கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 46 10

கிளாட் டு மீட் யூ சார்… சுனில் சட்டென எழுந்து மரியாதையுடன் செல்வாவின் கையை பற்றிக் குலுக்கினான். செல்வா பதிலேதும் சொல்லாமல் அவன் கையை கடனேயென்று, மரியாதை நிமித்தம் வேண்டா வெறுப்பாக குலுக்கினான்.

செல்வா சுனிலைப் பார்த்த பார்வையில் நிச்சயமாக நட்பு என்பது மருந்துக்கும் இல்லை. செல்வாவின் முகத்தில் ஓடிய உணர்ச்சியை துல்லியமாக இனம் கண்டு கொண்டான், சுனில். பஜ்ரங்பலி… இவன் மனசுல என்ன ஓடுதுன்னு என்னாலப் புரிஞ்சுக்க முடியுது… ஆனா உன் மனசுல என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும்..? சுனில் மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.

***

“மேடம்.. இன்னைக்கு நான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே கிளம்பறேன்… ஒரு ரெண்டு பேப்பர்தான் என் டேபிள்ல பாக்கியிருக்கு.. நாளைக்கு அதை முடிச்சிடறேன்..” தன் சிஸ்டத்தை ஷட்டவுன் செய்தவள், தன் டிராயர்களை பூட்டி சாவியை தன் கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள். பையை தோளில் மாட்டிக்கொண்டு, சாவித்திரியிடம் சென்று நின்றாள்.

“மகராசியா போய் வாம்மா… நான் ஏன் குறுக்குல வரப்போறேன்…?” வழக்கமான பாணியில் அவள் பேசினாள்.

“செல்வா எங்கேயாவது அமைதியா உக்காந்து காஃபி குடிக்கணும். காலையிலேருந்து எனக்கு செமை வேலை. லேசா தலை வலிக்கற மாதிரி இருக்கு. பக்கத்துல நல்லதா ஏதாவது ஹோட்டல் இருக்கா?” தன் நெற்றிப்பொட்டை நீவிக்கொண்டே பேசினாள், சுகன்யா.

சுகன்யாவும், செல்வாவும், ஒருவர் தோளில் ஒருவர் தோள் உரச, ஒருவர் முகத்தை ஒருவர், விழிகளில் போதையுடன் அவ்வப்போது விழுங்கிக்கொண்டு, அலுவலக பார்க்கிங்கை நோக்கி மெல்ல நடந்து கொண்டிருந்தார்கள்.

“ஏன் உனக்கு காஃபி போடறது எப்டீன்னு மறந்து போச்சா? இல்லே உன் வீட்டுச் சாவியைத் தொலைச்சிட்டியா?” விழிகளில் குறுகுறுப்புடன் செல்வா அவளை நோக்கினான்.

“இப்ப நீயும் என்கூட என் வீட்டுக்கு வரப்போறியா?” சுகன்யா தன் கண்களில் ஆசையும், ஆர்வமுமாக அவன் முகத்தைப் பார்த்தாள்.

அப்பா இன்னைக்கு வீட்டுக்கு லேட்டா வருவேன்னு சொல்லியிருக்கார். செல்வா என் கூட என் வீட்டுக்கு வந்தான்னா, பீச்சுல உக்காந்து பேசறதை தவிர்க்கலாம். இப்பல்லாம் அங்கே ரெண்டு நிமிஷம் நிம்மதியா உக்காரமுடியலை.

ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பாத்து ஆசையா மனம்விட்டு பேசமுடியலை. பேசிக்கிட்டு இருக்கறப்ப, வேலையே இல்லாத பொறுக்கிங்க, நாய்க்கு மூச்சு இறைக்கற மாதிரி பெருமூச்சு விட்டுக்கிட்டு, ஜோடியா உக்காந்திருக்கற எங்களை சுத்தி சுத்தி வந்து மோப்பம் புடிக்கறதுலேருந்து தப்பிச்சிக்கலாம்.

செல்வாவுக்கு என் கையால ஆசையா காபி போட்டுக்குடுக்கலாம். நிம்மதியா கொஞ்ச நேரம் ஜாலியா அவன்கூட அரட்டையடிக்கலாம். அவனை எதாவது ஒரு நல்லப் பாட்டு பாடச் சொல்லி கேக்கலாம். எவ்வளவு நாளாச்சு அவன் பாடறதைக் கேட்டு? அவன் பாடறதைக் கேட்டுக்கிட்டே ராத்திரிக்கான சமையல் வேலையையும் கவனிக்கலாம். இதையெல்லாம் நினைக்கும்போதே சுகன்யாவின் இதயத்துடிப்பு சட்டென அதிகமானது.