ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 2 63

சிரித்து ”பக்கத்து வீட்டு பையன்ங்க…” என்றாய்.

முதலில் நான்… வெளியே சென்றேன்.
என் பின்னாலேயே நீயும் வந்து.. தகரக் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டினாய்.

திரும்பி ”இருங்க…” என்று விட்டுப் பக்கத்துக் வீட்டுக்குள் போனாய்.

இப்போது.. இந்த ஏரியாவைச் சேர்ந்த… நான்கைந்து பேர்… வெளியே நின்று… வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஏரியாவின் தென்பகுதியில்… நெல்லி மலைக்காடு தெரிந்தது..!!

சிரித்துக் கொண்டே.. அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த நீ… ” நடங்க.. போலாம்..” என்றாய்.

இருவரும் இணைந்து நடந்தோம்.
நெல்லி மலைப் பக்கத்தில் இருந்த ஒரு… பொட்டல் காட்டில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்..!!

உன் ஏரியா மக்களின் கதைகளைச் சொன்னவாறு நீ… என்னுடன் நெருக்கமாகவே நடந்து வந்தாய்…!!
உன்னோடு.. ஜோடி போட்டு நடப்பதாலோ… என்னவோ… நிறையப் பேர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள்…!!

இருள் கவியும் நேரம் என்பதால் கோவிலில் அவ்வளவாகக கூட்டம் இல்லை. வெகு சிலர்தான் நடமாடிக்கொண்டிருந்தார்கள். கோவில் பக்கத்தில் இருந்த கடைகளிலிருந்து பக்தி பாடல்கள்.. இரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்தது..!!

கோவில் வளாகத்துக்குள் நுழைந்து பேருந்து நின்றிருந்த இடத்தை நோக்கிப் போக…

” சாமி கும்படறீங்களா…?” எனக் கேட்டாய்.
”நானா…?” புன்னகைத்தேன்.
” ம்..!”
” பழக்கமில்லே..!! நீ வேணா போய் கும்பிட்டுக்கோ..!!”

நீ கோவிலுககுப் போகாமல் என்னுடன் நடந்தாய்.

பக்காசூரனிடம் போனதும்
” இருங்க… கும்பிட்டு வந்தர்றேன்..” என்று விட்டு வேகமாகப் போய்..
செருப்பைக் கழற்றி விட்டு… படிகளில் ஏறி.. கைகூப்பியவாறு… பக்காசூரனையும்… பீமனையும் வலம் வந்து… அவர்கள் முன்பாக நின்று… கண்மூடிக் கண் திறந்து… இருவரின் காலடியிலும் இருந்து.. திருநிர் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு… சிரித்த.முகத்துடன் என்னிடம் வந்தாய்.!!

1 Comment

  1. சூப்பர் ஸ்டோரி

Comments are closed.