எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 38

மாலை 6 மணி,
ஹேமா தலைவலியுடன் எழுந்தாள் .எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டு சிறிதுநேரம் பெட்டில் உட்கார்ந்தாள் பின் எழுந்து கிச்சனுக்குள் சென்றாள். அங்கே பத்மாவதி டீ போட்டுக் கொண்டிருந்தாள் .

பத்மாவதி : என்னமா எழுந்துட்டியா

ஹேமா : இப்போதான் எழுந்தேன் அத்தை

பத்மாவதி : ஏம்மா ஒரு மாதிரி பேசுற

ஹேமா : தலைவலிக்கு அத்தை

பத்மாவதி : (ஹேமாவின் முகம் வாடிப்போய் இருப்பதை பார்த்து அவள் கழுத்தில் கை வைத்து பார்த்தாள்) உடம்பு சுடலையே காய்ச்சல் ஒன்னுமில்ல சின்ன தலைவலி தான் நீ ஹாலுக்கு போ நா டீ எடுத்துட்டு வரேன் என்றாள். ஹேமா தண்ணீர் குடித்துவிட்டு ஹாலுக்கு சென்றாள். அங்கேயே மோகன் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்‌.

ஹேமா சோபா பக்கத்தில் இருக்கும் சேர் சோபாவில் அமர்ந்தாள்.
மோகன் : என்னமா நல்ல தூக்கமா??

ஹேமா : ஆமா மாமா

மோகன் : ஏன் ஒரு மாதிரி பேசுற???

ஹேமா : பயங்கரமா தலை வலிக்குது மாமா .

அந்த நேரம் பார்த்து பத்மாவதி கிச்சனிலிருந்து இரண்டு கிளாஸ் டி எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். மோகனிடமும் ஹேமாவிடமும் கொடுத்துவிட்டு மோகன் பக்கத்தில் அமர்ந்தாள்.

மோகன் : என்ன பத்மா ஹேமா தலை வலிக்குதுன்னு சொல்றா??

பத்மா : அதாங்க எனக்கும் தெரியல என்னம்மா ஆச்சு? எதனால வலிக்குது?

ஹேமா : அது ஒன்னும் இல்ல அத்த காலையில சாப்பிடாம மதியமும் சாப்பிடாம அண் டைம்ல சாப்பிட்டேன்ல அதான் தலை வலிக்குது.

பத்மாவதி :ஐயையோ நாங்க எப்பவுமே இரண்டாவது நாள் திருவிழாவுக்கு இப்படி தான் மா பண்ணுவோம். அதான் இந்த தடவையும் அப்படி பண்ணிட்டோம் மன்னிச்சிடு மா.

ஹேமா : அய்யோ அத்தை இது ஒரு சாதாரண தலைவலி இதுக்கு போய் ஏன் மன்னிப்பு அது இதுன்னு சொல்றீங்க

மோகன் : அவ அப்படி தான் மா எங்களுக்கு பெண் குழந்தை இல்லை. அவ உன்ன தான் பொண்ணா நினைக்கிறா

ஹேமா : பத்மாவை பார்த்து சிரித்துக்கொண்டு டீ குடித்தால்.

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *