எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 77

பத்மா எழுந்து கிச்சனுக்குள் சென்றாள். அதை நேரம் வாசலில் ரகு செருப்பை கழட்டும்போது ராஜாவின் செருப்பை பார்த்தான். அதில் அந்தச் செம்மண் கரை இருப்பதை பார்த்து மனதிற்குள் யோசிக்க ஆரம்பித்தான். பின் வீட்டிற்குள் செல்லும்போது ஹேமாவை பார்த்துக்கொண்டே அவன் ரூமுக்கு சென்றான். ஹேமா மனதிற்குள் “ஏன் இப்படி பார்த்துட்டு” போறார் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ரூம் கதவை திறந்து டவல் எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றான். ஹேமா குளிக்க போறாரு போல என நினைத்துக்கொண்டாள்.

பின் ஹேமா எழுந்து மோகன் டீ குடித்து வைத்த கிளாஸையும், அவளது கிளாஸையும் எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு சென்றாள். அங்கே பத்மாவதி மிக்ஸியில் தேங்காய் அரைத்துக் கொண்டிருந்தாள்.

ஹேமா : என்ன பண்றீங்க அத்தை??

பத்மாவதி : இன்னைக்கி கோயிலுக்கு சீக்கிரமே போகணும்ல அதான் இப்பவே சமையல் செய்ரேன். நம்ம சாப்பிட்டதுக்கு அப்புறம் போகலாம் சரியா.

ஹேமா : எதுக்கு இன்னைக்கு சீக்கிரமே போகணும் அத்தை

பத்மாவதி : இன்னைக்கு தான்மா திருவிழா நல்லா இருக்கும் சாமி பூக்கிடங்கு இறங்கும், பாட்டுக் கச்சேரி நடக்கும், வானவேடிக்கை நடக்கும், ஊரே அங்க தான் இருக்கும் சும்மா ஜே ஜே ஜேனு இருக்கும்மா

ஹேமா : அப்படியா அத்தை.

பத்மாவதி : அதான் இப்போது தேங்காய் அரைக்கிறேன். சட்னி வச்சு தோசை சுடலாம் ன்னு இருக்கேன்.

ஹேமா : அப்ப நான் போய் பிரிட்ஜில இருந்து மாவு எடுத்து வரேன்

பத்மாவதி : அதெல்லாம் வேண்டாம்மா, நீ ஏற்கனவே டயர்டா இருக்க நீ போய் ஹால்ல உக்காரு

ஹேமா : பரவால்ல அத்தை நானும் ஹெல்ப் பண்றேன்

பத்மாவதி : நீ ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு மேலேபோய் காஞ்ச துணி எடுத்துட்டு வந்து ஹால்ல போடு போதும்

ஹேமா : சரி அத்தை நான் போய் எடுக்கிறேன்

பத்மாவதி : ம்ம்

மேலே மாடிக்கு படியில் ஏறிக்கொண்டிருக்கும் போது ராஜா ரூமை தாண்டி செல்லும்போது பார்த்தாள். அப்போது ராஜா கைலியை கட்டிக் கொண்டிருந்தான். ஹேமா துணியை எடுத்துவிட்டு கீழே செல்வதற்கு முன் ராஜா ரூமை மறுபடியும் பார்த்தால் இந்த முறை ராஜா ஹேமாவை பார்த்துக்கொண்டான்.

1 Comment

Comments are closed.