எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 79

ரகு : ஏன் என்ன ஆச்சு

ஹேமா : அண் டைம்ல சாப்பிட்டேன்ல அதுதானோ என்னவோ

ரகு : ரொம்ப வலிக்குதுனா சொல்லு டாக்டர்ட்ட போலாம்

ஹேமா : அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் டேப்லட் இருக்கு போட்டுக்கறேன்

ரகு : டேப்லட் போட்டு படுத்துக்கிட்டா நீ திருவிழாவுக்கு வரமாட்டியா.

ஹேமா : ஆமாங்க இத நீங்க தான் எப்படியாவது அத்தைகிட்ட சொல்லணும்

ரகு : ஏன்???

ஹேமா : அத்தை தான் சொன்னாங்க இன்னைக்கு கோவில்ல நிறைய கூட்டம் வரும்னு

ரகு : ஆமாண்டி இன்னைக்கு தான் திருவிழா நல்லா இருக்கும்

ஹேமா : எனக்கு டயர்டா இருக்குங்க அங்க வந்தா கூட்டமா இருக்கும். உட்கார முடியாது. சீக்கிரமே சாப்பிட்டு கிளம்புறோம், லேட்டாதான் வருவோம். நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடுவேன்.

ரகு : சரி சரி என்று சொல்லிக்கொண்டு டிரஸ்சை மாற்றிவிட்டு அவன் கட்டிவந்த ஈரத் துண்டை ஹேங்கரில் போடும்போது அதில் தொங்கிக்கொண்டிருக்கும் ஹேமாவின் சேலையில் உள்ள செம்மண் கரையை கண்டான். அதை பார்த்துவிட்டு அவன் ஹேமாவை பார்க்க அவள் தலையில் கை வைத்துக்கொண்டு கீழே குனிந்து இருந்தாள். இவன் ராஜாவின் செருப்பில் இருக்கும் செம்மன் கரையையும் இவள் சேலையில் இருக்கும் செம்மன் கரையையும் மனதி இணைத்து பார்த்துக்கொண்டிருந்தான். அவள் சேலையில் இருக்கும் கரையை விரலால் தொட்டு பார்த்துக்கொண்டிருந்தான், அப்போது ஹேமா தலையை தூக்கி பார்க்க அவன் செய்வதை பார்த்து “என்ன இவரு காலையில இது எப்படிப்பட்டுச்சுனு கேட்டாரு, இப்போ அதை தொட்டு பாத்துட்டு இருக்காரு இவருக்கு என்ன ஆச்சு, அந்த கரை எப்படி வந்துச்சுன்னு கூட எனக்கு தெரியல” என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போது ரூமுக்கு வெளியே “அம்மா டீ குடுமா” என்று ராஜாவின் சத்தம் வர “இருடா தரேன்” என்று பத்மாவதியின் சத்தமும் கேட்டது .

ஹேமா : என்னங்க யோசிச்சிட்டு இருக்கீங்க?

ரகு : ஒன்னுமில்ல

ஹேமா : சரி வாங்க உங்களுக்கும் தம்பிக்கும் டீ சூடு பண்ணி தரேன்

ரகு : என்னது தம்பியா?

ஹேமா : ஆமா தம்பி தான்

ரகு : அவன் என் தம்பி டி

ஹேமா : எனக்கும் தம்பிதான்

1 Comment

Comments are closed.