ராவும் சேர்ந்து எந்த தடையமும் இல்லாதபடி என் பழைய கிளினிக்கை கிளீன் செய்தோம், என்னிடம் கொஞ்சம் நெருக்கமாக அவள் இருப்பதாக தோன்றியது, நான் எங்கே போனாலும் என் கூடவே இருந்தாள், நான் அவளிடம் அதிக நேரம் செலவு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டாள், செரி அவளை அவள் பாட்டி வீட்டுக்கே கொண்டு போய் விட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன்.
பவித்ரா எங்காச்சும் வெளில போலாமா என்றேன், ம்ம்ம் போகலாம் என்று சந்தோசமாக சொன்னாள், ஊட்டியிலேயே இருந்துகொண்டு வேறெங்கு வெளியே செல்வது, ஊட்டியில் எல்லாருக்கும் என்னை தெரியும், செரி குன்னூர் போகலாம் என்று முடிவு செய்து காலையில் கிளம்பினோம்.

அவளுக்கு ரொம்ப சந்தோசம், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு நடந்தே சென்றோம், பூங்கா அங்கு இங்கு என்று சென்றோம், போகும் இடம் முழுக்க என் கைகளை பிடித்து கொண்டாள். நான் தள்ளி தள்ளி விட மீண்டும் கோர்த்துக்கொண்டாள். எனக்கும் மனதில் இருந்த இறுக்கம் போய் கொஞ்சம் ரிலாக்சாக இருப்பது போல இருந்தது. ஆசைப்பட்ட பண்டங்கள் அத்தனையையும் வாங்கி தின்றோம். இரவு ஒரு 7 மணி இருக்கும், கோயம்புத்தூர் கிளம்பினோம், அவள் நன்றாக தூங்கிவிட்டாள், நேரே அவள் பாட்டி வீட்டுக்கு சென்றேன், அவளை எழுப்பி விட்டேன்

எங்க வந்து இருக்கிறோம் என்பதை சுற்றி முற்றி பார்த்தாள், பாட்டி வீடு என்று தெரிந்ததும் ,ஹே என்ன இங்கே வந்துருங்க வண்டியை எடு என்றாள், இல்ல உள்ளே போய் உன் பாட்டியை பாரு என்றேன், என்னை இங்கேயே விட வந்துருக்கியா என்றாள், நான் பதில் ஏதும் சொல்லவில்லை, அவள் கையை பிடித்து உள்ளே கூட்டி போனேன், கதவை தட்டினேன் அவர் திறந்தார் பேத்தியை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் திளைத்தார், எங்கே போன என்று கேட்க, ஏதேதோ சொல்லி சமாளித்தாள், அவள் பாட்டியை பார்த்தது அவளுக்கு ஆனந்தம் என்றாலும் என்னை பார்த்து முறைத்தபடி இருந்தாள்.

நான் தான் கஷ்டப்பட்டு அவளை கண்டுபிடுச்சேன் என்று சொல்லி அவள் பாட்டியிடம் நல்ல பேர் வாங்கிக்கொண்டேன், செரி நான் கிளம்பறேன் என்றேன், அவள் இரு இரு என்று செய்கை காட்டினாள், நான் சொல்லிவிட்டு கிளம்பி வீட்டுக்கு வந்தேன், ஒருபக்கம் அவள் இனி வரமாட்டாள் என்பது கவலையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டேன் என்று நிம்மதியாக இருந்தது.

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.