இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 40

கலை அவள் வாழ்க்கையில் அடுத்து வரப்போகும் பாதிப்புகளை அறிந்திராமல் கிஷோர், ராம், வனிதாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்..

பல அடுக்குகள் கொண்ட அழகான அப்பார்ட்மெண்ட்டில் இரண்டாம் அடுக்கு , ஃபிளாட் எண் 26 ன் கதவை திறந்து நடுத்தர வயது உடைய ஒரு ஆடவர் ஒருவர் கையில் காய்கறிகளை தாங்கிய வெள்ளை பாலித்தீன் பையுடன் நுழைந்தார். அந்த காய்கறிகள் நிறைந்த பாலித்தீன் பையை கூடத்தின் நடுவில் வைத்து விட்டு, வழக்கம்போல் தொலைக்காட்சி பெட்டியை ஒளிர செய்து செய்தி உலகில் மூழ்க, அவர் மனைவி காய்கறிகளை எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு வீட்டின் சன்னல் ஓரத்திற்கு வந்து அந்த பாலித்தீன் பையை கிடாசி விட்டாள்.

வாகங்களின் புகை, தூசி எல்லாம் நிறைந்து இருந்த சென்னையின் காற்று மண்டலம் அந்த பாலித்தீன் பையை சில தூரம் நகர்த்தி கொண்டு போக, அந்த பை மின்சார கம்பியில் தொத்திக் கொண்டு உயிருக்கு ஊசலாடியது. தன் குஞ்சிகளுக்காக உணவைத்தேடி அலைந்து கொண்டிருந்த ஒரு காகம் கண்ணில் அந்த பாலித்தீன் பையும், அதற்குள் இருந்த சில காய்ந்த வெங்காய தோல்களும் பட, காகம் அந்த மின்சார கம்பியில் அமர்ந்து அந்த வெங்காய தோல்களை கொத்தி எடுத்து பறந்தது.

காக்கையின் செயலால் கம்பியில் இருந்து நழுவிய பாலித்தீன் பை சரியாக சாலையின் நடுவில் விழுந்தது. ஏதேனும் ஒரு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்த்த அந்த பையை, TVS Excel Heavy Duty ஏற்றியது. சக்கரத்தின் மையத்தில் அது சிக்கி கந்தல் கந்தளாய் கிழிந்து மரணத்தை தழுவ, கிழிந்த அந்த பையின் ஒரு பகுதி மட்டும் சக்கரத்தில் ஆழமாக சிக்கிக் கொண்டது. சக்கரங்கள் சுழலும் போது அந்த கிழிந்த துண்டு கீச் கீச் என்ற மரண ஓலத்தை இடைவிடாமல் எழுப்பிக் கொண்டிருந்தது.

அந்த இரு சக்கர வாகனமானது ஒரு ஓரத்தில் நிறுத்தப்பட, அதனை ஒட்டி பயணித்த இன்னொரு இருசக்கர வாகனமும் கூடவே நின்றது. அந்த இரண்டு வாகனமும் கிஷோர், ராம் என்ற நாமங்கள் கொண்ட இரண்டு இளைஞர்களால் ஓட்டப்பட அவர்கள் பின்னால் கலை, வனிதா என்ற நாமங்கள் கொண்ட இரண்டு இளைஞிகள் அமர்ந்து வந்திருந்தனர்..

கிஷோர்: ச்ச்சா!!! இருக்குற டென்ஷன் பத்தாது ன்னு இது வேற ஒன்னு..

ராம்: என்னாச்சுன்னே?? எதுக்கு நிறுத்திட்ட??