இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 35

மஞ்சு முகத்தை திருப்பிக் கொண்டு முணுமுணுக்க, ராஜாராம் கலையை அழைத்துக் கொண்டு மாடிப்படி ஏறினார். அந்த ரம்மியமான மாலைப்பொழுதில் குளுமையான காற்று வீசிக்கொண்டிருக்க இருவரும் மொட்டைமாடிக்கு வந்ததும்,

“ப்பா!! ப்பா!! ஒரு நிமிஷம் இங்கயே இருங்க.. நான் கிஷோரையும் கூட்டிட்டு வந்துறேன்.. அவன் அங்க தனியா உக்காந்திட்டு இருப்பான்” என்றாள் கலை..

ராஜாராம்: “ஏன் கிஷோர் என்ன குழந்தையா? தனியா இருக்க மாட்டாரா??”

கலை உதட்டை பிதுக்கி “ப்ப்பாஆஆ!! பாவம் ல ப்பா!! தனியா உம்முன்னு உக்காந்திட்டு இருப்பான். இந்த அம்மா வேற வந்ததுல அவனை முறைச்சிட்டே இருக்கு”

செல்லம் கொஞ்சும் தன் மகளின் அழகை ரசித்த ராஜாராம் புன்னகையுடன் “சரிம்மா போய் கூட்டி வா”

“ஈஈஈஈ…” என்று பற்களை காட்டிவிட்டு அங்கிருந்து கீழே ஓடி வந்தாள்.. அங்கே கிஷோர் பாவமாக திருவிழாவில் தொலைந்த குழந்தை போல அமைதியாக உக்காந்திருக்க, அந்த குழந்தையை கடத்த போகும் பிள்ளைபிடிப்பவர்கள் போல மஞ்சுவும் ராகுலும் அவனை முறைத்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இறக்கைகள் இல்லாத தேவதையாக அங்கு வந்த கலை அவன் கையை பிடித்து இழுத்து மாடிக்கு அழைத்துச் சென்றாள்.. தன்னுடைய கையை அவளிடம் விட்டுவிட்டு பின்னாலிருந்து அவளை ரசித்துக் கொண்டு, அவள் கூந்தல் முடிகளின் உரசல்களை முகத்தில் வாங்கிக் கொண்டு, அவள் பெண் வாசனையை நாசிக்குள் இழுத்துக் கொண்டு, அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருந்தான்..

படிக்கட்டின் பாதியில் நின்ற கலை அவன் தோளை பிடித்து சுவற்றோடு சாய்த்தாள். சுடிதாரில் முட்டி நிற்கும் அவள் மார்பை கிஷோரின் நெஞ்சில் அழுத்தி அவன் மேல் சாய்ந்த கலை, இமைகள் பாதி மூடிய கண்களோடு அவனை காதலாக பார்த்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ஏய் கலை!! உங்கப்பா இல்லேன்னா உங்கம்மா யாராச்சும் வந்துட போறாங்க டி”

அவன் பதற்றத்தை சட்டை செய்து கொள்ளாமல் “எங்கப்பா க்கு உன்னை பிடிச்சுருக்கு டா, ப்ளீஸ் டா சீக்கிரமே எனக்கு புருஷனாகிரு டா” என்று அவன் உதட்டில் முத்தமிட்டாள் கலை..