அம்மா நாசுக்காக அக்கா மூலமாக ரெண்டு மூன்று முறை
குழந்தையை பற்றி கேட்க,
அப்போது வெளிநாடு செல்ல மிக ஆர்வமாக இருந்த சதிஷ்
அதை பற்றி சிந்திக்க தவறினான்.
போய்ட்டு வந்து பார்த்துக்கலாம் அக்கா,
அக்கா கேட்ட கேள்விக்கு மிக சர்வ சாதாரணமாக
பதில் சொல்லிய சதிஷ்,
இப்போ ஒரு ஓட்டுநர் கேட்ட அதே கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறினான்.
தான் கேட்ட கேள்விக்கு பதில் வரலன்னு தெரிஞ்ச ஓட்டுநர்
கண்ணாடி மூலமாக அவனை பார்க்க,
சதிஷ், இல்லைங்க
ஓட்டுநர், நான் ரொம்ப தொந்தரவு பன்றேனோ சார்,
சதிஷ், இல்ல இல்ல, நான் வேற யோசனையில் இருந்தேன்.
அதன் பிறகு ஓட்டுநர் ஒன்னும் பேசல.
வீடு இருந்த தெரு வந்தவுடன் ஓட்டுனருக்கு தன் வீட்டை
காண்பிக்க டாக்சி நின்றது.
தன்னுடைய உடமைகளை எடுத்துட்டு உள்ள வந்த
சதீஷை அன்று போல அவனை வரவேற்றது
அவன் அம்மாதான்.
அதே அன்பு, அதே பாசம். கண்ணீரோடு மகனை
கட்டி தழுவி சந்தோடப்பட்டா அவன் அம்மா.
தூங்கி கொண்டு இருந்த செல்வியும் வெங்கட்டும்
இவன் குரல் கேட்டு வந்தனர்.
வெங்கட் அவன் லக்கஜ் எல்லாத்தையும் எடுத்து வைக்க
உதவி பண்ணினான்.
செல்வி எப்போதும் போல குற்ற உணர்ச்சியில் தம்பியை
பார்க்கவே தடுமாறினா.
சதிஷ் அம்மா கொடுத்த காபியை குடிச்சிட்டு பயண களைப்பு
தீர குளிச்சிட்டு வந்தான்.
அந்த காலை வேளையிலும் மகன் வரானுட்டு அவன் அம்மா
சுட சுட இட்லியும் சட்னியும் வச்சிருந்தாங்க.
சதீசுக்கு பசியே இல்லாட்டாலும் அம்மாவுக்காக அவங்க
கொடுத்த தட்டை வாங்கி சாப்பிட உட்கார்ந்தான்.
செல்வி, ஏன்டா இந்த நேரத்துல உனக்கு என்னடா பசி
தம்பிகிட்ட பேசணும்னுட்டு அவனை கலாய்ச்சா.
அம்மா, ஏண்டி, சாப்பிடுற பிள்ளையை இப்படி கேக்குற
உனக்கு வேணும்னா, நீயும் சாப்பிட வாடி.
சதிஷ், அம்மா, அக்கா சும்மாக்குத்தான் என்னை கலாய்கிறா,
சதிஷ் செல்வியை பார்க்க
அவ அமைதி ஆகிட்டா.
சாப்பிட்டு முடிச்ச சதிஷ் அமைதியாக ரூமிற்கு சென்று படுத்தான்.
செல்வி அவன் பின்னாடியே சென்று அவன் பக்கத்துல உட்கார்ந்து
தம்பி தலையை கோதி விட்டா.
அப்படியே அக்கா கையை பிடிச்சி அவன் கன்னத்துல வச்சிக்கிட்டு
கண்ணை மூடி படுத்திருந்தான் சதிஷ்.
அவள் கை ஈரமாக, சட் என்று கையை எடுத்த செல்வி
தம்பி கண்கள் ஈரமாயிருக்கிறதை கண்டு பதறினாள்.
ஆனா, அவனுக்கு ஆறுதலாக ஒன்னும் சொல்ல தோணல.
மெதுவா அவன் கண்ணீரை தொடச்சி விட்டா.
கொஞ்ச நேரம் ரெண்டு பெரும் மௌனமாக இருந்தனர்.
செல்வி, தம்பி சாரிடா,
சதிஷ்,………………மௌனம்.
செல்வி, தம்பி………….
சதிஷ் மெதுவா எழுந்து உட்கார்ந்தான்.
சதிஷ் அவளை பார்க்க
செல்வி, அவளை பார்க்க போறியாடா
சதிஷ், ஆமா அக்கா
செல்வி, உன் மன நிலைமை என்ன டா
சதிஷ், புரியல கா
செல்வி, பவித்ரா விசயத்துல என்ன……….. முடிவு……… எடுத்திருக்க…….