எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 79

சுரேஷ் : என்கிட்ட 250 ரூபாய் இருக்கு .டேய் ராஜா உன்கிட்ட

ராஜா : 200 ரூபாய் இருக்குடா

சுரேஷ் : இது போதுமாடா?

சேகர் : அப்ப மணி

சுரேஷ் : அவனுக்கும் சேர்த்து தாண்டா

சேகர் : சரி நான் சாப்பிட்டு வந்துடுறேன். நம்ம போய் வாங்கிட்டு வந்துடலாம்

சுரேஷ் : சீக்கிரம் வாடா கடையை மூடிய போறாங்க

சேகர் : அரை மணி நேரத்துல வந்துடறேன்

சுரேஷ் : ஓகே போயிட்டு வா என்று சொல்லிவிட்டு ராஜாவை கூட்டிக்கொண்டு கோயிலுக்குள்ளே சாமி பூ கிடங்கு இறங்குவதை பார்க்கச் சென்றான்.சேகர் நேரே வீட்டுக்கு சென்றான்.

அங்கே சேகரை கடந்து சென்ற ரகு மற்றும் அவனது நண்பர்கள் பேசிக்கொள்வது :

குமார் : என்னடா ரகு உன்னோட மச்சான்கிட்ட பேசிட்டு இருந்த போல

ரகு : டேய் ஏண்டா

பாலா : ஆமால்ல ரம்யா ரகுவோட முன்னாள் காதலில

ரகு : டேய் அமைதியா இருங்க டா (என்று வெட்கப்பட்டான்)

வினோத் : டேய் என்னடா வெட்கப்படுறான். தம்பி ரகு அவளுக்கு கல்யாணம் ஆயிருச்சு. இப்ப பிரக்னன்டா இருக்கானு நினைக்கிறேன்.

ரகு : அப்படியா டா

பாலா : என்ன நோப்பிடியாடா

ரகு : சரி விடுங்கடா. அது அந்த காலம்.

குமார் : சரி இன்னைக்கு சரக்கு அடிக்க இடத்தை மாத்தி பார்க்கலாம்

பாலா : எங்கடா

குமார் : எடத்த நான் பிக்ஸ் பண்ணிட்டேன்

வினோத் : சரக்கு வாங்கிரோமா இல்லையாடா

வசந்த் : வாங்கலாம் டா ஃபர்ஸ்ட் குமார் சொன்ன இடத்துக்கு போகலாம்.

அனைவரும் இரண்டு பைக்கில் ஏறி சென்றனர். குமார் நேரே அந்தப் பழைய போஸ்ட் ஆபீஸில் இருந்து ஒரு 200 மீட்டர் தொலைவில் ஒரு டிராக்டர் டெய்லர் மட்டும் கிடந்தது .அங்கு சென்று வண்டியை நிறுத்தினான்.

1 Comment

Comments are closed.