யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 9 237

ரவியின் பின்னாலிருந்து அந்த இரு மர்ம நபர்கள் வந்து அவனுக்கு முன் நின்றனர்…. ரவி அவர்களை பயத்துடன் பார்க்க தொடங்கினான். . இரு நபர்களும் உடல் முழுவதும் கோணி பையை சுற்றி, தலையில முகமூடி அணிந்து. இருந்தனர்.. இப்போது அவர்கள் யாரென்று யாராலும் அடையாலம் தெரிவிக்க முடியாது. .. அந்த அளவிற்கு அவர்களின் வேஷம் இருந்தது..

ஒரு நபர் நல்ல உயரத்துடனும்.. மற்றொரு நபர் உடல் பருமனாகவும் சிறிது உயரம் குறைவாகவும்.. இருந்தனர்… ரவி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எங்களை விட்டுடுங்கள் என்று ” ம்ம். ….ம்.ம்.. ” என கை கால்களை அசைத்து கூறினான்..

இருவரும் ரவியின் அருகில் வந்து சிறிது நேரம் ஏதோ யோசனையுடன் அவனை பார்த்தனர்… பின்… பருமனாக இருக்கும் நபர் ஏதோ சைகையில் கூற உயராமாய் இருக்கும் நபர் அதை புரிந்து கொண்டு… வடிவுக்கரசிக்கு அருகில் சென்றனர்..

ரவிக்கு அவர்கள் தன் அம்மாவை “என்ன செய்ய போகிறார்களோ” என்று இந்த நினைப்பே அவனின் கண்ணில் தாரை தாரையாக நீர் பெருக்கெடுத்து வழிந்தது.. பாவம் கை கால் கட்டபட்ட நிலையில் அவனால் கண்ணீர் விடுவதை விட வேறென்ன செய்ய முடியும்….

அந்த இரு நபர்களும் வடிவை நெருங்கினர்… ஒல்லியாக இருந்தவன் வடிவின் மீது தண்ணீரை தெளித்தான்… எந்த பயனும் இல்லை. . மீண்டும் தெளித்தான்.. அப்போதும் அதே நிலைதான் .. பின் அவளின் கன்னத்தை தட்டினான்….

இப்போது வடிவு… தலை தொங்கியபடி மெதுவாக கண்களை திறந்தாள். ..முதலில் அவள் கண்ணுக்கு பட்டது தன் கால்களும் கைகளும் விரித்து இரண்டு மரத்தில் கட்டபட்டிருந்ததுதான்… என்ன ஆயிற்று என குழப்பத்துடன்… தலை நிமிர்ந்து எதிரில் நின்றிருந்த வித்தியாசமான அந்த இரு மர்ம நமர்களை கண்டதும் அவள் நடுங்கினாள்…

வடிவின் கண்ணுக்கு அந்த இருவரும்… உடம்பில் கோணி பையை சுற்றி தங்களது தொற்றத்தை மறைத்து முகமூடி அணிந்து மிக கொடுரமாக இருந்தார்கள்..அவர்களை கண்டதும் மனதில் ஒரு வித பயத்தை உண்டானது… திடிரென தன் மகனின் நினைப்பு வந்தது… எங்கே அவன் என்று கண்களை உருட்டி தலையை ஆட்டி தேடினாள்…

தலையை உயர்த்தி பார்த்தாள். .. நின்றிருந்த அந்த இருவரின் பின்பக்கமாக ரவியின் முகம் மட்டும் தெரிந்தது… அந்த இருவர் வடிவின் முயற்சியை கண்டதும் விளகினார்கள்.. அப்போது தன் மகனின் நிலைமையை பார்த்து… கொதித்து போனாள்… “ஏய். … ஏன்டா இப்படி எங்கள கட்டி போட்டுரிக்கிங்க…” என கத்தினாள்..

3 Comments

  1. Story semma iyalpa nadakuramatri solrenga next part ku wait pannran

  2. Very nice
    Quickly updated nxt episode story

Comments are closed.