பழிக்குப்பழி End 150

வந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது, நான் கிளம்ப சொன்னேன், போகவே மனசு வரல என்றாள், நானும் போகாதே என்று மனதில் சொன்னேன், அவளை அனுப்பிவிட்டு நடை பிணமாக வீட்டுக்கு போனேன், இரவு முழுக்க தூக்கம் இல்லை, என்னை அறியாமல் கண்ணீர், நான் ஹ்ம்ம் என்று ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிவிடும், இது எனக்கு கிடைத்த தண்டனை என்று நினைத்து கொண்டு இருந்தேன்,

ஒரு வாரம் தாக்கு பிடித்தேன், இனிமேல் அவள் இல்லாமல் முடியாது, காதல் நோயினால் செத்து விடுவேன் என்பது போல தோன்றியது, விடியலுக்காக காத்திருந்தேன், ஆழ்ந்த யோசனைக்கு பிறகு காலையில் நேராக பவித்ரா பாட்டி வீடு சென்றேன், அவள் அங்கே அழுதபடி படுத்து இருந்தாள், என்னை பார்த்ததும் சந்தோசப்பட்டாள், பாட்டி எங்கே என்றேன், வெளில போயிருக்காங்க என்றாள், உன் ட்ரேஸ் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ என்றேன், அவளும் நான் சொன்னபடியே எடுத்து வைத்தாள்,

வா போலாம் என்று அவள் கையை கோர்த்துகொண்டேன், காருக்குள் சென்றதும் அவளை இறுக்கமாக கட்டி கொண்டேன், முத்தமிட்டேன், கண்ணீர் வழிந்தது, துடைத்து விட்டாள், ரொம்ப சந்தோசபட்டாள், நான் காண்றது கனவா நிஜமா என்றாள், நிஜம் தான் என்றேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள், இனிமேல் உன்னை ஒரு கணம் பிரியமாட்டேன் என்று சொன்னேன், ரொம்ப சந்தோசபட்டாள், நேராக என் பழைய கிளினிக் வந்தோம், இனி ஏதும் அவளிடம் மறைக்கமாட்டேன் என்று என் காதலை சொன்னேன்,

என் காதலை ஏற்றுக்கொண்டாள், அவளை அன்று அடித்ததற்கு sorry கேட்டேன், ஏன் என்னை திருப்பி கூட அடிக்கல என்றேன், எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு, நான் செஞ்ச தப்புக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கணும்னு முடிவு பண்ணேன் என்றாள், எனக்கு இப்டி ஆனனால அந்த அனுதாபத்துல தான் லவ் வந்துச்சா என்றாள், இல்லை அதுக்கு முன்னாடியே என்றேன், ரொம்ப சந்தோசபட்டு அழுதாள், அழுகாத இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட உன்னை சிந்த விடமாட்டேன் என்றேன். அன்றைய இரவை அவளுடன் கழித்தேன், இருவருமே வாழ்வில் இதுபோல சந்தோசமாக இருந்ததில்லை என்பதுபோல் இருந்தோம்.

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.