யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 9 179

சுவாதி ” தேங்க்ஸ். .. டா… ஆனா எப்பவும் போல சாதாரனமாகத்தான் சமச்சேன்.. நீ இந்த அளவு சாப்பிடவேனு நான் எதிர்பாக்கல. . ” என்றாள்..

ரவி ” என்ன. .. இதுவே. . சாதாரன சமையலா… அப்ப உங்க ஹஸ்பண்ட் ரோம்ப குடுத்து வச்சவரு… ஆண்ட்டி…”

சுவாதி ” அப்போ… நீ என்னய கல்யாணம் பன்னிக்கிட்டா… நீயும் கொடுத்து வச்சவனா ஆயிடுவே… பன்னிக்கிறயா டா…??” என விளையாட்டாக கூறி சிரிக்க ஆரம்பித்தாள்.

இதை கேட்ட தேன்மொழியும் வடிவுக்கரசியும் … சுவாதி கூட சேர்ந்து சிரித்து கொண்டிருந்தனர்.

வடிவு ” ஏய்…. சுவாதி நீ செஞ்சாலும் செய்வ…. உன் கிட்ட கொஞ்சம் என் பையன ஜாக்கிரதையா இருக்க சொல்லனும்..” என்றாள்.

இவ்வாறு சுவாதி வீடே கலகலப்பாக இருந்தது… அவர்களின் சிரிப்பு சத்தத்தை ஜானகி கடுப்புடன் கேட்டுகொண்டிருந்தாள்.. ஆம்… சுவாதி வீட்டிற்கு பின்னாடி வீடுதான் பட்டாபி வீடு…
அங்கு ஜானகி ஜன்னலில் சாய்ந்த படியே ” சிரிடி நல்லா சிரிச்சிக்கோ நீ சிரிக்குற கடைசி சிரிப்பு இதுதான். .. என் மேலேயே கை வச்சிட்டுல… இன்னைக்கு உனக்கு இருக்குடி ” என வடிவை பழிவாங்க சரியான நேரத்திற்கு காத்திருந்தாள்.
பட்டாபி காலையிலேயே டவுனுக்கு சென்று ரகசியமாக சில பொருட்களை வாங்கி ஜானகியிடம் கொடுத்திருந்தான்.

வடிவு ” ஏய்.. வாங்க பா. எல்லாரும் சேந்து.. தோட்டம்,* வயலு , கெணற..லாம் போய் பாத்துட்டு வரலாம் ” என்றாள்.

தேன் ” மா…. நாளைக்கு போலாம்..மா.. வயிறு புல்லா சாப்ட்டேன்… டயர்டா இருக்கு..” என்றாள்

சுவாதி ” ஆமா டி. .. மதியான டைம்ல வேனாம். … நாளைக்கு மார்னிங்கே போலாம். .” என்றாள்

பின்பு நாளைக்கே போகலாம் என முடிவெடுத்து மதிய நேர குட்டி தூக்கத்திற்காக சுவாதி வீட்டிலேயே படுத்தனர் … அனைவரும் படுத்த ஐந்தாவது நிமிடத்தில்..

ரவி ” மா…. தூக்கமே வரல … போர் அடிக்குது… “

3 Comments

  1. Story semma iyalpa nadakuramatri solrenga next part ku wait pannran

  2. Very nice
    Quickly updated nxt episode story

Comments are closed.