பழிக்குப்பழி End 150

செரி பவித்ராவை நம்ம வீட்டிலேயே தங்க வைத்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன், என் மனைவி மகள் வெளியே போயிருந்த சமயம், அவளை மொட்டை மாடியில் இருக்கும் ரூமில் தங்கவைத்தேன், புது கவலையால் இரவு தூக்கமில்லை, காலை பொழுது விடிந்தது, பார்த்தால் அதிர்ச்சி என் வீட்டு சோபாவில் உட்கார்ந்து tea குடித்து கொண்டிருந்தான் ராஜா, அருகே என் மனைவி நின்று பேசிக்கொண்டு இருந்தாள்,

எனக்கு தூக்கி வாரி போட்டது, என்னை பார்த்ததும் ஏங்க உங்களை பாக்க தான் வந்திருக்காரு என்றாள், செரி நான் பாத்துக்கிறேன் நீ போமா என்று அனுப்பி வைத்தேன், நான் பேசும் முன்னாடியே அவன் பேச ஆரம்பித்தான், நான் உங்க பழைய கிளினிக் போட்டுதான் வரேன் அங்கே இருப்பீங்கன்னு நெனச்சேன் என்றான், நான் சிரித்தேன், அந்த புள்ள கூட அங்க இல்ல போல என்றான், ஆமா அவ கெளம்பிட்டா என்றேன், கொஞ்சம் தயங்கியபடி அது அந்த மாதிரி பொண்ணா என்றான், இல்லல்ல அது பயிற்சி மருத்துவர் என்றேன், ஒஹ் அப்படியா என்று சொல்லி சிரித்தான்.

டாக்டர் nightலாம் தூக்கம் இல்லை, ஒரே படபடப்பா பயமா இருக்கு என்றான், என்னடா
நான் சொல்லவேண்டியத இவன் சொல்லிட்டு இருக்கான் என்று நினைத்துக்கொண்டேன், சொல்லுங்க என்றேன், முத்துவும் நானும் சேர்ந்து தான் இருப்போம் என்றான், எனக்கு விளங்கல புரியற மாதிரி சொல்லுங்க என்றேன், அவன் கூச்சப்பட்டபடியே முத்து தான் அந்த மாதிரி பொண்ணுங்கள கூட்டிட்டு வருவான், நானும் அவனும் தான்…. என்று இழுத்தான் எனக்கு புரிந்தது, செரி மேல சொல்லுங்க என்றேன், இப்போ அவனுக்கு எய்ட்ஸ் இருக்குனா எனக்கும் இருக்குமோன்னு பயமா இருக்கு டாக்டர் என்றான், எனக்கு உள்ளுக்குள்ளே செரியான சிரிப்பு.

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.