அதுக்கு எதுக்கு ப்ரேம், வீட்டுக்கு போற வரை வெயிட் பண்ணனும்? உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க இங்கியே என் லாப்டாப்ல இருந்தே ரிப்ளை பண்ணலாமே?!
அதுக்கில்லை, இன்னிக்குதான் உங்க வீட்டுக்கு வந்திருக்கோம். கொஞ்ச நேரம் என் ஃப்ரெண்டு கூட பேசிட்டிருக்கலாம்னுதான்…
அதுக்கென்ன, நீங்க உங்க ஃபிரண்டு கூட பேசிட்டிருங்க. நான், மைதிலிக்கு ஹெல்ப் பண்றேன். ஓகேயா? நீங்க வாங்க மைதிலி, என் லாப்டாப் யூஸ் பண்ணிக்கோங்க. ஆஃபர் லெட்டர்ல டவுட்டுன்னா என்னைக் கேளுங்க.
மைதிலியை அழைத்துக் கொண்டு, எனது கெஸ்ட் ரூமுக்குச் சென்றேன். அவர்களிடம் இருந்து தள்ளி வந்ததும், மைதிலி சொன்னாள். ப்ளானிங் மன்னன் நீங்க. இப்புடியே எல்லாத்தையும் கவுத்துருங்க. அவள் சந்தோஷத்தில் என்னிடம் உரிமை எடுத்திருந்தாள்.
ஏன் சொல்ல மாட்ட, உனக்கு, வேலைக்கும் ஏற்பாடு பண்ணி, அதுக்குப் போறதுக்கும் ப்ளான் பண்ணிக் கொடுத்தா, கவுக்குறாங்களாம்!
பதிலுக்கு அவள் சிரித்தாள்.
வேலைக்கு ஓகே சொல்லி மெயில் அனுப்பினாள். ஹாலுக்குப் போலாமா, என்று சொல்லி அவள் நகரும் போது கேட்டேன்!
ஹல்லோ, எங்கப் போறீங்க? வேலைக்கு ட்ரீட்டுதான் வெக்க வேணாம். அட்லீஸ்ட் ஒரு தாங்க்ஸ் கூடக் கிடையாதா? என்று கிண்டல் பண்ணினேன்.
அதெல்லாம் தாங்க்ஸ் சொல்ல முடியாது? என்ன பண்ணுவீங்க? அது மட்டுமில்லை, வேலைக்கு முன்னாடியும் சரி, அப்புறமும் சரி, ஏதாச்சும் வேணும்னா உங்களைத்தான் கேப்பேன். நீங்கதான் செஞ்சு தரணும். இப்பியே சொல்லிட்டேன், அதுக்கும் தாங்க்ஸ் எதிர்பாக்காதீங்க! சொல்லிவிட்டு முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு ஆனால், மிகச் சந்தோஷமாகச் சென்றாள்.
அன்றுதான் ப்ரியாவும், மைதிலியை என்னை அண்ணா என்று கூப்பிடச் சொன்னாள். நீ, என்ன மைதிலி, அவரை, வாங்க போங்கன்னு கூப்டுட்டு இருக்க? அண்ணான்னு கூப்டலாம்ல?
எங்களுக்கு அது பெரிய பிரச்சினையாக இல்லாவிட்டிருந்தாலும், நான் கேள்வியும் கேட்டிருந்தேன். வழக்கமா சீனியரைத்தான் அண்ணான்னு கூப்பிட வெப்பாங்க. நீ, உன் சீனியரையே ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கிற. மைதிலியை மட்டும் என்னை அண்ணான்னு கூப்பிடச் சொல்ற! என்ன உன் லாஜிக்கோ???
அதன் பின் மைதிலியும், நாங்கள் தனியா இருக்கும் போதும், ப்ரேம், ப்ரியா முன்னிலையில் மட்டும் அண்ணா என்று கூப்பிட ஆரம்பித்திருந்தாள். ஆனால், இது எங்களுக்கிடையேயான நட்பில், அன்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களுக்கிடையேயான புரிதல் கூடிக் கொண்டே இருந்தது!
என்னிடம் மட்டும், அவள் சமயங்களில், குழந்தையாக மாறுவாள், சிணுங்குவாள், என்னை உரிமையுடன் கண்டிப்பாள். தனக்கு இது வேண்டுமென்று உரிமையாய் கேப்பாள். நான் எவ்வளவு கிண்டால் செய்தாலும், அவளுக்குச் செய்யும் எந்த உதவிக்கும் தாங்க்ஸ் சொல்லவே மாட்டாள். ட்ரீட்டும் கொடுத்ததில்லை!
எவ்வளவு என்னிடம் மனம் திறந்தாலும், உடனடியாக அவள் பழைய படி சுருங்கிக் கொள்வாள். அவள் மனம் திற்ப்பதெல்லாம் அவளை மீறி மிகச் சந்தோஷமாகவோ, நெகிழ்வாகவோ இருக்கும் போது மட்டுமே. மற்ற படி நான் என்ன சொன்னாலும், வேண்டுமென்றே, மேக் அப் பண்ணிக் கொள்ள மாட்டாள், கொஞ்சம் வயதானவளாகவே காட்டிக் கொள்வாள்.
அவள் அடி மனதில் ஏதோ ஒரு ஏக்கம் இருந்தது! அதை என்னிடம் கூட காட்டிக் கொள்ள மாட்டாள். என்னுடன், அவள் மிகச் சந்தோஷமாக இருக்கும் சில சமயங்களில், திடீரென்று என்னையே பார்த்துக் கொண்டிருப்பாள். நான் பார்த்தால், சுதாரித்துக் கொள்வாள். நான் என் மனைவிக்கு முக்கியமான நாட்களில் பரிசு கொடுத்து, அவளுடன் மட்டும் அன்றைய தினத்தை செலவழிப்பதில் அவளுக்கு மிகவும் சந்தோஷம். இத்தனைக்கும் ப்ரேம், அவர்களுடைய முக்கிய தினங்களை கண்டு கொள்ளாமல் இருந்தாலும், அவள் ப்ரியாவைப் பார்த்து பொறாமைப் பட்டதில்லை! அதுதான் மைதிலி!
இடை பட்ட நாட்களில்தான் ப்ரேம், ப்ரியாவின் கள்ள உறவும் வளர்ந்திருந்தது!
இன்று!
மெல்ல, பழைய நினைவுகளில் இருந்து மைதிலியும், ராஜாவும், நிகழ்காலத்திற்கு வந்தனர். ராஜாவையே விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்த மைதிலி தன்னையறியாமல் சொல்லி விட்டாள், நீங்க ஏன், என் வாழ்க்கையில் முன்னாடியே வரலை?!
சட்டென்று சுதாரித்துக் கொண்டாள் மைதிலி! ராஜாவிற்கோ அவள் சொன்னது காதில் விழுந்திருந்தாலும், அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை.
ப்ச்ச், சரிண்ணா இப்ப அடுத்த ஸ்டெப் என்னா? காமிராதான் ஃபிக்ஸ் பண்ணியாச்சில்ல. நான் ஊருக்கு போயிட்டு வந்துடட்டுமா?
இப்ப ஊருக்கு வேணாம் மைதிலி. இந்த மனநிலையில உன்னை என்னால தனியா விட முடியாது. உங்க அப்பாகிட்ட நீ உளறுனாலும் உளறிடுவ. என்ன சொல்லப் போறோம், எப்புடி எய்யப்போறோம்னு தெளிவா முடிவு பண்றதுக்கு முன்னாடி, உங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டாம். எதுக்கும், உங்க அப்பா டீடெயில்ஸ், வீட்டு அட்ரஸ்லாம் என்கிட்டயும் கொடு.