எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 38

சேகர் : அப்புறம் நான் கால் பண்ணும் போது யாருன்னு கேக்காதீங்க

ஹேமா : (சற்று சிரித்துவிட்டு) அதெல்லாம் கேட்க மாட்டேன்

சேகர் : சரி உங்களுக்கு எப்ப கால் பண்ணலாம்

ஹேமா : நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் நானே பண்றேன்

சேகர் : நெஜமா

ஹேமா : ம் நெஜமா தான்

சேகர் : சரி நீங்க சென்னையில எங்க இருக்கீங்க

ஹேமா : கோடம்பாக்கம் தெரியுமா அங்க ஒரு பிளாட்டுல லீசுக்கு இருக்கோம்

சேகர் : பிளாட் name?

ஹேமா : மெர்குரி

சேகர் : ஓகே ஓகே சென்னை வந்தா கால் பண்றேன்.

ஹேமா : ஓகே பண்ணுங்க

சேகர் : எனக்கு தெரிஞ்சி சீக்கிரமே வருவேனு நினைக்கிறேன்

ஹேமா : எதுக்கு

சேகர் : உங்கள பார்க்க தான்

ஹேமா : என்ன பாக்க அவ்வளவு தூரம் வர போறீங்களா??

சேகர் : எங்க அக்காவை பார்க்க எவ்வளவு தூரம் வேணாலும் வரலாம்

ஹேமா : (சற்று சிரித்துக்கொண்டே) வா வா தம்பி

சேகர் : சரிக்கா நீங்க போங்க நம்ம ரொம்ப நேரம் பேசிட்டுடோம்னு நினைக்கிறேன்

ஹேமா : அப்படி எல்லாம் இல்ல. உன்கூட பேசினா நேரம் போறதே தெரியல

சேகர் : எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க

ஹேமா : (தலையாட்டிக் கொண்டு சிரித்தாள்). அதேநேரம் ரகு ஹேமாவை கூப்பிட ஹேமா வேகமாக முன்னே சென்றாள். பின்னே சேகரும் வந்தான். அங்கே சேகர் அம்மா அப்பாவிடம் விடைபெற்று, இருவரும் சென்றார்கள் ஹேமா பைக்கில் ஏறி உட்கார்ந்துவிட்டு பின்னாடி திரும்பி பார்த்து சேகருக்கு “வரேன்” என்று சைகை மூலம் சொல்லிவிட்டு சென்றாள்.

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *