இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 18

“கிஷோர் அவங்க தான் ஏதோ சொல்ல வர்றாங்க ல.. Let them speak, don’t interrupt again” என்று சொல்லிவிட்டு ராமிடம் திரும்பி “அந்த ராகுலுக்கு என்ன ப்ரோ”

“அந்த ராகுல் ங்கிறவன் பணக்கார திமிரு பிடிச்ச ஒண்ணா நம்பர் பொருக்கி பையன், பொம்பள பைத்தியம் பிடிச்சவன் ப்ரோ, உலகத்துல இருக்குற எல்லா கெட்ட வார்த்தைக்கும் பொருத்தமான ஆளுனா அவன் தான்.. இங்க பொண்ணுங்க இருக்காங்க ன்னு பாக்குறேன் ப்ரோ.. இல்லேன்னா அவனை பத்தி வேற லெவெல்ல சொல்லிருப்பேன்.. எங்க அண்ணன் விவரம் தெரியாம அவன் கூட பிரண்ட்ஷிப் வச்சிருக்கான்.. வாட்ச் ரிப்பேர் பண்றது அது பண்றது இது பண்றது ஒன்னு ஒன்னுக்கும் என்னோட அண்ணனை வேலைக்காரன் மாதிரி யூஸ் பண்ணிருக்கான்.. முந்தாநேத்து அவனை பத்தி விசாரிக்க போனேன், ஆனா சரக்கடிச்சு இருந்துருக்கேன் ன்னு இவ நினைச்சுக்கிட்டு என்கூட சண்டைக்கு வர்றா” என்று ராகுலை பத்தி ராகுலிடமே சொல்லி முடித்தான்..

ராகுலுக்கு மூக்கில் இருந்து புகை மட்டும் தான் வரவில்லை, கோவத்தின் உச்சத்தில் இருந்தான்.. கலைக்கும் சுபர்ணாவுக்கும் என்ன நடந்திருக்கும் என்று ஏதோ ஓரளவு புரிந்து, அடுத்த நடக்க போகும் பிரளயத்தை எண்ணி சற்று அச்சம் வந்தது.. இருந்தாலும் கலையின் மனதுக்குள் ஒரு ஓரத்தில் சந்தோசம், அவள் மனதில் ராகுலை பற்றி நினைத்திருந்த வார்த்தைகள் அனைத்தையும் ராம் கொட்டி விட்டது..

கிஷோர் செய்வதறியாது திகைத்து போய் ராகுல் கண்களை நேருக்கு நேர் காண முடியாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். பதற்றத்தில் அவன் தொண்டையில் எச்சில் வற்றிப் போனது..

ராகுலின் முழு குணத்தையும், சூழ்நிலையின் உக்கிரத்தையும் புரிந்த சுபர்ணா “கிஷோர் தயவு செஞ்சு எல்லாரையும் இங்க இருந்து கூட்டிட்டு போ” என்று சொல்லிவிட்டு ராகுலின் அருகில் சென்று “ராகுல் அவங்க அப்டி மீன் பண்ணிருக்க மாட்டாங்க டா, நீ டென்ஷன் ஆகாத, இத அப்படியே விற்று, நீ கீழ போய் இரு நான் வரேன்” என்று அவன் கையை பிடித்துக் கொண்டு கனிவாக சொன்னாள்.. அவளுக்குள் ஒரு நப்பாசை போல், ராகுல் இதை அப்படியே விட்டுவிடுவான் என்று..

இவ்வளவு அருகில் நின்றது வேறு யாருமல்ல சாட்ஷாத் ராகுல் தான் என்ற உண்மை புலப்பட ராமும் வனிதாவும் ஸ்தம்பித்து போயினர்.. ராகுலுக்கு பயந்தவன் அல்ல ராம், இருந்தாலும் அண்ணனை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளி விட்டதை எண்ணி வருத்தம் கொண்டான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *