இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 18

“அப்புறம் தம்பி மரகதம் எப்புடி இருக்கிறா? அவளை பாத்தே ரொம்ப நாள் ஆச்சு, அவளையும் ஒரு நாள் வீட்டு பக்கம் வரச்சொல்லுங்க”

“அம்மாவுக்கு என்ன ஆண்ட்டி, ஜம்முன்னு இருக்காங்க, அவங்க தான் வேளச்சேரி பிரான்ச் ஐ முழுசா பாத்துக்குறாங்க. அதனால கொஞ்சம் பிசியா இருக்காங்க”

“சரி தம்பி!! அப்புறம் என்ன விஷயம் அதிசயமா நம்ம வீட்டுக்கெல்லாம் வந்துருக்கீங்க?”

கலையும் கிஷோரும் படபடப்புடன், பதற்றத்துடன் ராகுல் என்ன சொல்ல போகிறான் என்று கவனித்தனர்.

என்ன சொல்ல போகிறான்? நான் அடித்ததை சொல்வானா? அதனால தான் உங்க பொண்ணு க்கு வேலை போக வச்சேன், அதே மாதிரி உங்க வேலையும் போக வைக்க போறேன் என்று சொல்வானோ? என்றெல்லாம் காலை சிந்தித்து கொண்டிருந்தாள்..

“ஆக்ட்சுவலா ஆண்ட்டி நான் கலை கூட பேசலாம் ன்னு தான் வந்தேன்” என்றவன் கலையிடம் திரும்பி “ஏன் கலை என்னாச்சு உங்களுக்கு, ஏன் ஸடன்னா வேலைய விட்டு நின்னீங்க. சுபர்ணா கிட்ட கூட நீங்க சரியா ரீசன் சொல்லல ன்னு சொல்லி வருத்தப்பட்டா”

ஒரு பெரிய குண்டை லாவகமாக கலையின் மேல் வீசி விட்டிருந்தான்.. இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.. கிஷோர் பேயறைந்தது போல் திகைத்து போய் இரு கை விரல்களை ஒன்றுடன் ஒன்றாக பின்னி அமைதி காத்தான்..

“ராகுலை அடிச்சேன், அதனால அவன் தான் என்னோட வேலை போக வச்சான்” என்ற உண்மையை சொல்ல முடியாமல் ராகுலை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் கலை.

எல்லாரையும் விட மஞ்சுவுக்கு தான் பலத்த அதிர்ச்சி.. வீட்டிற்கு வரும் இரு சம்பளத்தில் ஒன்று நின்று போனால், அந்த வலி அவளை பயங்கரமாய் தாக்க, பக்கத்தில் இருந்த கலையின் கையை பிடித்து இறுக்கினாள்..

“யேய்!! என்னடி பண்ணி வச்சுருக்க, எதுக்கு வேலையை வேண்டாம் ன்னு சொல்லிருக்க.. உங்கப்பன் சொத்து நெறய சேத்து வச்சிருக்கான் ன்னு நினைப்போ, இல்ல உனக்கு கலெக்டர் வேலை காத்துக்கிட்டு இருக்கா”

ஆனந்தத்தால் வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிய ராகுல் “இருங்க ஆண்ட்டி கோவப்படாதீங்க, நானே கேக்குறேன்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கலையிடம் திரும்பி “உங்ககூட வேலை பாக்குற பொண்ணு வேற மாதிரி சொல்லுது கலை. நீங்க யாரையோ லவ் பண்ணுறீங்க ன்னும், அதனால வேலை பிடிக்கல ன்னு வேலை விட்டு நின்னதாவும் சொல்லுது. அது உண்மையா கலை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *