இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 40

ராஜாராம் பேச ஆரம்பித்தார்..

“அப்படியா!! எதுக்கு மேனேஜர் போஸ்டிங் இப்போ??” ராஜாராம் சோஃபாவில் உக்காந்தவாறே பின்னால் திரும்பி அடுப்பாங்கரையில் காஃபி போட்டுக் கொண்டிருந்த மஞ்சுவை ஒருமுறை பார்த்து விட்டு திரும்பி ராகுலிடம் “மேடம் அப்படி என்ன சாதிச்சுட்டாங்க??”

“என் அம்மாவை ஏமாத்துன மாதிரி, முடிஞ்சா எங்கப்பா வ ஏமாத்தி பாருடா பாப்போம் நாயே!! ஒழுங்கா ஓடி போயிரு.. இல்லேன்னா எங்கப்பா கிட்ட உதை வாங்கிட்டு தான் போவ” என்று கலை தன் மனதுக்குள் கருவிக்கொண்டு ராகுலை முறைத்துக் கொண்டிருந்தாள்..

“அ… அது அங்கிள்” என்ற ராகுல் எச்சியை தொண்டைக்குள் முழுங்கினான்.. “அங்கிள் போன வருஷம் நல்ல ப்ராஃபிட், அதுல ஆண்ட்டி நல்லா ஒர்க் பண்ணாங்க.. அதான்..” சொல்லிவிட்டு ராஜாராமை பார்த்து மறுபடியும் பல்லை இளித்துக் காட்டினான்.. கலையின் வேலை பறித்து மஞ்சுவிடம் நாடகமாடியதை போல் அவனால் ராஜாராமிடம் ஆட முடியவில்லை, அவன் ராஜாராமிடம் பேச்சை வளர்ப்பதை முற்றிலுமாக தவிர்த்தான். விட்டால் போதும் இங்கிருந்து இப்பொழுது ஓடி விடலாம் என்றிருந்தான்..

ராஜாராமின் கம்பீரத்தையும் தெளிவையும் கிஷோர் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.. மறுபக்கம் ராகுலின் இந்த பதற்றத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்து வியப்புற்றான்..

ராஜாராம்: அதே கூர்மையான பார்வையுடன் “ம்ம்ம்ம்…” என்றார்.. அந்த ம்ம்ம் என்ற ஒலியே சிங்கத்தின் சின்ன உறுமலை போன்று தோன்றியது ராகுலுக்கு.. மேலும் அவனை கேள்வியால் துளைக்க விரும்பாமல் “சரி.. சாப்பிட ஆண்ட்டி ஏதாச்சும் கொடுத்துச்சா” என்றார்.

ராகுல் வாயை திறப்பதற்குள், கையில் தட்டுடனும் அதில் ஐந்து டம்ளருடனும் வந்த மஞ்சு “இல்லங்க, தம்பியும் இப்போ தான் வந்துச்சு.. அதான் எதுவும் குடுக்கல” என்று சொல்லிவிட்டு எல்லாருக்கும் காஃபி கொடுத்துவிட்டு கடைசியாக பாவமாக உட்கார்ந்திருந்த கிஷோருக்கும் முறைத்துக் கொண்டே கொடுத்தாள்..