உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 2 169

அவள் வாடியது, நான் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டேன். என் புன்னகை அவளையும் தொற்றியது. ’வாலு’ என்று அவளைச் சொல்லிவிட்டு புன்னகையுடன் நகர்ந்தேன்.

அவளைத் திரும்ப பார்க்க வேண்டும் என்ற என் ஆர்வம், ப்ரியாவின் அடுத்த வார அழைப்பிற்க்கும் ஓகே சொல்ல வைத்தது.

இந்த முறை என்னை வரவேற்ற போது, அவளது புன்னகை இன்னும் பெரிதாகியிருந்தது.

இதை ப்ரியா கவனித்திருப்பாள் போலும். அவளது வன்மம் கொஞ்ச நேரம் கழித்து தெரிந்தது. என்ன ப்ரேம், என்னை வெல்கம் பண்றப்ப சிரிக்கவே மாட்டேங்குறா உன் வைஃப். ஒரு வேளை நாங்க வர்றது உன் வைஃப்க்கு புடிக்கலியோ?

ப்ரேம் பதிலுக்கு அவள் முன்னாலேயே மைதிலியைத் திட்டினான். என்ன மைதிலி, என்னாதான் மேனர்ஸ் பழகியிருக்கியோ. அம்மா இல்லைங்கிறதுனால, உனக்கு பழக்க வழக்கத்தை யாரும் சரியா சொல்லி கொடுக்கல போல. ச்சே, என்றான்.

வழக்கமாக உணர்வுகளைக் காட்டாதவள் அன்று கண் கலங்கிவிட்டாள். அமைதியாக சாரி சொல்லி விட்டு அவள் ரூமுக்குள் சென்று விட்டாள்.

என்னால் தாங்க முடியவில்லை. அவளைத் தேடி, அவள் அறைக்கே சென்றேன். அவர்கள் மேல் காட்ட வேண்டிய கோபத்தை அவளிடம் காட்டினேன்.

திருப்பி ப்ரேம்கிட்ட கேள்வி கேட்க வேண்டியதுதானே? ஏன் கம்முன்னு வர்றீங்க மைதிலி?

கூரிய பார்வையை என் மேல் வீசியவள், உங்க மனைவி ஒழுங்கா இருந்திருந்தா இவர் இப்படிச் சொல்வாரா? அவிங்க சொன்னப்ப நீங்களும் வேடிக்கை பாத்துட்டுத்தானே இருந்தீங்க.

அவள் வார்த்தையில் இருந்த உண்மை என்னைச் சுட்டது.

சாரி மைதிலி!

இட்ஸ் ஓகே, பழகிடுச்சி!

எங்கோ பார்த்த படி அவள் சொன்ன பதில், சொல்லாமல் பல கதைகளைச் சொல்லியது. அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என் உள்ளம் துடித்தது.

நீங்க என்ன படிச்சிருக்கீங்க மைதிலி?

பி ஈ. கொஞ்சம் இடைவெளி விட்டவள் பிட்ஸ் பிலானில.

வாட்? பிட்ஸ்ல படிச்சிட்டு இப்பிடி வேலைக்குப் போகாம வீட்ல இருக்கீங்க? அன்னிக்கு ப்ரேம், அவர் படிப்புக்கு ஈக்வல் இல்லைன்னு சொன்னப்ப கூட கம்முன்னு இருந்தீங்க?

அவள் வேதனையான ஒரு புன்னகையை மட்டும் காட்டினாள்! பின்பு சொன்னாள், மேரேஜ் முன்னாடி வேலைக்கு போயிட்டுதான் இருந்தேன். அப்புறம் அவர் வேணான்னுட்டாரு. இப்ப 3 வருஷம் கேப் வந்திருச்சி. இனிமே ட்ரை பண்ணாலும், கிடைக்கிறது கஷ்டம்.

அப்ப, உங்களுக்குப் போக சம்மதம் அப்படித்தானே?

இப்பொழுது மைதிலிக்கு கொஞ்சம் ஆர்வம் வந்தது. என்னால் முடியுமா? கிடைக்குமா?

அதெல்லாம் கிடைக்கும். கண்டவிங்க திறமை இல்லாமியே பெரிய பொசிஷன்ல இருக்காங்க. உங்களுக்கென்ன?

ஓ… ப்ளீஸ், உங்களால் முடிஞ்ச ஹெல்ப் பண்றீங்களா?

கண்டிப்பா, அதுக்கு முன்னாடி, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். அதுக்கு, இது சரியான இடம் கிடையாது. உங்க ரெஸ்யூம் எடுத்துகிட்டு என் ஆஃபிஸ்க்கு வாங்க. என்னால முடிஞ்ச ஹெல்ப் கண்டிப்பா செய்யுறேன். இந்தாங்க என் விசிடிங் கார்டு கொடுத்து மறக்காமல் அவள் நம்பரையும் வாங்கிக் கொண்டேன்.

ரெஸ்யூம் கூட என்கிட்ட இல்லை. அப்டேட் பண்ணிட்டு உங்களை மீட் பண்றேன். தாங்க்யு சோ மச்.

இட்ஸ் ஓகே. பை!

நேராக ப்ரேமிடம் சென்றவன், ஏன் ப்ரேம், உங்க வைஃப் பி ஈ படிச்சிருக்காங்க. ஜாப்க்கு போலியா?

அவனோ, ஆமா, மொக்கைக் காலேஜ்ல படிச்சா. அதுக்கு ஜாப் வேற! நீங்க வேற ராஜா!

நீங்களும் பீ ஈ தானே படிச்சீங்க? எனக்கு டவுட்டா இருக்கே?

ஏன் அதிலென்ன டவுட்டு?

பி ஈ படிச்சவிங்க, பிட்ஸ் பிலானியை மொக்கை காலேஜ்னு சொல்றீங்க?

சட்டென்று சுதாரித்தவன், அப்டி இல்லைங்க. அவளுக்கு வேலைக்கு போறதுக்கெல்லாம் பிடிக்காது. கொஞ்சம் lazy அவ!

எனக்குக் கடுப்பாக இருந்தது. சட்டென்று மைதிலியைப் பார்த்து, ஏங்க உங்க ஹஸ்பண்டுக்கு கூட நீங்க வேலைக்குப் போகனும்னுதான் ஆசை போல. நீங்க இப்டி லேசியா இல்லாம, தொடர்ந்து முயற்ச்சி பண்ணி வேலைக்குப் போங்க. பாவம், அவரு, நீங்க பிட்ஸ்ல படிச்சிட்டு சும்மா இருக்கீங்களேன்னு எவ்ளோ ஃபீல் பண்றாரு! இல்லை ப்ரேம்? என் வார்த்தை ஒன்று சொன்னாலும், கண்கள் வேறு அர்த்தத்தை அவளுக்குச் சொல்லியது.

கரெக்ட் ராஜா. நானும், எத்தனையோ தடவை அவகிட்ட சொல்லிட்டேன். கேட்டாத்தானே!

இல்லீங்க, இனிமே அப்பிடி இருக்க மாட்டேன். உங்களுக்கு நான் வேலைக்குப் போறதுதான் புடிக்கும்னா, நான் இனிமே வேலைக்கு ட்ரை பண்றேன்!

வெரி குட். அப்ப இனிமே வேலைக்கு ட்ரை பண்ணுங்க. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூட என் கிட்டயோ, ப்ரியாகிட்டயோ கேளுங்க! சரி, அப்ப நாங்க கிளம்பறோம் என்று நாங்கள் கிளம்பினோம்.

போகும் போதே, ப்ரியாவிடம் கடுமையாகச் சொல்லிவிட்டேன், இனி ப்ரேம் வீட்டுக்கு போகக் கூடாது ப்ரியா. உனக்கு என்ன மைதிலி மேல் அப்படி ஒரு கோவம்? அவளை இன்சல்ட் பண்ணிகிட்டே இருக்கிற? நான் சொன்னாலும் கேக்குறதில்லை. இனி நீயும் போகக் கூடாது. என்னையும் கூப்பிடாத. இதுக்கு மேலியும் இப்பிடி நடந்துது, அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்.

அதற்க்கப்புறம், ப்ரேம் வீட்டுக்கு நாங்கள் போகவே யில்லை. ஆனால், ப்ரியா, ப்ரேமை தொடந்து அவள் அலுவலகத்தில் பார்க்கிறாள். மைதிலி, 3 வாரம் கழித்து, என் அலுவலகத்தில் என்னை வந்து பார்த்தாள். வீட்டில் இருந்ததற்க்கு இன்று நன்றாக இருந்தாள்!

அவளைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். இயல்பில், அவள் மிக புத்திசாலி. வேலையில் கொஞ்சம் டச் விட்டுப் போயிருந்தாலும், அவளால் எளிதில் சமாளிக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் என்னை வருத்திய விஷயம், அவளிடம் நிறைய தாழ்வு மனப்பான்மை வந்திருந்தது. தன்னால் முடியுமா என்று சின்ன விஷயத்திற்கு கூட நிறைய யோசித்தாள்.