ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 2 63

”இங்க.. முன்னாடி ஒரு கடை இருந்துச்சுங்களே..?”

ம்…அதான்…”
”காசு குடுத்தீங்கன்னா.. நானே போயி…”
” பரவால்ல இரு..!! நானே போய்ட்டு வந்தர்றேன்..! இன்னிக்கு நீ.. என்னோட விருந்தாளி…!!” எனச் சொல்லி விட்டு.. கடைக்குப் போனேன்..!

அரை லிட்டர் பால்… மேரி கோல்டு பிஸ்கெட் ஒன்று வாங்கிக்கொண்டு… திரும்ப.. நீ வாசல் கதவருகே வந்து நின்று கொண்டிருந்தாய்.

” அட… இங்க ஏன் வந்து நிக்கற..? உக்காரலாமில்ல..?” என்றேன்.
” இல்ல.. பாத்தங்க..” எனச் சிரித்தாய்.
”கதவ சாத்திட்டு வா..” என்று விட்டு வீட்டுக்குள் போனேன்.

சமையல் கட்டில் நுழைந்து..சிலிண்டர் கேஸை ஓபன் செய்து விட்டு.. பால் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து… கவரை உடைத்துப் பாலை ஊற்றி விட்டு.. அடுப்பைப் பற்ற வைக்க.. நீ… என் பக்கத்தில் வந்து நின்றாய்..!

” நீ.. சமைப்பியா…தாமரை..?” என்று.. உன்னைப் பார்த்துக் கேட்டேன்.
சிரித்தாய் ” உங்களுக்கு புடிக்குமோ… என்னமோ..?”

அடுப்பில் காபி தயாராகிக்கொண்டிருக்க… சமையலறையைப் பார்த்த நீ..
”வீடெல்லாம் குப்பையாருக்கு…” என்றாய்.
” ம்…கூட்டவே இல்ல..” என்றேன்.
” இதுக்காகவே.. நீங்க.. ஒரு..” என இழுத்தாய்.

”ம்..? நான் ஒரு…?”
” இ… இல்ல…” சிரித்தவாறு.. இழுத்தாய்.
” பரவால்ல சொல்லு..”
” கல்யாணம் செஞ்சுட்டிங்கன்னா…?”
”அது சரி..” புன்னகைத்தேன்..
”ஏங்க…?” அப்பாவியாக என்னைப் பார்த்தாய்.
”பண்ணலாம்… பண்ணலாம்…” என்றேன்.
நீ.. சும்மா இருக்காமல்.. சீமாற்றை எடுத்து வந்து… சமையலறையிலிருந்து கூட்டத்தொடங்கினாய்..!!
காபி தயாராக… அதை இரண்டு பேருக்கும் ஊற்றி எடுத்துக் கொண்டு… முன்னறைக்குப் போய்… டிவி யைப் போட்டு விட்டு… நான் சேரில் உட்கார…நீ கை கழுவிக்கொண்டு.. வந்தாய்..!
”உக்காரு…” என்றேன்.
காபியை எடுத்துக் கொண்டு சேரில் உட்காராமல்… கீழே தரையில் உட்கார்ந்தாய்.
” ஏய்… சேர்ல உக்காரு..”
”பராவால்லங்க..” எனச் சிரித்தாய்.
” ஏன்…?”
” எனக்கு..இதாங்க பழக்கம்..”
”என்ன பழக்கமோ..?” என உடைத்த பிஸ்கெட் கவரை.. உன்னிடம் கொடுத்தேன் ”எடுத்துக்க..!!”
பிஸ்கெட்டை எடுத்து… காபியில் முக்கித் திண்றாய்.
காபி குடித்த பின்.. களைப்பைப் போக்க…சிறிது நேரம் படுக்க எண்ணினேன்.
எழந்து… போட்டிருந்த பேண்ட்.. சர்ட்டைக் கழற்றி விட்டு.. லுங்கியை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு…
ஜன்னலைச் சாத்திவிட்டுப் போய்… கட்டிலில் விழுந்தேன்.!
மல்லாந்து விழுந்து…

1 Comment

  1. சூப்பர் ஸ்டோரி

Comments are closed.