உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 2 169

அவளுக்கும் அது புரிந்திருந்தது. நீங்க காரணமில்லாம அப்பிடி பண்ணமாட்டீங்கன்னு தெரியும். அது என்ன காரணம்னு தெரிஞ்சிக்கதான் கேட்டேன்.

அப்பியே கிடைச்சிருந்தா, நீ இப்ப இருக்கிற அதே கான்ஃபிடண்ட்டோட ஃபேஸ் பண்ணியிருந்திருப்பியா? அதுனாலத்தான், இப்பிடி.

நான் சொன்னது உண்மைதான் என்று புன்னகை செய்தவள், கொஞ்ச நேரத்தில் முகம் மாறினாள்!

இன்னும் என்ன குழப்பம் மைதிலி?

இல்ல, வந்து… ப்ரேம் இதுக்கு ஒத்துக்குவாரான்னு தெரில்லை. அதான்….

ஏன், அன்னிக்கு வேலைக்குப் போறதுன்னா போகட்டும்னு எங்க முன்னாடி சொன்னாரில்ல? இத்தனை நாளா நீ ட்ரை பண்றப்ப கம்முனுதான இருந்தாரு?

அவள் தயக்கம், அவள் ஏதோ மறைக்கிறாள் என்று எனக்குச் சொல்லியது.
மென்மையாக அவள் கண்களைப் பார்த்து கூறினேன். என்ன பிரச்சினை மைதிலி? நீ பிரச்சினை என்னான்னு சொன்னாதான் என்னால தீர்வைச் சொல்ல முடியும்!

என் அன்பு அவளை ஆட்டியிருந்தது. இல்ல, நான் பொதுவாவே வேலைக்குப் போறதில் அவருக்கு விருப்பமில்லை. வேலைக்குப் போயிட்டிருந்த என்னை, கல்யாணத்துக்கப்புறம் போகாம நிறுத்துனதே அவர்தான். இவ்ளோ நாள் ட்ரை பண்ணப்ப கம்முனு இருந்தார்ன்னா, எனக்கு எங்க கிடைக்கப் போவுதுங்கிற அலட்சியமா கூட இருக்கலாம்! என் உள் மனசு சொல்லுது, நான் இந்த விஷயத்தைச் சொன்னா, அவரு கண்டிப்பா வேணம்னுதான் சொல்லுவாரு. அதான் பயமாயிருக்கு…

கொஞ்ச நேரம் யோசித்தேன்… சரி நான் ஒரு ஐடியா சொல்றேன்.

என்னுடைய ப்ளான் படி, அன்று மாலையே ப்ரியாவிடம் கேட்டேன். ஏன் ப்ரியா, நீ ப்ரேமையும், அவன் ஒய்ஃபையும் ஒரு தடவை கூட நம்ம வீட்டுக்கு கூப்பிடவே இல்லை? இந்த வீக்கெண்ட் கூப்பிடலாமா?

திடீரென்ற என் கேள்வியில், ஒரு முறை திகைத்தவள் பின் கேட்டாள், என்ன திடீர்ன்னு? நீங்கதானே அவிங்க வீட்டுக்கு போக கூடாதுன்னீங்க? இப்ப என்ன புதுசா? (ஒரு வேளை எனக்கு சந்தேகம் வந்து ஆழம் பார்க்க கேட்கிறேனோ, என்ற பதைபதைப்பில்தான் அப்படி கேட்டாள்!)

நான் ஏமாற்றுகிறேன் என்றாலும், நல்ல விஷயத்திற்காகத்தான் இதைச் செய்கிறேன் என்ற காரணம் எனக்கு தைரியத்தைத் தந்தது. ஆமா, வேணாம்னு சொன்னேன். ஏன் சொன்னேன், நீயும், உன் ஃபிரண்டும், அந்தப் பொண்ணை இன்சல்ட் பண்றது தப்புங்கிறதுனால் சொன்னேன். வீட்டுக்குப் போக வேண்டாம்னு சொன்னவன், நீ அவன் கூட ஃப்ரெண்டா பழகுறதை நிறுத்தச் சொன்னேனா? இல்ல, எப்பியாவுது அவனை பாக்குறப்ப, பேசாமா நானும் முகத்தைத் திருப்பிட்டு போறேனா?

இப்பியும் அவிங்க வீட்டுக்குப் போறதில் எனக்கு விருப்பமில்லை. அதுனாலத்தான் இங்க கூப்பிடுறேன். திரும்பியும் சொல்றேன், இங்க வந்தும் அந்தப் பொண்ணை அசிங்கப்படுத்துனா, உன்னை மட்டுமில்ல, அவனையும் திட்டிருவேன். அது மட்டுமில்ல, அவன் கூட பழகக் கூடாதுன்னும் சொல்லிடுவேன். இது என் வீடு! இங்க யார், எப்பிடி நடத்துக்கனும்னு ஒரு வரைமுறை இருக்கு!

நான் இதையெல்லாம் கொஞ்சம் கோபமாகவே சொல்லியிருந்தேன்.
என் பதில், அவளுக்கு நிம்மதியைத் தரவே, அந்த சந்தோஷத்தில், ஓகே, இந்த வாரம் கூப்பிடுறேன். நான் அவளை எதுவும் சொல்ல மாட்டேன் ஓகேவா?

அந்த வீகெண்ட் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். மைதிலிக்கு என் வீட்டுக்கு வருவதில் மிகவும் சந்தோஷம். அது, அவளது முகத்தில் தெரிந்தது.

ப்ளான் படி, நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது மைதிலிக்கு ஃபோன் வந்தது. தனியாய் சென்று பேசியவள், பின் மகிழ்ச்சியாய் வந்தவள், எல்லார் முன்னிலையிலும் சொன்னாள். —- கம்பெனியிலிருந்து ஃபோன் என்றும், அவளுக்கு வேலை கிடைத்தது என்றும், ஆஃபர் லெட்டர் செக் பண்ணிட்டு இம்மீடியட்டா ரிப்ளை பண்ணச் சொன்னாங்க என்றும், ஜாயின் பண்ணிக்கிறது நம்ம இஷ்டத்துக்கு பண்றதா இருந்தாலும், அக்சப்டன்ஸ் உடனே வேண்டுமாம், ரிசோர்ஸ் அலகேஷன் ப்ளான் பண்ணனுமாம் என்று சொன்னாள்.

முதலில் ரியாக்ட் செய்தது நானே! வாவ், கங்கிராட்ஸ் மைதிலி! பரவாயில்லியே, போன தடவை உங்க வீட்டுல வேலைக்கு ட்ரை பண்றேன்னு சொன்னீங்க. இப்ப எங்க வீட்ல வேலையே வாங்கிட்டீங்களே?!

அவள் தயக்கமாக ப்ரேமை பார்த்தாள். நீங்க என்னங்க சொல்றீங்க?

என் முன்னாடி கேட்டதால், அவனுக்கும் வேறு வழியில்லை. எனக்கு ஓகேதான் என்றான். எதுக்கும், ஈவ்னிங் வீட்டுக்கு போயி ரிப்ளை பண்ணிக்கலாம் என்றான்.