எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 79

ரகு : அப்போ உன்னோட தம்பி அருண் இல்லையா?

ஹேமா : அவனும் எனக்கு தம்பி தான் இவனும் எனக்கு தம்பி தான்

ரகு : (முகமலர்ச்சியுடன்) ஓகே ஓகே என்று வெளியே சொல்லிக்கொண்டு மனதிற்குள் “அப்பாடா இவள் ராஜாவை தம்பியாக தான் பாக்குறா. கண்டிப்பா இவங்க ரெண்டு பேரும் தப்பு பண்ணி இருக்க மாட்டாங்க. சூழ்நிலைதான் என்ன அப்படி யோசிக்க வெச்சிருக்கு அது வேற யாராவதா இருக்கும் என்று நினைத்துக்கொண்டான் ஹேமா வெளியில் செல்ல , அவளை இழுத்து கட்டி அணைத்தான் ரகு. ஹேமா விடுங்க கோயிலுக்குப் போகும்போது இதெல்லாம் பண்ண கூடாது

ரகு : நீயும் என் கூட கோயிலுக்கு வா நம்ம இப்பவே போயிட்டு வந்துடலாம்

ஹேமா : உடனே சாமி கும்பிட்டுவிட்டு வந்துரலாமா?

ரகு : வந்துரலாம் நீ போய் சேலை கட்டு

ஹேமா : சேலையெல்லாம் வேண்டாம் சுடி போட்டுக்கறேன்

ரகு : சரி எதையோ ஒன்னு போடு என்று இருவரும் ரூமை விட்டு வெளியே சென்றனர். ஹேமா கிச்சன் உள்ளேயும் ரகு ஹாலுக்கும் சென்றான்.

ஹேமா : என்ன அத்தை சமையல் முடிஞ்சுதா? என்று கேட்டுக்கொண்டே டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து பற்றவைத்தல்.

பத்மாவதி : சட்னி வச்சுட்டே மா மாவு மட்டும் எடுத்துட்டு வந்து தோசையை ஊத்துனா முடிஞ்சது

ஹேமா : சரி அத்தை என்று சொல்லிவிட்டு டீயை எடுத்து கிளாசில் ஊற்றி ஹாலுக்கு எடுத்துச் சென்றாள்.

அங்கே சோபாவில் மோகன் ராஜாவும் அமர்ந்திருந்தனர் .ரகு தனி சோபா சேரில் அமர்ந்திருந்தான் .ஹேமா ரகுவுக்கு டியை கொடுத்துவிட்டு ராஜாவுக்கு கொடுத்தாள் ராஜா தலையை குனிந்தபடியே டியை வாங்கினான். ஹேமா சிரித்துக்கொண்டே ரூமுக்குள் சென்றாள். ரகு டீயை குடித்து முடித்துவிட்டு கிச்சனுக்குள் சென்றான்.

ரகு : அம்மா நானும் ஹேமாவும் இப்பவே கோவிலுக்கு போயிட்டு வந்துடறோம்

பத்மாவதி : ஏண்டா இப்பவே இன்னும் சாப்பிடக் கூட இல்லை

ரகு : இல்லம்மா அவ ரொம்ப டயர்டா பீல் பண்ற அதான் இப்பவே போயிட்டு சாமி கும்பிட்டு வந்துடலாம்னு இருக்கேன். இப்ப கூட்டம் இருக்காது இல்ல

பத்மாவதி : ம் இருக்காது

ரகு : அப்போ சரி

1 Comment

Comments are closed.