ஸ்ருதி Part 16 46

என்னது உன் வீடா? ஷெட்டி அதிர்ந்து கேட்க

ஹே,அதான் நான் காணவில்லை என்றதும் ஹெலிகாப்டர் பிடித்து கொண்டு அடிச்சு பிடிச்சு ஓடி வந்தீர்களா?வந்து எந்த உரிமையில் என்னை கட்டி பிடித்தீர்கள்?இங்க இந்த வீட்டில் உனக்கு என்ன உரிமை இருக்கோ,அதே அளவு உன்னில் பாதியான எனக்கும் உரிமை இருக்கு,

ரொம்ப உரிமை எடுத்து பேசற ஸ்ருதி நீ,

அதெல்லாம் நீ என்னை கட்டி பிடிக்கும் முன் யோசித்து இருக்க வேண்டும்.ஸ்ருதி சொல்ல,

ஆங், அதுவந்து நீ தான் முதலில் கட்டி பிடிச்சே,அதனால் தான் நானும் கட்டி பிடிச்சேன்.

யோவ் ஒரு பொண்ணு நானே வெட்கத்தை விட்டு ஒத்துக்கிறேன், உன்னை பார்த்த சந்தோஷத்தில் தான் கட்டி பிடிச்சேன் என்று.இப்ப நீ சொல்லு என்னை எதுக்கு கட்டி பிடிச்சே?

ஷெட்டி கண்களை தாழ்த்தி கீழே குனிந்து கொள்ள

நிமிர்ந்து பார், என்னை கண்ணை பார்த்து சொல்லு என்று ஸ்ருதி அதட்டினாள்.

அது வந்து என்று ஷெட்டி மென்று முழுங்க,அப்பொழுது ஷெட்டி ஃபோன் அழைக்க ,எடுத்து பார்த்தால் அது மது என்று வர உடனே எடுத்தான்.

அப்பா இவகிட்ட இப்போது தப்பிச்சோம்டா சாமி,என்று போனை எடுத்து ,”ஹலோ மது” என்றான்

என்னடா ஆச்சு ,ஸ்ருதி கிடைச்சுட்டாளா?என்று மது கேட்க,

ம்ம் கிடைச்சுட்டா,நல்லா இருக்கா மது,இப்போ வீட்டில் தான் இருக்கா

News சேனல் எல்லாம் பார்த்தேன்.ஒரு நியூஸ் கூட அதை பற்றி வரவில்லை.

இல்ல மது நான் தான் போலீஸ் கிட்ட சொல்லி இருந்தேன்.நியூஸ் சேனல் எதுக்கும் தகவல் போக கூடாது என்று.

சரி,நீ போனை உடனே ஸ்ருதிகிட்ட கொடு மது சொல்ல

ஸ்ருதி மதனை மடியில் இருத்தி கொண்டே ” ஹலோ சொல்லு மது”

என்ன ஸ்ருதி ,என்ன ஆச்சு யார் உன்னை கடத்தினார்கள்?.

அது ஒன்னும் இல்ல மது,நான் சென்னையில் வேலை பார்த்த முதலாளிக்கு ஆரம்பத்தில் இருந்தே என் மேல ஒரு கண்.இங்க இருக்கிற ஒரு பொண்ணு கூட சேர்ந்து தான் என்னை கடத்தினாங்க.ஆனா தெய்வம் மாதிரி நஞ்சுண்டா அண்ணா வந்து காப்பாற்றினார்.அப்புறம் இவனும் சரியான நேரத்தில் வரவும் சரியாக இருந்தது.

என்கிட்ட போனில் அவன் ஒரே அழுகை தெரியுமா?இதுவரை அவன் அழுது நான் பார்த்ததே இல்லை என்று மது சொல்ல

என்னது அழுகை வேறயா?ஸ்ருதி கேட்டாள்.

ஆமாடி,அப்படியே பச்சை புள்ள மாதிரி அழுவுறான்.அப்புறம் நான் தான் நாளைக்கு வரேன்,நான் வருவதற்குள் பாரு,ஸ்ருதி உன்கூட இருப்பா பாரு என்று சொன்னதுக்கு பிறகு தான் கொஞ்சம் அமைதியானான்.

சரி மது,நீ இப்போ எங்கே இருக்கே?

நான் ரெடி ஆயிட்டு இருக்கேன் ஸ்ருதி.விடியற்காலை 4 மணிக்கு பிளைட்.காலையில் அங்கே வந்து விடுவேன்.

சரிவா மது,காலையில் நேரில் பேசுவோம் என்று போனை வைத்தாள்.

போனை வைத்தவுடன் ஸ்ருதி அவனை ஏறிட்டு பார்க்க,

ஷெட்டி ஸ்ருதியிடம் “மது என்ன சொன்னா ஸ்ருதி”

அவ காலையில் வருவதாக சொன்னாள்.நீ அழுதியாடா?

சொல்லிட்டாளா,சொல்லிட்டாளா அதுக்குள்ள,ஒரு ரெண்டு பொண்ணுங்க ஒரு நிமிஷம் பேசகூடாதே உடனே எல்லா விசயமும் வெளிவந்து விடுமே!

கேட்டதுக்கு என்னடா பதில்?

ஆமா அழுதேன் இப்போ அதுக்கு என்ன?..