அவனை பார்த்த சந்தோஷத்தில் கட்டி பிடித்து கொண்டு சந்தோஷத்தில் தேம்பி தேம்பி அழ தொடங்கினாள்.
அவள் மோவாயை பிடித்து நிமிர்த்தி”அது தான் நான் வந்துட்டேன்ல அழாதேடா பப்பாளி”என்று அவன் சொல்ல
ஏண்டா,நேற்று என்கிட்ட சொல்லாம போன? அவன் மார்பில் செல்ல அடி அடிக்க,மீண்டும் அவளை ஆரத்தழுவி கொண்டான்.
அவளுக்கு இப்பொழுது உலகத்திலேயே பாதுகாப்பான இடம் அவன் மார்பை தவிர ஏதும் சிறந்த இடம் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை.மீண்டும் கொடி போல் அவனை கட்டி சுற்றி கொண்டாள்.அவன் வேறு யாரும் அல்ல ஷெட்டி தான்.
பின்னாடி ஓடி வந்த சம்பத்,இருவரும் கட்டி தழுவி கொண்டு இருப்பதை பார்த்து ஆத்திரம் கொண்டு,
ஏண்டி தேவிடியா,என்கிட்ட மட்டும் அப்படி முரண்டு பிடிச்சிட்டு இப்போ அவன்கிட்ட மட்டும் ஒட்டிக்கிட்டு நிக்கிற என்று வெறி வந்தவன் போல கத்தினான்.
இதை கேட்டு ஷெட்டியின் இரத்த நாளங்கள் எல்லாம் கொதித்தது.கட்டி கொண்டு நின்று இருந்த ஸ்ருதியை விலக்கி ஓடி வந்த சம்பத் மீது தன் மொத்த கோபத்தையும் சேர்த்து ஓங்கி ஒரு குத்து விட சம்பத் பத்து அடி தூரம் சென்று பின்னோக்கி விழுந்தான்.
அப்பொழுது ஸ்ருதி முகத்தை பார்க்க,அவள் கன்னத்தில் சம்பத் அடிச்ச கைரேகைகள் பதிந்து இருப்பதையும் அவள் ரவிக்கை கிழிந்து அவன் நகக்கீறல்கள் இருப்பதை பார்த்து, மேலும் கோபம் வந்தது. தன் சட்டையை கழட்டி அவளுக்கு அணிவித்து விட்டு
ஷெட்டி ஸ்ருதியை பார்த்து,”அவன் உன்னை அடிச்சானா ஸ்ருதி”
“அவன் அடிச்சது கூட எனக்கு வலிக்கலடா, ஆனா அவன் கெட்ட வார்த்தையில் திட்டியது தான்டா எனக்கு வலிக்குது”என்று அழுது கொண்டே கூற கை முஷ்டியை உயர்த்தி கொண்டு ஷெட்டி அவனிடம் சென்றான்.
அவன் சட்டை காலரை பிடித்து தூக்கிய ஷெட்டி மீண்டும் அவனை அடிக்க,அதை சம்பத் தடுத்தாலும் அவனிடம் இருந்து ஒரு வலுவற்ற எதிர்ப்பே வந்தது.
என்ன இது மாத்திரை வீரியம் குறைந்து விட்டதா?இவனை என்னால் எதிர்க்க முடியவில்லையே.இதுவரை இருந்த சக்தி எல்லாம் எங்கே போனது என்று சம்பத் மனதில் நினைத்தான்.
எங்கே இவனிடம் இருந்த சக்தியை எல்லாம் தான் ஸ்ருதி 30 நிமிடம் ஓடவிட்டு எல்லாவற்றையும் உறிஞ்சி விட்டாளே.
அவன் கையை முறுக்கி முதுகில் ஓங்கி ஷெட்டி ஒரு குத்து விட சம்பத் மூச்சு விட முடியாமல் திணறினான்.
வேறுவழியில்லை,இவன் மனசு தளரும் படி ஏதாவது சொல்லி தான் இவனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று சம்பத் நினைத்து”உன் பொண்டாட்டியை நான் முழுசா அனுபவிச்சு முடிச்சிட்டேன்.போ என் எச்சில் பட்ட உணவை போய் தின்னு போ என்று வாய் கூசாமல் அவன் கூறிய பொய்யை கேட்டு ஸ்ருதி அதிர்ச்சி அடைந்தாலும்,அடுத்து ஷெட்டி கூறிய வார்த்தைகள் அவள் நெஞ்சில் பாலை வார்த்தது.
“டேய் எச்சை,அவ நெருப்புடா என்று எனக்கு தெரியும்.நானே அவ அனுமதி இல்லாம தொட முடியாது.நீ என்னடா பெரிய சிப்சு.நான் இதுவரை கவலை பட்டது எல்லாம் அவ உயிருக்கு எந்த ஆபத்தும் வரகூடாது என்பது மட்டும் தான்.அவ எனக்கு திரும்ப கிடைத்து விட்டாள், அது மட்டும் போதும்டா எனக்கு என்று மேலும் முரட்டுத்தனமாக உதைத்தான்.
