ஸ்ருதி Part 16 46

சம்பத் என்ன நம்ம ராஜதந்திரங்கள் வீணாக போய் விட்டதே, இன்னும் பயிற்சி வேண்டுமோ என்று நினைக்க,அடுத்தடுத்து விழுந்த உதைகள் அவனை மேலும் நிலைகுலைய வைத்து மண்ணில் சாய்த்தது.இருந்தும் ஷெட்டி வெறி அடங்காமல் பக்கத்தில் உள்ள பெரிய கல்லை எடுத்து அவன் தலைமேல் போட முயற்சிக்க,ஸ்ருதி ஓடிவந்து ஷெட்டியை தடுத்தாள்.

டேய் வேண்டாம்டா,உன்னால் இதற்கு மேல் ஒரு உயிர் கூட போக கூடாது.வேண்டாம் அவனை விட்டு விடு என்று ஸ்ருதி சொல்ல ஷெட்டி உடனே கல்லை போட்டு விட்டான்.

ஸ்ருதி சம்பத்தை பார்த்து,இவன் கிட்ட என்னத்த பார்த்து மயங்கின? என்று கேள்வி கேட்டேயே இப்போ பாரு நான் ஒரே ஒரு வார்த்தை சொன்னவுடன் கல்லை போட்டு விட்டான்.என்ன தான் அவன் புருஷன் ஆனாலும் இதுவரை ஒரு தடவை கூட என் பேச்சை அவன் மீறியதே இல்லை.எனக்கு உண்டான space அவன் கொடுக்க தவறியதும் இல்ல.எனக்கு தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நான் கேட்காமலே அவன் செய்கிறான்.ஆண் என்ற திமிரே என்னிடம் காண்பித்தது இல்ல.இதை விட ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் இருந்து வேறென்ன வேண்டும்.இங்க பாரு என்று ஸ்ருதி ஷெட்டியை அறைந்தாள்.ஷெட்டி அதிர்ச்சியோடு அவளை பார்த்தாலும் எதுவும் செய்யவில்லை.
ஸ்ருதி ஷெட்டி கன்னத்தில் முத்தம் வைக்க பதிலுக்கு அவள் கன்னத்தில் இரண்டு முத்தம் வைத்தான்.இப்போ நான் அவனை அடிச்சேன்,அமைதியாக வாங்கி கொண்டான். ஆனா திருப்பி அடிக்கவே இல்ல.முத்தம் கொடுத்தேன்.பதிலுக்கு இரண்டு முத்தம் கொடுத்தான்.அன்பை காட்டினால் மட்டும் இரண்டு மடங்கு அன்பை காட்டுவான்.இது தான் அவன்,இந்த காரணங்களால் தான் அவன் இன்னொரு பெண்ணுக்கு மனைவி என்றால் கூட என்னை அவனை நோக்கி இழுத்தது.போய் உன் பொண்டாட்டிக்கு முதலில் மரியாதை கொடுத்து வாழு என்று சொல்லிய ஸ்ருதி,ஷெட்டி கரம்பிடித்து நடந்தாள்.தூரத்தில் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ஓடி வருவது அவர்கள் ஏந்தி கொண்டு வந்த தீப்பந்த வெளிச்சத்தில் இருந்து தெரிந்தது.

சம்பத், ஷெட்டியிடம் தோற்றது ஒருபுறம்,ஸ்ருதி கிடைக்காமல் போனது மறுபுறம் என்று கோபம் தலைக்கேற மதி இழந்தான்.பக்கத்தில் இருந்த ஒரு கூரான கல்லை எடுத்து ஸ்ருதி பின்தலையை நோக்கி வீச அவன் காலுக்கு கீழே இருந்த கண்ணாடி வீரியன் பாம்பு ஒன்று காலை கடித்தது.அதில் வலியில் சம்பத் கத்தவும் ,ஸ்ருதி திரும்பி பார்க்கவும் அவன் வீசிய கல்லை பார்த்து விலகுவதற்குள் அது நெற்றியில் உரசி லேசான காயத்தை உண்டு பண்ணி கடந்து சென்றது.

அவன் திருந்த மாட்டான் ஸ்ருதி ,என்று மீண்டும் ஷெட்டி அவனை நோக்கி செல்ல

நில்லுடா,எனக்கு ஒன்னும் இல்ல,அங்க பாரு அவனை தான் பாம்பு கடிச்சு இருக்கு என்று இருவரும் ஓடி போய் பார்த்தனர்.

பார்க்க மலை பாம்பு மாதிரியே இருக்குல்ல,என்று ஸ்ருதி சொல்ல,

இல்ல இது என்ற சொல்ல வந்த ஷெட்டியை கை அமர்த்தினாள்.

இது விசம் இல்லாத பாம்பு தான் சம்பத்,பயப்படாதே பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடல் சென்று ஒரு இஞ்செக்சன் போட்டால் சரி ஆகி விடும்.டேய் அவனை தூக்குடா என்று ஸ்ருதி கூற அமைதியாக ஷெட்டி அவனை தூக்கினான்.

அதற்குள் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து விட அவர்களிடம் ஷெட்டி சம்பத்தை ஒப்படைத்தான்.

ஏன்மா உனக்கு ஒன்னும் ஆகலயே என்று பாசத்தோடு அவர்கள் கேட்க,

அய்யோ எனக்கு ஒன்னும் ஆகலை,அவருக்கு தான் பாம்பு கடிச்சு இருக்கு,அவரை முதலில் ஹாஸ்பிடல் கூட்டி போகணும்.

ஏன் ஸ்ருதி,அவனை கடிச்சது,கண்ணாடி வீரியன் பாம்பு.அது விச பாம்பு.

தெரியுமே, விஷ பாம்பு என்று தெரிந்தால் அவன் பயப்படுவான்.அதனால் பயத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.இதனால் விஷம் உடல் முழுக்க வேகமாக பரவும்.நான்கு மணி நேரத்தில் மனிதனை கொல்ல கூடிய இந்த விஷம் அப்புறம் இரண்டே மணி நேரத்தில் கொன்று விடும்.அதனால் தான் நான் சொல்லல என்று ஸ்ருதி மெதுவாக சொன்னாலும் சம்பத் காதில் தெளிவாகவே விழுந்தது.

ச்சே,நான் இவளுக்கு எவ்வளவு கெடுதல் செய்து இருந்தாலும் இவள் எனக்கு நல்லது நினைக்கிறாளே என்ற உண்மை சம்பத் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.கண்களில் இருந்து தானாக கண்ணீர் வரவைத்தது.