உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 2 169

மைதிலியின் கண்களோ கொஞ்சம் கலங்கியிருந்தது. அவள் முகத்தை வேறு புறம் திருப்பியிருந்தாள், எங்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்க்காக.

எனக்கு மிக வருத்தமாகியிருந்தது. வருந்தி, அவர்களிடம் சாரி சொல்வதற்க்குள், ப்ரேம் சொன்னான்.

என்ன பண்றது ப்ரியா, எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும். எனக்கு ஈக்வல் இல்லைன்னாலும், கல்யாணம் பண்ணியாச்சுல்ல! கடமை இருக்குல்ல!

மைதிலி, இன்னும் அவமானத்தில், உதட்டைக் கடித்தாள்.

என் கோபம் உச்சத்தை எட்டியிருந்தது. அதே கோபத்தில் ப்ரியாவிடம் சொன்னேன்.

வாட் ஈஸ் திஸ் நான்சென்ஸ் ப்ரியா? எங்க வந்து எப்பிடி பேசுற? நீ பேசுறது, மத்தவிங்களை ஹர்ட் பண்ணாது? அவங்ககிட்ட சாரி கேளு! ஏனோ, என்னால் நேரிடையாக ஏன் மைதிலியை இன்சல்ட் பண்ற மாதிரி பேசுற என்று கேட்க முடியவில்லை! அந்தக் கேள்வி கூட ஒரு வேளை அவளை இன்னும் ஹர்ட் பண்ணலாம்.

இப்போது ப்ரேம், இட்ஸ் ஓகே, ராஜா. நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன். என்றான் மிகக் கூலாக.

எனக்கு அவன் மேல் இருந்த மரியாதை எல்லாம் போயிருந்தது. அவன் கண்களைப் பார்த்து சொன்னேன், ப்ரேம், உஙளுக்கு வேணா, உங்க மனைவியை யார்கிட்ட வேணா விட்டுக் கொடுத்து பேசறது கூட ஒன்னுமில்லாத விஷயமா இருக்கலாம். ஆனா எனக்கு, என் மனைவி, எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளியை விட்டுக் கொடுத்து பேசுறது கூட பெரிய விஷயம். ப்ரியா, அவங்ககிட்ட சாரி சொல்லு!

முகம் சிறுத்தாலும், இட்ஸ் ஓகே ராஜா, சாரில்லாம் வேணாம், என் ஃபிரண்டுதானே ப்ரியா! விடுங்க.

ப்ரியாவும் சாரில்லாம் கேட்க முடியாது என்பது போல், அதே வன்மத்துடன் இருந்தாள்.

எனக்கு வந்த கோபத்தில், நல்ல வேளை நான் உங்க ஃபிரண்டு இல்லை மிஸ்டர் ப்ரேம். என்னால், என் ஃப்ரண்டு, இப்படி தவறாய் நடந்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது! இதற்கு மேலும் அங்கு இருக்கப் பிடிக்காமல், சாரி மைதிலி என்று மட்டும் சொல்லிவிட்டு, வா ப்ரியா என்று, பை கூட சொல்லாமல் கிளம்பிவிட்டேன்!

இத்தனை வாதத்திலும், நான் ஒன்றை கவனித்திருந்தேன். நாங்கள் வீட்டுக்கு வந்ததிலிருந்து பெரிதாக என்னை கண்டு கொள்ளாத மைதிலி, அந்த வீட்டின் நேர்த்தியை பாராட்டிய போது சந்தோஷப்படாலும் கூட கண்டு கொள்ளாத மைதிலி, என் மனைவி தவறாய் பேசியவுடன் முகத்தைத் திருப்பியிருந்த மைதிலி, நான் அவளுக்காக பேச ஆரம்பித்த நிமிடத்திலிருந்து என்னையே கண் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்னுடைய கோபத்தை ப்ரியா பொருட்படுத்தவே இல்லை. மாறாக, நான் சரியாக நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினாள்.

அடுத்த வாரமும், ப்ரேம் வீட்டிற்கு போக வேண்டும் என்றாள். எதற்கு திரும்ப என்றதற்க்கு, போன வாரம் ஒழுங்கா பை கூட சொல்லவே இல்லை. ஏன் மன வருத்தத்தோட இருக்கனும்னுதான் என்றாள்.

நானும் ஓகே சொன்னேன். எனக்கும் ஏனோ, மைதிலியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது!

திரும்ப வீட்டுக்கு வந்தவர்களை வாங்க வாங்க என்று வரவேற்றது மைதிலியேதான். அவளுக்கும் எங்களது இல்லையில்லை என் வரவு சந்தோஷமாயிருந்திருக்கும் போல. ப்ரியாவைப் பார்த்து வாங்க சொன்ன போது இருந்ததை விட, என்னை வரவேற்ற போது, அவளது முகத்தில் வெளிச்சம் அதிகம் இருந்தது!

நானும், எப்படியிருக்கீங்க மைதிலி என்று கேட்டேன்! நல்லாயிருக்கேன் நீங்க எப்படியிருக்கீங்க? காஃபி சாப்பிடுறீங்களா? இருவரையும் அவள் பார்த்து கேட்டாலும், என் மேல் பார்வை அதிகம் இருந்தது.

ப்ரியாவிற்கு கடுப்பாய் இருந்தது. மெல்ல முனகினாள், நான் சமாதானத்துக்கு வந்தா, இவ என்கிட்ட முகம் கொடுத்தே பேச மாட்டேங்கிறா என்று!

எனக்கு கடுப்பானது. நீ பேசுன பேச்சுக்கு, உன்னைப் பாத்து வாங்கன்னு சொன்னதே அதிகம். உன்னைப் பாத்து யாராவது இப்டி சொல்லியிருந்தா, நீ வாசல்லியே, எதுக்கு வந்தீங்கன்னு கேட்டிருப்ப. அவளாங்காட்டியும், வாங்கன்னு சொன்னா! நீ இன்னும் சாரி கூட சொல்லவேயில்லை, அதுக்குள்ள, சமாதானத்துக்கு வந்தாளாம்!