ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 2 63

” ம்.. போலாங்க…”

புறப்பட்டுத் தயாராக நின்றிருந்த… கோவை தனியார் பேருந்தில் ஏறிக்கொண்டோம். பேருந்துக்குள் விளக்கு எரிந்து கொண்டிருக்க… சினிமாப் பாடல் இரைந்து கொண்டிருந்தது..!!

பேருந்தில்… ஓட்டுனர்.. நடத்துனர் தவிற.. முன்பக்கத்தில் மூன்று பெண்களும்… பின்பக்கத்தில் ஒரு வயதானவரும் மட்டுமே இருந்தனர்.

பேருந்தின் மத்தியில் உட்கார்ந்து கொள்ள… பேருந்து புறப்பட்டு விட்டது.
” ஆமா.. நீ.. பத்ரகாளி அம்மன.. கும்பிட மாட்டியா..?” என நான் கேட்க …!

”கும்பிடுவங்க..! ஏங்க..?” என்று என்னைப் பார்த்தாய்.
” இல்ல… அங்க.. ஆத்தாள கும்பிடாம… இங்க வந்து… பீமனையும்.. பககாசூரனையும் கும்பிட்டியே… அதான் கேட்டேன்..”
”அதுங்குளா..?” எனச் சிரித்தாய் ”நா… இந்த மாதிரி எப்ப வெளில போனாலும்.. இவங்கள கும்பிட்டுட்டுத்தானுங்க .. போவேன்..!!”
”ஓ…!! இதுமாதிரி வெளில எல்லாம் போவியா…?”
” அது… எப்பயாவதுங்க…” எனச சிரித்தாய்.
” மத்தபடி… இங்கயேதானா..?”
” ஆமாங்க…”
”டவுனுக்கெல்லாம் போக மாட்டியா…?”
”அங்கெல்லாம் பயங்க…”
”என்ன பயம்…?”
” போலீசு…??”
சிரித்தேன் ”க்கும்… அவங்களுக்கெல்லாம் பயந்துட்டு… சரி… நீ என்ன பண்ணுவ…? பாவம்…!!”
”நீங்க என்ன வேலை செய்யறீங்க…? ” என மெதுவாக என்னைக் கேட்டாய்.
” டிரைவர்..” என்றேன்.
” என்ன டிரவருங்க..?”
”டாக்ஸி டிரைவர்…”
”டாக்ஸின்னாக்கா… காருதானுங்களே..?”
”அட… அதெல்லாம் கூட தெரியுமா.. உனக்கு…?” என நான் சிரிக்க…
” போங்க… கிண்டல் பண்ணாதிங்க..” என்று சிரித்தாய். என் தோளில் கன்னம் சாய்த்தாய்.
உன் பக்கம் சாய்ந்து.. உன் தோளில் கை போட்டேன்.
”வாடகைக்கார்தான் டாக்ஸி..”
”நெனச்சங்க… அப்படித்தான்..”
”ஆமா.. உன் வீடு பட்டா நெலமா..?”
” ஆமாங்..! ஆனா.. இப்ப பட்டா.. பேங்க்ல இருக்குங்க..”
”ஏன்…?”
”லோன் வாங்கி வீடு கட்னது.. இன்னும் திருப்பலீங்க..”
” ஓ…!”

1 Comment

  1. சூப்பர் ஸ்டோரி

Comments are closed.