ஷெட்டி வந்த காரில் அவனை ஏற்ற, கார் மருத்துவமனையை நோக்கி விரைந்தது.
அப்பொழுது ஸ்ருதி ,”அய்யயோ நஞ்சுண்டா அண்ணன் என்னை காப்பாற்ற வந்து அங்கே மயக்கமாக இருக்காரு”என்று கூறினாள்.
கவலைப்படாதே ஸ்ருதி,உன் அண்ணனுக்கு ஒன்னும் ஆகலை,போலீஸ் ஏற்கனவே அங்கு வந்து அவரை மீட்டு ஹாஸ்பிடல் கூட்டி போய் விட்டார்கள் என்று ஷெட்டி கூற நிம்மதி அடைந்தாள்.
டாக்டர் எந்த பாம்பு கடித்தது என்று கேட்க,ஸ்ருதி உடனே “கண்ணாடி வீரியன்” என்று சொன்னாள்.
உங்களுக்கு அடிபட்டு இருக்கே ,சிஸ்டர் இவங்களுக்கு first aid உடனே கொடுங்க
எனக்கும் ஒன்னும் இல்ல டாக்டர்,நீங்க முதலில் அவரை பாருங்க,ஸ்ருதி சொன்னாள்.
பாம்பு கடித்த இடத்தில் கட்டு ஏதாவது போட்டீர்களா? என்று டாக்டர் கேட்க
இல்ல டாக்டர்,அப்படி போட்டால் விஷம் அங்கேயே நின்று அங்கு இருக்கும் தசைகள் அழுகி விடும் என்பதால் போடல ஸ்ருதி கூறினாள்.
Very good.அப்படி கட்டு எதுவும் போட கூடாது.அதே போல வாய் வைத்தும் விஷத்தை உறிஞ்ச கூடாது. என்று டாக்டர் சொன்னார்.மேலும் பாம்பின் விஷ முறிவு மருந்தை ஏற்றி கொண்டே டாக்டர் சம்பத்தை பார்த்து,” MR,நீங்க உயிரோடு இப்போ இருக்க காரணம் இவங்க தான்.உங்களை கடித்தது கடுமையான விஷம் உள்ள பாம்பு.சரியான நேரத்தில் உன்னை கொண்டு வந்து சேர்த்து இருக்காங்க,அவங்க தப்பா ஏதாவது செய்து இருந்தால் உங்க உயிர் அல்லது காலை இழக்க வேண்டி இருந்து இருக்கும்.
சம்பத் கைகள் ஸ்ருதியை நோக்கி கை கூப்ப ,அவள் அவனிடம் நடந்ததை மறந்து விடுங்க சம்பத்,இதற்கு மேல் ஒழுங்கா இருங்க என்று தன்னை பார்க்க வந்த மக்களிடம் சென்று விட்டாள்.
அந்த இரவிலும் அவள் மீது உள்ள பிரியத்தில் அந்த மக்கள் அவளை பார்க்க வந்து இருந்தனர்.ஷெட்டிக்கே கிடைக்காத மரியாதை இது.
அப்பொழுது சம்பத் அருகே வந்த ஷெட்டி அவனை பார்த்து”அவளோட இடத்தில் யார் இருந்தாலும் உன்னை அப்படியே சாக விட்டு இருப்பார்கள்.தனக்கு கெடுதல் நினைப்பவருக்கு கூட நல்லது செய்யும் உயர்ந்த எண்ணம் கொண்டவள்.அது தான் ஸ்ருதி.அவளை அடைய எப்படி உனக்கு எந்த தகுதியும் இல்லையோ,அதே போல் அவளை அடைய எனக்கும் எந்த தகுதியும் இல்லை,அந்த அளவு அதிகமான காரணங்கள் உள்ளது.ஆமாம்,விதி வசத்தால் அவள் எனக்கு மனைவியாகி இருந்தாலும் அவளுக்கு நான் தகுதி ஆனவனே கிடையாது.உன்னை இப்பொழுது கூட உயிரோடு விட எனக்கு மனமே இல்லை.ஆனால் அவள் வார்த்தையை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது.பிழைத்து போ.அவள் மேல் எனக்கு காமம்,மற்றும் அன்பு இரண்டுமே உண்டு.காமத்தால் அவளுடன் உடலுறவு கொள்ள ஏங்குகிறேன்.அன்பினால் அவளை விட்டு விலகுகிறேன்.காமம் ஜெயிக்குமா இல்லை அன்பு ஜெயிக்குமா?என்பதை காலம் தான் சொல்லும் என்று ஷெட்டி அவனிடம் கூறினான்.
தன் அழகிய மனதால் தன் பெரியப்பா,நஞ்சுண்டா,இப்போது சம்பத் போன்ற கெட்டவர்களின் மனதையே மாற்றி வென்ற ஸ்ருதிக்கு அதே போல் நல்லவளான அனிதாவின் மனதையா வெல்ல முடியுமால் போய் விடும்?ஆனால் உண்மையான பரீட்சையை ஸ்ருதிக்கு காலம் அங்கு தான் வைத்து உள்ளது.எந்த பெண்ணும் தன் கணவனை வேறொரு பெண்ணுக்கு விட்டு கொடுக்க மாட்டாள்.அதற்கு அனிதாவும் விதிவிலக்கல்ல.
ஸ்ருதி வீட்டுக்கு வர,இதுவரை ஸ்ருதியை காணாமல் தவித்து கொண்டு இருந்த குழந்தை மதன் “அம்மா”என்று ஓடி வந்து கால்களை கட்டி கொண்டது.
தாயம்மா,குழந்தையை உள்ளே கூட்டி போ,ஸ்ருதி நீ போய் முதலில் குளித்து விட்டு ,சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடு.காலையில் பார்த்துக்கலாம்.ஷெட்டி சொல்ல
தாயம்மா குழந்தையை அழைக்க,அது வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.
ஷெட்டி அதட்டினாலும் மசியவில்லை.
டேய் மதன்,இதோ அம்மா போய் குளித்து விட்டு உடனே வந்துடறேன்.அப்புறம் நானே வந்து உனக்கு சாப்பாடு ஊட்டறேன் ஓகேவா என்று கேட்க,
மதன் அமைதியாக “ம்”என்று தலையாட்டி கொண்டே தாயம்மாவிடம் சென்று விட்டது.
உன் பேச்சை மட்டும்தான்மா இவன் கேட்கிறான்.வேறு யார் பேச்சையும் கேட்பது இல்லை என்று தாயம்மா சொல்ல,
அதற்கு ஸ்ருதி, அவன் குழந்தை தானே தாயம்மா, என்னை அவனோட அம்மாவாக பார்க்கிறான்.அதனாலே தான்.ஒரு 5 mins நான் குளித்து விட்டு வந்து விடுகிறேன்,நீங்க குழந்தைக்கு சாப்பாடு மட்டும் ரெடி பண்ணுங்க.என்று ஸ்ருதி ஓடினாள்.
குளித்து விட்டு வந்து சாப்பாடு ஊட்ட,குழந்தை மழலை மொழியில் காலையில் செய்த உணவு வேண்டும் என்றது.
தாயம்மா,காலையில் செய்த சிறுதானியத்தில் செய்த இனிப்பு இருக்கா என்று ஸ்ருதி கேட்க,
ம் இருக்கும்மா,இதோ எடுத்து வரேன்.
எடுத்து வந்து ஸ்ருதியிடம் ஒரு கப் மற்றும் ஷெட்டியிடம் ஒரு கப் கொடுத்தார்கள்.
ஷெட்டி அதை சாப்பிட்டுவிட்டு wow சூப்பர்,இதை யார் செய்தது?
ஐயா,ஸ்ருதி தான் செஞ்சாங்க. நாட்டு சர்க்கரையும்,சிறு தானியம் கலந்து செஞ்சாங்க.காலையிலேயே வேலைக்காரங்க சாப்பிட்டு நல்லா இருக்கு என்று காலி பண்ண பார்த்தாங்க,நான் தான் குழந்தைக்கு என்று கொஞ்சம் எடுத்து வைச்சேன்.
உன்னை தான் கிச்சன் பக்கமே போக கூடாது என்று சொல்லி இருக்கேன் இல்ல,என்று ஷெட்டி குரலை உயர்த்தி பேச,
என்ன என்பது போல் ஒரே ஒரு பார்வை ஸ்ருதி பார்த்தவுடன் ஷெட்டி குரல் தாழ்ந்து விட்டது.
இல்ல ஸ்ருதி,இப்ப உன் படிப்பு தானே முக்கியம் என்று அவள் கண்களை பார்க்க முடியாமல் குரலை தாழ்த்தி சொன்னான்.
இங்க பாருங்க,எல்லா நேரமும் சும்மா படித்து கொண்டே இருக்க முடியாது.என்னால் முடிந்த அளவு சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டே தான் இருப்பேன்.அதுவும் இது என் வீடு.என் வீட்டை ஒழுங்கா பார்த்து கொள்வது வேண்டியது தானே என் பொறுப்பு,என்று ஸ்ருதி மறுமொழி கூற
