ஸ்ருதி Part 3 60

இது தான் உங்க ஊரா ? ஸ்ருதி கேட்க

இல்லை ,இன்னும் 40 km செல்ல வேண்டும் ,வெளியே கார் நிற்கிறது வா போகலாம்.

டிரைவர் கார் கதவை திறக்க சென்னையில் இருந்த காரை விட ,இந்த காரின் வசதி அதிகமாக இருந்தது.

சார் அப்போ அந்த சென்னையில் இருந்த கார் ?

அது சென்னையில் இருக்கும் போது மட்டும் பயன்படுத்தி கொள்வது.நான் பெரும்பாலும் இங்கே இருப்பதால் இந்த கார் இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்கும்.

சரியாக ஒரு மணிநேரத்தில் அவன் பங்களாவை சென்று அடைய ,ஸ்ருதி அதன் ஆடம்பரத்தை பார்த்து ஆச்சரியம் ஆக

என்ன சார்,நாம் தங்கி இருந்த ஓட்டலை போலவே இருக்கு உங்க வீடு. நீங்களும் உங்க மனைவி மட்டுமா இந்த வீட்டில் உள்ளீர்கள் ?

இல்லை ,வேலை செய்கிற ஆட்கள் 6 பேர் இருக்கிறார்கள்.

ஸ்ருதி அவன் அறையில் இருந்த போட்டோவை பார்த்து ,”இது தான் உங்க மனைவியா சார்,உண்மையில் ரொம்ப அழகாக இருக்காங்க ”

ஆமாம் உன்னை போலவே ,

தாயம்மா என்று ஷெட்டி அழைக்க ,

ஒரு பெண் அவசரமாக ஓடி வந்தாள் ,அவன் குழந்தை மதனோடு

குழந்தையை அவனிடம் கொடுக்க,ஸ்ருதி அவனிடம் இருந்து குழந்தையை வாங்கி கொண்டாள்

சார் பார்ப்பதற்கு அச்சு அசல் அப்படியே உங்களை போலவே இருக்கு

ம் ,பெண் குழந்தை அவ அம்மா மாதிரி இருக்கும் .எங்களுக்கு மொத்தம் 3 குழந்தைகள்.இரட்டை குழந்தைகள் மட்டும் இப்போ அவளிடம் வெளிநாட்டில் இருக்கு. இவன் கொஞ்சம் பெரியவன் ஆக இருப்பதால் இங்கே விட்டு சென்று இருக்கிறாள்.சரி நீ போய் ரெஸ்ட் எடு ,நாளை நாம் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று குழந்தையை அவளிடம் இருந்து வாங்கி கொண்டான்.

இவங்க பேர் ஸ்ருதி ,இந்த பொண்ணை கெஸ்ட் ரூமில் தங்க வை .இவங்களுக்கு என்ன வேண்டுமோ செய்து கொடு.

ஸ்ருதி தாயம்மா உடன் அறைக்கு செல்ல ,குழந்தை அவளை பிரிய மனம் இல்லாமல் பின்னால் ஓடி வந்து கட்டி கொண்டது .

குழந்தைக்கு உங்களை பார்த்தால் அவங்க அம்மாவை பார்க்கிற மாதிரி இருக்கு என்று நினைக்கிறேன் என்று தாயம்மா ஸ்ருதியிடம் கூற ,

டேய் மதன் இங்கே வா,ஷெட்டி அழைத்தான்.

குழந்தை வராமல் அடம்பிடிக்க,

“பரவாயில்லை சார் ,என்னிடமே குழந்தை இருக்கட்டும்” என்று ஸ்ருதி தன் அறைக்கு தூக்கி சென்று விட ஷெட்டிக்கு ஏனோ இது எங்கே போய் முடிய போகிறதோ என்று பயம் வந்தது.

ஷெட்டி காலையில் கண் விழித்து அறையில் இருந்து வெளியில் வர , வீடு முழுக்க படுசுத்தமாக துடைக்கபட்டு இருந்தது.

தாயம்மா இங்கே வா ,

யாரு இதை எல்லாம் க்ளீன் செய்தது ?

ஐயா நேற்று நீங்க கூட்டி வந்த அந்த பொண்ணு தான் காலையிலேயே எந்திரித்து வேலையாட்களை வைத்து சுத்தம் செய்தது.பயங்கர சுறுசுறுப்பு .அந்த பொண்ணு கிட்ட என்னமோ இருக்கு அய்யா ,அப்படியே நம்ம வேலையாட்கள் எல்லாம் மந்திரத்திற்கு கட்டுப்பட்டது மாதிரி சொன்ன வேலையை அப்படியே செய்தார்கள்.

சார் என்ற குரல் பின்புறம் கேட்க

ஸ்ருதி ஆவி பறக்கும் காஃபி கோப்பையோடு நின்று இருக்க,

நீ ஏன் இந்த வேலை எல்லாம் செய்யற,நீ வந்த வேலையை மட்டும் பாரு என்று ஷெட்டி கோபமாக,

என்னால சும்மா எல்லாம் உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது சார் ,என்னால் முடிந்த வேலை செய்தால் மட்டும் என் உடம்பு நன்றாக இருக்கும்.

காபியை பருகிய ஷெட்டி ,ஸ்ஸ்ஸ்… காபி யார் போட்டது ?

2 Comments

  1. கெளதம்

    கதை சூப்பர் ❤️❤️❤️❤️

Comments are closed.