பழிக்குப்பழி End 94

கொஞ்ச நேரம் கழித்து எனக்கு phone வந்தது, ராஜா தான் பேசினார், என்ன டாக்டர் அந்த பெண்ணை தேடரிங்களா என்றார், நான் அதிர்ச்சியில் பதில் சொல்லாமல் நிற்க, பயப்படாதீங்க என்கூட தான் இருக்கா என்று சொல்லி சிரித்தார், பக்கத்தில் பவித்ரா அழுவது கேட்டது. ஹலோ ராஜா என்னாச்சு எதுக்கு அவல கூட்டிட்டு போயிருக்கிங்க என்று கேட்க, சீக்கிரம் என் மில்லுக்கு வாங்க பேசிக்கலாம் என்றார்,,

போச்சு போச்சு எல்லாம் முடிந்தது என்று தோன்றியது, பெரிய ஆபத்தில் நான் இருக்கிறேன் என்பது விளங்கியது, கண்டிப்பாக நான் அவனுக்கு நான் கொலை செய்தது தெரிந்துவிட்டால் என் குடும்பத்தையே கொன்று புதைத்து விடுவான், பேசாமல் மனைவி, மகள் இருவரையும் வெளிநாடு அனுப்பிவிடுவோம், பிறகு வேணா நாம வேணா போய் அப்புறம் அவனை பார்க்கலாம் என்று யோசித்தேன், செரி என் மனைவி மகளிடம் என்ன காரணத்த சொல்வேன் என்று ஆயிரம் யோசனைகள்,

செரி என்ன ஆனால் என்ன, அவனை போய் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்தேன், உண்மை கண்டிப்பாக தெரிய வாய்ப்பேயில்லை, அப்படி தெரிந்திருந்தால் அவன் வீட்டுக்கு தான் வந்திருப்பான், என்னை அழைக்க மாட்டான், எனவே கண்டிப்பாக ஒரு டவுட்டில் தான் கூப்பிடுகிறான் என்று முடிவு செய்தேன்,

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.