இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 40

யாரோ தன்னை பார்ப்பது போன்ற எண்ணம் அந்த வன்ம விழிக்காரனுக்கு தோன்ற, அவன் விழிகள் இப்பொழுது நேரெதிரே பார்வையை வீச, கலையின் விழிகள் வெகுநேரமாக அவனை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டிருந்தது. அந்த பார்வையின் உக்கிரம் தாங்க முடியாமல் பார்வையை நகற்றி பக்கத்தில் வீச அங்கே கிஷோர் அப்பாவியாக கலையை பார்த்து கொண்டிருந்தான், வன்ம விழிக்காரனின் உதட்டில் ஏளன சிரிப்பு தென்பட்டது..

அந்த வன்ம விழிக்காரன் ராகுல் அப்பாவி கிஷோரை ஏளனமாய் பார்த்துக் கொண்டிருக்க ராஜாராமின் உருவம் நடுவே வந்து நின்றது..

ராஜாராம்: என்ன மாப்ள, நான் சொன்னது நியாபகம் இருக்குல்ல.. சீக்கிரமே வீட்டுல இருந்து ஆள் கூட்டி வந்துருங்க.. என்ன??

கிஷோர்: சரி மாமா!! நான் கூட்டிட்டு வர்றேன்.. ஆனா (என்று தயங்கிக் கொண்டு அடுப்பறையில் இருந்த மஞ்சுவை பார்த்து) அத்தை க்கு என்னை..

ராஜாராம்: அவளா!! அவ சும்மா படபட ன்னு பேசுவாளே தவிர பெருசா ஒன்னும் கிடையாது.. அவளை நான் பேசி சமாளிச்சுருவேன்.. நீங்க எதுவும் கவலைப்படாம இருங்க.. என்ன??

கிஷோர்: ம்ம் சரி மாமா ..

ராஜாராம்: சரி மாப்ள.. எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு.. நான் கிளம்புறேன்..

கிஷோர்: மாமா நானும் கிளம்புறேன். டைம் ஆச்சு.. (என்று எழுந்து நிக்க)

கலை அவன் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தாள்..

ராஜாராம்: மாப்ள என்ன அதுக்குள்ளே என்ன அவசரம்.. அவ சம்சாரம் சமைச்சிட்டு இருக்கிறா.. இருந்து சாப்பிட்டுட்டு போங்க..

கிஷோர் மறுப்பு எதுவும் சொல்ல முடியாமல் தலையை ஆட்டி “ம்ம்.. சரி மாமா” என்றான்..

ராஜாராம் ராகுல் பக்கம் திரும்பி “நீங்களும் இருந்து சாப்பிட்டுட்டு போங்க” என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பி சென்றார்..