ஷெட்டி கேட்டபடி அனிதாவாக நடிக்க ஸ்ருதி ஒப்பு கொள்வாளா?ஒப்பு கொண்டால் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியுமா?தன்னையே இழக்கும் சூழ்நிலை வந்தால்…..?
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை சார் ,என் பொண்ணை அவர்களிடம் இருந்து காப்பாற்றியதற்கு .ஆனா உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு , ஞாபகம் தான் வர மாட்டேங்குது என்று கற்பகம் ஷெட்டியை பார்த்து கூற
ஆமாம் சார் ,எனக்கும் இதற்கு முன் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி தான் இருக்கு என்று ஸ்ருதியும் கூற,கற்பகம் மனதில் ஃபிளாஷ் ஒன்று அடித்தது.
அப்போ எங்கே ரெண்டு பேருக்கும் பார்த்த மாதிரி தான் இருக்கு என்றால் எனக்கு ஞாபகம் வந்து விட்டது சார்,ஒரு பதினைந்து வருஷம் முன்னாடி ,சுங்குவார்சத்திரம் அருகில் ஒரு சின்ன பொண்ணை காப்பாற்றினீர்கள் அல்லவா ! என்று கற்பகம் கேட்க
ஆமாம் ஒரு சின்ன பொண்ணு அவங்க அப்பா ,அம்மாவோடு அடிபட்டு கிடந்தாங்க ,அதில் அப்பா அம்மா அங்கேயே இறந்து விட்டார்கள்.பொண்ணை மட்டும் தான் காப்பாற்ற முடிந்தது.
ஸ்ருதி நீ கேட்ட இல்ல ,சிறு வயதில் என்னை யார் காப்பாற்றியது என்று,இவர்தான்மா உன்னைஅந்த இக்கட்டான நேரத்தில் இரத்தம் கொடுத்து காப்பாற்றியது.
சார் ,நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதே என்று தெரியவில்லை.அன்று என் உயிரை காப்பாற்றியது மட்டும் இல்லாமல் ,இன்று என் மானத்தையும் காப்பாற்றி உள்ளீர்கள் .நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என்றே தெரியவில்லை என்று ஸ்ருதி கண்கலங்க
கற்பகம் ஷெட்டியை பார்த்து,சார் இப்போ எனக்கு கவலை இல்லை,கடவுளாக பார்த்து தான் உங்களை இங்கே அனுப்பி இருக்கிறார்.அவ IAS படிக்கிற வரை நீங்க கொஞ்சம் அவளுக்கு துணையாக இருங்க சார்.நாங்க உங்களுக்கு காலம் முழுக்க உங்களுக்கு நன்றியோடு இருப்போம்.
சரிம்மா ,ஸ்ருதி மொபைல் ஓட்டலில் மாட்டி கொண்டது.அதே ஃபோன் no இன்னும் கொஞ்சம் நேரத்தில் வாங்கி விடலாம்.நீங்க ஸ்ருதியிடம் பேச வேண்டும் என்றால் அந்த நம்பருக்கே கால் பண்ணுங்க .
இல்ல சார் அந்த ஃபோன் no வேண்டாம் ,வேறு புது ஃபோன் நம்பர் வாங்கி கொடுத்து விடுங்கள்.பழைய ஃபோன் நம்பர் என்றால் வீண் பிரச்சினை தான் வரும்.
சரி அதுவரை ,என் ஃபோன் நம்பர் எடுத்துக்கோங்க என்று ஷெட்டி தன் நம்பரை கொடுத்தான்.
ஸ்ருதி கற்பகம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க ,நீ கவலைப்படாம போ ஸ்ருதி ,நான் உன்னை அடுத்த தடவை பார்க்கும் பொழுது கண்டிப்பாக கலெக்டர் ஆக மட்டுமே பார்க்க வேண்டும் என்று ஆசிர்வாதம் கூறினாள்.எனக்கு உன்னை பற்றி நல்லா தெரியும் ஸ்ருதி நீ யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டாய் என்று.நீ போய்ட்டு வா அப்பப்போ மறக்காம ஃபோன் பண்ணு செல்லம்.
ஸ்ருதி ,ஷெட்டியிடம் “சார் எனக்கு ஒரு சந்தேகம் ”
சொல்லு ஸ்ருதி ,
என்னை உங்க மனைவி அனிதாவாக நடிக்க சொல்றீங்க , ஆனால் அனிதா முகம் உங்க கிராம மக்களுக்கு நல்லா தெரியுமே ..!எப்படி என்னால் அங்கு அனிதாவாக நடிக்க முடியும் ?
இல்ல ஸ்ருதி ,நாங்கள் வசிப்பது நகரத்தில் .எனக்கு கல்யாணம் ஆகி இருப்பது மட்டும் தான் கிராமத்தில் தெரியும்.அவள் எப்படி இருப்பாள் ! கருப்பா ,சிவப்பா ?ஒல்லியா, குண்டா? எதுவும் தெரியாது.மேலும் நகரத்தில் கூட அனிதாவின் முகம் நிறைய பேருக்கு தெரியாது.காரணம் வயது வித்தியாசம் காரணமாக அவள் என்னுடன் வருவதற்கு கூச்சப்பட்டு வரமாட்டாள்.ஒரே ஒரு முறை சென்னை செய்தியாளர்கள் கூட்டத்தில் அவளை நானாக அறிமுகப்படுத்தியது தான்.அந்த ஃபோட்டோ கூட என் சொந்த மாவட்டத்தை சென்று சேரவில்லை.ஆமாம்..! இப்போ எதுக்கு இந்த கேள்வி எல்லாம் நீ கேட்கிற ?
ஸ்ருதி தலை கவிழ்ந்தவளாய், அது வெட்க்கமா இல்லை தன்னோட இயலாதா சூழ்நிலையா என்று தெரியாத நிலையில் “இதை கூட உங்களால் புரிந்து கூட முடியவில்லையா சார்,நான் உங்கள் மனைவியாக நடிப்பதற்கு சம்மதம். எனக்கு அறிந்தோ அறியாமலோ எனக்கு உதவி செய்து உள்ளீர்கள்.இப்போ நான் உங்கள் முன்னே நின்று பேசி கொண்டு இருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணம் நீங்கள் மட்டும் தான்.இது நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு நான் செய்யும் கைம்மாறு அவ்வளவு தான்.
ஆனால் !….
ஆனால் என்ன ஸ்ருதி ?
எனக்கு பணம் எதுவும் வேண்டாம் சார் ,என்னை படிக்க வைத்தால் மட்டும் போதும்.அதை வைத்து என் வாழ்க்கையை அமைத்து கொள்வேன்.இந்த விசயம் என் பெரியம்மாவுக்கு மட்டும் தெரியக்கூடாது.
சரி,பிற்காலத்தில் உனக்கு உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேள்.
அடுத்து இருவரும் மொபைல் showroom செல்ல
உனக்கு என்ன Mobile வேண்டும் ஸ்ருதி ,
சார் என்னிடம் பெரியம்மா கொடுத்த 4000 ரூபா இருக்கு,அந்த விலைக்குள் போதும்.
அமைதியாக இரு,உனக்கு ஒன்னும் தெரியாது,IAS படிக்க போற ஒரு நல்ல 5G mobile இருந்தா தான் நல்லா இருக்கும்.
ஹலோ brother , iphone latest model என்ன?
iPhone 14 pro available sir ,Starting price RS 2,00,000
சார் சார் ….பிளீஸ் அவ்வளவு காஸ்ட்லி மொபைல் எல்லாம் வேண்டாம் சார்.
madam , கம்மி விலை வேண்டும் என்றால் இங்கே பாருங்க இது one plus 11R 5g mobile ,it works in Oxygen OS ,the price is Just RS 56,000/-
சரி இதை bill பண்ணுங்க என்று ஷெட்டி சொல்ல ,ஸ்ருதி மீண்டும் இடைமறிக்க
என்னோட மனைவியாக இருக்க போகிறவள் இந்த மொபைல் கூட பயன்படுத்த வில்லை என்றால் எனக்கு தான் வெளியே அசிங்கம் ஸ்ருதி .அமைதியா இரு என்று கோபமாக கூற ஸ்ருதி அமைதியானாள்.
ஹலோ ப்ரோ,இவ்வளவு விலை உயர்ந்த மொபைல் வாங்கறோம்.இதுக்கு free எதுவும் கிடையாதா ? என்று ஸ்ருதி கேட்க , ஷெட்டிக்கு நகைப்பை வரவழைத்தது.

கதை சூப்பர் ❤️❤️❤️❤️
Super story