இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 35

இவ்வளவு நேரம் ராகுலின் அட்டகாசத்தால் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த கலை சோஃபாவிலிருந்து துள்ளிக் குதித்து போய் அவளுடைய அப்பாவை கட்டிப்பிடித்து அவள் முகத்தை அவர் மார்பில் புதைத்து கண்களில் தேங்கி இருந்து சில துளி கண்ணீரை அவருடைய வெண்மை சட்டையில் துடைத்துவிட்டு தலையை நிமிர்ந்து அவர் முகத்தை காக்க வந்த தெய்வத்தை போல் பார்த்தாள்.

ராஜாராம்: (கலையின் தலையை ஆதரவாக தடவி கொடுத்து சிரித்தவாறு) அட!!! என்னடா தங்கம் அப்பாவை ரொம்ப வருஷம் கழிச்சு பாக்குற மாதிரி ஓடி வந்து கட்டிப்பிடிக்குற.

கலை: “ஒண்ணுமில்ல வந்து உக்காருங்க ப்பா” என்று அவர் கையை பிடித்து இழுத்து ஒரு தனி சோஃபாவில் உக்கார வைத்துவிட்டு ராகுலை பார்த்து முறைத்தாள்..

பதற்றத்தால் வியர்த்த நெற்றியை துடைத்துக் கொண்டிருந்த ராகுலின் பக்கம் ராஜாராமின் கண்கள் சென்றது. அதை உணர்ந்த ராகுலும் அவரை பார்த்து பற்கள் தெரிய சிரித்தான்..

ராஜாராம் பதிலுக்கு தன் உதட்டின் இரு ஓரத்தையும் சின்னதாய் அகட்டி கடமைக்கென சின்ன புன்னகை காட்டி விட்டு பேச ஆரம்பித்தார்..

ராஜாராம் என்பவர் விருந்தோம்பல் அறிந்த நல்ல குணமுடைய சிறந்த மனிதர். அப்படிப்பட்டவர் ராகுலிடம் இப்படி நடந்து கொள்வதன் காரணம் என்ன? மஞ்சுவும் ராகுலின் அம்மா மரகதமும் சிறுவயது முதலே தோழிகள், ஆதலால் இரு குடும்பத்தாரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகம்.. ராகுலின் குணாதீசியங்களில் ஓரளவை ராஜாராம் முன்கூட்டியே அறிந்தவர் தான், அதுவே இன்று ராகுல் அவரின் மனைவியை அனைத்திருந்த விதத்தை கண்டு கோபமுற்றதே அவர் நடத்தையின் காரணம்..

“என்ன தம்பி!! நம்ம வீடு பக்கம்?”

“இல்ல அங்கிள், அது.. அ..:” ராகுலுக்கு எங்கே இருந்து ஆரம்பிப்பது என தெரியாமல் திணறினான். மஞ்சுவிடம் நேர்த்தியாக சொன்ன அனைத்தையும் தலைகீழாக உளறினான்.. “அங்கிள் அது…. ஆண்ட்டி க்கு மேனேஜர் போஸ்டிங் கொடுக்க நாங்க மு… முடிவு பண்ணிருக்கோம்” திக்கி திக்கி சொன்னான்.

ராஜாராமோ மஞ்சுவை போல தாம் தீமென்று குதிக்கவில்லை.. மாறாக அவர் புருவங்கள் இரண்டும் சுருங்கியது, கை விரல்கள் பத்தும் ஒன்றோடு ஒன்று பின்னியது, சோஃபாவில் சாய்ந்திருந்த அவரின் முதுகு நிமிர்ந்தது.. அவரின் விழிகள் ராகுலை உற்று நோக்கி ஆராய்ந்தது..

ராஜாராமின் திடகாத்திரமான தோற்றமே ராகுலுக்கு சற்று பதற்றத்தை ஆரம்பம் முதலே கொடுத்துக் கொண்டிருக்க, ராஜாராமின் இந்த பார்வை அவனை மேலும் ஆட்டியது..