ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 2 62

” கார் ஸ்டேண்ட்ல.. பசங்க எல்லாம் இருப்பாங்க..”
சிறிது நடந்து ”பெரிய வீடுங்களா.. உங்களுது..?” எனக் கேட்டாய்.
”இல்ல.. சின்ன வீடுதான்..! ஓட்டு வீடு..!!”
”சொந்த வீடுங்களா..?”
”ஆமா… எனக்குன்னு இருக்கற ஒரே சொந்தம்..!!”
ரோட்டைப் பார்த்து நடந்து கொண்டிருந்த நீ.. சட்டென்று நிமிர்ந்து… சைடில் என்னைப் பார்த்தாய். நானும் பார்த்தேன்.
உன் நெஞ்சகம் விம்மப் பெருமூச்சு விட்டாய்.
உன் தோளில் தட்டிக் கொடுத்தேன்..!!
நடந்து கொண்டே கேட்டாய்.
”சாப்பாடெல்லாம் என்ன செய்வீங்க…?”
உன் கேள்விகள் சுலபத்தில் ஓயாது போலிருந்தது.
”சாப்பிடுவேன்..” என்றேன் குறும்பாக..!
” அது.. தெரியுங்க..! கடைலயா சாப்பிடுவீங்க..?”
”சில சமயம்…!”
”அப்றமெல்லாம்…?”
”வீட்லதான்…”
”உங்க வீட்லயா…?”
” ம்ம்…”
” யாரு செய்வாங்க…?”
”நான்தான்…”
”ஆ…!!” வியப்பு மேலிட என்னைப் பார்த்தாய் ”சாப்பாடெல்லாம் செய்வீங்களா..?”
”ம்..ம்..!!”
”நல்லா செய்வீங்களா…?”
” ஏதோ… எனக்கு தெரிஞ்சளவுக்கு..”
” உங்க கையால… சாப்பிடனுங்க…! எனக்கு ஆக்கிப் போடுவிங்களா…?”
”தாராளமா…!! இதுல என்ன இருக்கு…?”
சிறிது அமைதிக்குப் பின் கேட்டாய். ”உங்களுக்கு.. வேலைக்காரி.. வேனுங்களா..?”
”வேலைக்காரியா..? எதுக்கு..?”
”வீடு..வாசல் கூட்ட.. சோறாக்க.. அழுக்குத்துணியெல்லாம் தொவச்சுப் போட….?”
”ஓ..! அந்த வேலையெல்லாம் நீ செய்யலாம்னு யோசிக்கறியா..?”
”தப்புங்களா..? எனக்கு நீங்க.. ஒன்னுமே தர வேண்டாம்..! சாப்பிட மட்டும் ஏதாவது குடுத்தா போதும்…!! நீங்க சொல்ற வேலையெல்லாம் செய்வேன்..!!”
” அதாவது பொண்டாட்டி மாதிரி..?”
”ஐயோ… நான்.. சத்தியமா. . அப்படியெல்லாம் நெனைக்கலீங்க..! நீங்க கோயிலுக்குள்ள இருக்கற தெய்வம்.. நான் ஒரு வேலைக்காரி மாதிரி..” என தத்துவமாகப் பேசினாய்.
”ஏய்… இதெல்லாம் ஓவர்..! நான் தெய்வம் இல்ல… மனுஷன்..!! உன்னை என்கூட வெச்சுக்கறேன்னு வெய்… நாளைக்கு எனக்கு யாரு பொண்ணு தருவாங்க..? ஊர்ல என்ன பேசுவாங்க…? நான் கல்யாணம் பண்ண வேண்டாமா…? ம்…ம்..?”
ஊமையாகிவிட்டாய்.. நீ.! குணிந்த தலை நிமிராமல் தரையைப் பார்த்துக் கொண்டே நடந்தாய்..! அழுகிறாயோ.. எனத் தோண்றியது. உன் முகத்தைப் பார்த்தேன்.. சே.. இல்லை.!
உன் கை பிடித்து ”தாமரை..” என்றேன்.

சட்டென நிமிர்ந்து ”ம்..?” என என்னைப் பார்த்தாய்.
”நா சொல்றது புரியுதா..?”
” புரியுதுங்க..! என்னால நீங்க கெட்ட பேரு வாங்க வேண்டாங்க..! நா ஏதாவது தப்பா பேசிருந்தா.. என்னை மன்னிச்சுருங்க..! அறிவில்லாம பேசிட்டேன்..!!” என்றாய்..!!
”ஏய்… பரவால்ல..!!”

1 Comment

  1. சூப்பர் ஸ்டோரி

Comments are closed.