ஸ்ருதி Part 3 57

டேய் சம்பத் அந்த பொண்ணு கூட வருவது யாருடா அது ? அந்த ஆள் காரில் வேறு இந்திய தேசிய கொடி வேறு இருக்கு .

தெரியல பலராம்,

டேய் இந்த பொண்ணுக்கு பெரிய இடத்தில் ஆள் ஏதாவது தெரியுமா ?சிக்கல் ஏதாவது வந்து தொலைக்க போகுது.

எனக்கு அப்படி எதுவும் இருப்பதாக தெரியல பலராம் !

சரி வா போய் பார்ப்போம் .

ம் சொல்லுங்க இன்ஸ்பெக்டர் என்ன விசயம் என்று ஷெட்டி கேட்க,

சார் நீங்க யாரு என்று நான் தெரிஞ்சுக்கலாமா ?

என்னை உனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை இன்ஸ்பெக்டர்,ஏன் என்றால் நான் கர்நாடகாவில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மத்திய இணை அமைச்சர்.

எஸ் சார் என்று இன்ஸ்பெக்டர் பலராம் உடனே salute அடிக்க,

அப்பொழுது தான் ஸ்ருதிக்கு உண்மை தெரியவர ,கால்கள் தானே பின்வாங்கி அவனிடம் இடைவெளியை அதிகப்படுத்தியது.

இன்ஸ்பெக்டர் பலராம் ஷெட்டியை பார்த்து ,சார் இந்த பொண்ணு வேலை பார்த்த இவர் வீட்டில் இருந்து 40 பவுன் நகை திருடி கொண்டு வந்து விட்டது சார்.

அப்படியா இன்ஸ்பெக்டர் ,ஷெட்டி கேக்க

ஆமா சார்

சரி complaint எங்கே?

சார் அது வந்து,

சரி ஒரு பொண்ணை arrest செய்ய வேண்டும் என்றால் பெண் போலீஸ் இருக்கணும் ,அவங்க எங்கே?

அது வந்து சார் என்று பலராம் இழுக்க,

இங்கே பாருங்க இன்ஸ்பெக்டர் ,இந்த பொண்ணு அவள் காதலனால் ஏமாற்றப்பட்டு ,நேற்று அவன் இடம் இருந்து தப்பித்து என்னிடம் வந்து அடைக்கலம் கேட்டாள்.இந்த பெண் நினைத்து இருந்தால் என்னிடம் உள்ள பணம் அல்லது நகையை எளிதாக ஏமாற்றி எடுத்து சென்று இருக்க முடியும்.இந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது.கண்டுபிடிப்பதும் கடினம்.
ஆனால் நான் செய்த சிறு உதவிக்கு கூட தன்னால் முடிந்த அளவு பிரதி உபகாரமாக எதாவது எனக்கு திருப்பி தர நினைக்கிறாள்.நானாக சாப்பிடுவதற்கு வாங்கி கொடுத்தால் மிக மிக தயக்கத்துடன் தான் ஏற்று கொள்கிறாள்.இந்த பெண் நிச்சயமாக திருடி இருக்க வாய்ப்பே இல்லை.நான் இந்த பெண்ணுக்கு முழு உத்திரவாதம் தருகிறேன். என்று ஷெட்டி கூற

ஷெட்டி கூறியவற்றை கேட்டு ,ஸ்ருதிக்கு கண்களில் நீர் கசிந்தது.

சாரு ,கற்பகத்தை பார்த்து ,அம்மா அந்த uncle யாரு?

ஒரு நிமிஷம் சாரு ,அவரை நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு !என்று கற்பகம் யோசிக்க நினைவில் வரவில்லை.

இன்ஸ்பெக்டர் ஷெட்டியிடம் ,சார் எதுக்கும் ஸ்டேஷன் வரை மட்டும் வந்து ஒரு கையெழுத்து போட சொல்லுங்கள் .அது போதும்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என நினைக்கிறேன் இன்ஸ்பெக்டர்,இருங்க உங்கள் டிஜிபி கிட்ட ஃபோன் போட்டு தரேன்.

அய்யோ அதெல்லாம் வேண்டாம் சார்,வாடா சம்பத் கிளம்பலாம் .

டேய் என்னடா மச்சான், இப்படி அம்போ என்று விட்டிட்டு போற?

டேய் சம்பத் வாடா பேசாம கிளம்பி விடலாம் ,அந்தாளு டிஜிபி கிட்ட பேசுகிறேன் என்று சொல்றான். பொய் case என்று தெரிந்தால் அவ்வளவு தான் என் வேலைக்கே வேட்டு வந்து விடும் என்று கிளம்ப,

சம்பத் ,ஸ்ருதியை முறைத்து கொண்டே , இருடி இப்போ நீ தப்பி விடலாம்,உன்னை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன் என்று முணுமுணுத்து கொண்டே சென்றான்.

இன்ஸ்பெக்டர் அகன்றதை பார்த்து ,கருணாகரன் தைரியமாக வந்து ஸ்ருதியை கைபிடித்து

வா ஸ்ருதி வீட்டில் உள்ளே போகலாம் என்று இழுக்க

2 Comments

  1. கெளதம்

    கதை சூப்பர் ❤️❤️❤️❤️

Comments are closed.