இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 60

கிஷோர்: டயர் ல பாலித்தீன் கவர் சிக்கிக்கிருச்சு டா.. என்று அதை வெளியில் எடுத்துப் போட்டான்.

அதற்குள் கலை சில அடிகள் நகர்ந்து ஒரு வேப்ப மரத்தினடியில் நிழலில் நின்று, மேலே மரக்கிளை இடுக்கில் இருந்த ஒரு காக்கை கூடை வெறுமென வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நினைவுகள் எங்கோ போய்க்கொண்டிருக்க, “கலை போலாம் வாடி”, “ஏன் அண்ணி அங்கேயே நிக்குறீங்க? வாங்க போலாம்”, “கலை அக்கா வாங்க, அத்தை இந்நேரம் பிரியாணி ரெடி பண்ணி வச்சிருப்பாங்க, அது ஆறிப்போறதுக்குள்ள போய் சாப்பிடுவோம் வாங்க” என்று கிஷோர், ராம், வனிதா குரல்கள் மாறி மாறி ஒலித்தது. அவளின் செவியின் ஆரம்பத்தை எட்டிய குரல்கள் அனைத்தும் மூளைக்குள் செல்லாமல் மறைந்து போக, கலை அந்த காக்கை கூட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கலை அருகில் வந்த கிஷோர் அவள் தோளை பிடித்து உலுக்கினான்..

“என்னடா?”

“போலாம் டி.. அம்மாவும், அப்பாவும் வெய்ட் பண்ணுவாங்க”

“உடனே போகணுமா டா, எனக்கு ரொம்ப அப்செட் ஆ இருக்கு.. முத தடவ மாமா, அத்தை பாக்கும் போது கொஞ்சமாச்சும் சிரிச்ச மூஞ்சியோட இருக்க வேண்டாமா டா”

ஆதரவாக அவள் தோளை பிடித்த கிஷோர் தன்னோடு அனைத்து “இப்போ அப்செட் ஆகுற அளவு பெருசா ஒன்னும் நடந்துடல டி. அவன் என் சட்டையை பிடிச்சான் நீ அடிச்ச. அவ்ளோதான் அது அங்கேயே முடிஞ்சு போச்சு. நீ அதையே நினைச்சிட்டு இருக்காத”

“அவ்ளோ ஈஸியா முடிஞ்சு போகுற மாதிரி எனக்கு தோணல டா, இப்போ தான் ஆரம்பிச்சு இருக்கு”

“அண்ணி, இப்போ தான் ஆரம்பிக்குறதாவே இருக்கட்டும், கூட நாங்க இருக்கும் போது நீங்க எதுக்கு கவலை படணும். ஜாலியா இருங்க அண்ணி”