கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 10 8

“வலிச்சா வலிக்கட்டும்; எனக்கு உன் மேல ஆசை ஆசையா வருது; நான் அப்படித்தான் கட்டிக்கிட்டுத் தொங்குவேன்” தன் தாயின் கன்னத்தில் முத்தமிட்டாள் அவள். ம்ம்ம்ம் … ராஜாத்தியாட்டம் ஒரு பொண்ணு எனக்கு பொறந்திருக்கா? இந்த வயசுல தன்னைப்பத்தி மட்டும் கவலைப்படாம, தன் அம்மாவோட மன உணர்ச்சிகளைப் பத்தியும், அவ உடல் உணர்ச்சிகளையும் பத்தியும் கவலைப்படற பொண்ணு. சுந்தரியின் மனதில் மகிழ்ச்சி பீறிக்கொண்டு வந்தது. மறுபுறம் அவள் மனம் வெதும்பியது; இவளை மாதிரி ஒரு தங்கமான பொண்ணைப் பெத்துட்டு, பக்கத்துல இருந்து புத்திர சுகத்தை அனுபவிக்க குடுப்பனை இல்லாம, அந்த குடிகாரப் பாவி எங்களையும் தவிக்கவிட்டு, அவனும் எங்க கிடந்து தவிக்கிறானோ தெரியலையே? காலையிலேருந்து பாழாப் போற மனசுல அவனைப் பத்திய நெனப்பு ஏன் வந்து வந்து போகுது?
“நான் உனக்கு குழந்தையில்லையா?” சுகன்யா சிணுங்கினாள்; ஆசையுடன் கொஞ்சினாள்.
“நீ என் குழந்தைதான்; யார் இல்லேன்னது; ஆன இப்ப நீ வளர்ந்த குழந்தை … அதுக்கு ஏத்த மாதிரி நீ பிஹேவ் பண்ணணும் … பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க; அவள் பெத்த மனம் அவளைப் பார்க்க பார்க்கப் பூரித்தது. … சரி சரி … கொஞ்சினது போதும் என்னை; வந்து சாப்பிடு, அப்புறம் நேரத்துக்கு படுத்து தூங்கு … திருப்பியும் போனை எடுத்து வெச்சுக்கிட்டு அவன் கிட்ட ராத்திரி பூரா பேச ஆரம்பிச்சிடாதே.” சொன்னவள் சிரித்தவாறு சுகன்யாவின் கையை ஆசையாகப் பற்றிக்கொண்டாள்.
“என்னப் பண்ணேம்மா நாள் பூரா?” நொய் உப்புமா … சூப்பரா இருக்கு … தேங்காய் சட்டினியுடன் சேர்த்து உப்புமாவை மென்றுவாறே கேட்டாள் சுகன்யா.
“காலையில வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு வேணி வந்திருந்தா; அவ கூட பேசிகிட்டிருந்தேன்; உன்னைத் தங்கமான பொண்ணுன்னு கொண்டாடினா; பெத்தவளுக்கு வேற என்னடி வேணும்? எனக்கு மனசு நெறைஞ்சு போச்சுடி; செத்த நேரம் தூங்கினேன்; ரொம்ப நாளாச்சு இப்படி மதியானத்துல நிம்மதியா படுத்து; அப்புறம் டிஃபன் பண்ணி வெச்சுட்டு மாணிக்கம் அண்ணாச்சி கூட கோவிலுக்கு போய்ட்டு வந்தேன்.
“அம்மா, நாளைக்கு நைட் நான் தான் உனக்கு சமையல் பண்ணி போடப்போறேன்.”
“ஆகட்டும் … நாளைக்கு அந்த பிள்ளையை பாக்க போவலையா நீ?”
“இல்லம்மா … இப்பதான் உடம்பு அவனுக்கு தேவலயா ஆயிடுச்சே? தினம் தினம் நான் அங்க போய் நின்னாலும் அவன் அம்மா என்னை சீப்பா நினைச்சுக்கப் போறாங்கன்னு இருக்கு.”
“சரியா சொன்னே; நானே உங்கிட்ட இதுபத்தி பேசணும்ன்னு நினைச்ச்சேன்.”
“எனக்கு உன் கூட இருக்கணும்ன்னு இருக்குதுமா? உன்னை எங்கயாவது வெளியில கூப்பிட்டுக்கிட்டு போய் உனக்கு பிடிச்சதை வாங்கிக் கொடுக்கணும்ன்னு ஆசையா இருக்கும்மா? நாளைன்னைக்கு எங்களுக்கெல்லாம் ஆபீஸ் லீவு; பக்கத்துலதான் காஞ்சீபுரம் … மாபலிபுரம்ன்னு … காஞ்சீபுரத்துல நெறைய கோவில் குளம்முன்னு இருக்கு; நீ போகணும்ன்னு சொல்லிக்கிட்டிருந்தியே? போய் வரலாமா; காலங்காத்தால எழுந்து குளிச்சுட்டு ஏஸி பஸ்ல போனா, ரெண்டு ரெண்டரை மணி நேரம் தான் ட்ராவல் … வரதராஜர் கோவில், அப்புறம் காமாட்சியம்மன்னை தரிசனம் பண்ணிட்டு, அந்த ஊர்லேயே மதியம் சாப்பிட்டுக்கலாம். சாயந்திரத்துக்குள்ள திரும்பி வந்துடலாம்?”
“ம்ம்ம் … போய் வரலாம்” கையை கழுவிவிட்டு வந்த சுந்தரி தான் ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த தோல் பையைத் திறந்து, ஒரு புது தங்கச்சங்கிலியை எடுத்தாள்,
“சுகா … கண்ணு! இங்கப் பாரு, உனக்காக நான் என்ன வெச்சிருக்கேன்னு; வந்ததுலேருந்து இதை எடுத்து உன் கழுத்துல போட்டு பாக்கணும்ன்னு நினைக்கிறேன்; முடியலை; நீ ஒரே அலைச்சலா ஓடிக்கிட்டு இருக்கே; இன்னைக்கு நாள் நல்லா இருக்கு; இதை கழுத்துல போட்டுக்கடி.”
“இப்ப எதுக்கும்ம்மா இதை வாங்கினே? … எனக்கு வேணும்னா நான் கேக்க மாட்டேனா? எத்தனை பவுன்மா … நல்லா வெயிட்டா இருக்கு; நீ போட்டுக்கம்மா முதல்ல … எங்கிட்ட இருக்கற செயினையே நான் போட்டுக்கறதுல்ல” சுந்தரியின் கையில் பளபளத்தை தங்கச் செயினை கையில் வாங்கிய சுகன்யாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. நகையை விரும்பாதவள் ஒரு பெண்ணாகவே இருக்கமுடியாது!

“சுகா, நான் உனக்குன்னுத்தான் வாங்கினேன்ம்மா … உன் கல்யாணத்துக்கு ஒன்னு ரெண்டு உருப்படி தேவைதானே? நாலு பவுனு; இப்ப சின்னதா லட்சுமி டாலர் கோத்திருக்கு இதுல; வேணும்னா டாலரை கழட்டிட்டு, உன் கல்யாணத்துக்கு அப்புறமா நீ தாலியை கூட இதுலயே கோத்துக்கலாம் … வெளியே போய் வர பொண்ணு நீ; அது பாட்டுக்கு கழுத்துல கிடக்கும். எனக்கு புரமோஷன் கிடைச்சதுக்கப்புறம் இப்பத்தான் அதுக்கான அரியர்ஸ் வந்தது … அதை ஒரு நகையா மாத்திட்டேண்டி செல்லம்.”
“அம்மா நீயே போட்டுவிடும்ம்மா” சுகன்யாவின் கழுத்தில் செயினை மாட்டிய சுந்தரி தன் பெண்ணின் அழகை கண்ணும் மனமும் நிரம்ப பார்த்தாள். அந்த குடிகாரனுக்கு கூட இருந்து இதெல்லாம் பாத்து அனுபவிக்க குடுத்து வெக்கலை. சட்டென தன் கணவனின் நினைவு மீண்டும் வர அவள் திடுக்கிட்டாள். எனக்கென்ன ஆச்சு? இத்தனை வருஷமா அவன் நெனப்பு இல்லாம நிம்மதியா வாழ்ந்துட்டேன். நேத்து இவ என் அப்பா எங்கேன்னு கேட்டா, அதுலேருந்து திரும்ப திரும்ப இவன் நெனப்பு என்னை அலைக்கழிக்குது. அவள் மனம் சலித்துக்கொண்டது.
“தேங்க்ஸ்ம்ம்மா” சுகன்யா தன் தாயின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள்.
“பத்திரமா வெச்சுக்கடி சுகா …

“சரிம்ம்மா … நான் என்னா சின்னக்குழந்தையாம்ம்மா … இதெல்லாம் எனக்கு தெரியாதா? ம்ம்ம்… வேற என்னல்லாம் என் கல்யாணத்துக்குன்னு நீ வாங்கி வெச்சிருக்கே?”
“முதல்ல அந்த மல்லிகா