உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 2 169

அதற்க்குள் ப்ரேமும் வந்திருந்தான். கொஞ்ச நேரத்தில் காஃபியும் வந்திருந்தது. வழக்கம் போல் அவர்கள் இருவருமே அதிகம் பேசிக் கொண்டனர். நானும், ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்துதான் கவனித்தேன், மைதிலி போன வாரம் போல், எந்த உணர்வையும் காட்டாமல், அமைதியாய் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்ததை.

அது மட்டுமல்ல, அவ்வப்போது ப்ரியா அவளிடம் பேசினாலும், அது முழுக்க அவளை காயப்படுத்தும் நோக்கிலேயே இருந்தது. அவ்வப்போது அவளுக்காக பதில் சொன்ன ப்ரேமும் அவளைக் காயப்படுத்தினான்.

எப்பிடி டெய்லி, வெட்டியாய் (ஃப்ரீ டைமில் என்று சொல்லவில்லை) இருக்க முடியுது?

டெய்லி, வெட்டியாய் இருக்கிறப்ப என்ன பண்ணுவீங்க?

நீங்க ஏன் பியூட்டி பார்லர் போயி கொஞ்சம் மேக் அப் பண்ணிக்கக் கூடாது? பாக்கிற எங்களுக்கு கொஞ்சம் நல்லாயிருக்குமில்ல?

எப்டி இவ்ளோ கலரா இருக்கிற ப்ரேமை வளைச்சீங்க?

வீட்ல இவ சும்மா இருக்கிறப்ப வேலைக்காரி எதுக்கு? ஹாண்ட் வொர்க் பண்றேன், அது இதுன்னு காசை கரியாக்குவா!

கல்யாணத்துல கூட என்னை எல்லாரும், எப்பிடி இவளுக்கு ஓகே சொன்னீங்கன்னுதான் கேட்டாங்க.

எதற்கும் அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

என்னால் தாங்க முடியவில்லை.

கடுப்பில் எழுந்து, புக் செல்ஃபில் இருந்த புக்சை பார்க்க ஆரம்பித்தேன்.

ஸ்நாக்ஸ் எடுத்துக்கோங்க! எனக்கு ஒரு ப்ளேட்டை எடுத்து என்னருகில் வந்திருந்தாள் மைதிலி!

அவளிடம் பேச வேண்டும் போலிருந்தது. இது யார் கலெக்‌ஷன்ஸ்ங்க?

அவருதுதான். நான், இதுல காமிக்ஸ் மட்டுந்தான் படிப்பேன்!

ஓ…

இந்த வயசுல போயி, இதெல்லாம் படிச்சிட்டிருக்கேன்னு நினைக்கிறீங்களா?

அவளையே பார்த்தவன் சொன்னேன், அயன் ராண்ட் படிக்கிறன்லாம் புத்திசாலியும் கிடையாது. காமிக்ஸ் படிக்கிறவிங்க எல்லாம் முட்டாளும் கிடையாது. என்னதான் புக்ஸ் நம்ம எண்ணத்தை இம்ப்ரூவ் பண்ணும்னாலும், நாம யாருங்கிறதை, நம்ம செயல்கள்தான் தீர்மானிக்கும், நாம படிக்கிற புத்தகம் இல்லை.

ஏனோ, என் பதில் அவளுக்கு திருப்தியையும், கொஞ்சம் சந்தோஷத்தையும் தந்தது.

அதற்க்குள், நாங்கள் புக் செல்ஃப்க்கு அருகில் இருந்ததை பார்த்த ப்ரேம், புக்ஸ் ஏதாவது வேணா எடுத்துக்கோங்க ராஜா. அது எல்லாம் அவ மட்டுந்தான் படிப்பா. நான் கூட சொல்லுவேன், காசை ஏன் வேஸ்ட் பண்றேன்னு! என்னாதான் இருக்கோ அந்த புக்ஸ்ல என்று சொல்லி விட்டு திரும்ப ப்ரியாவுடன் பேச ஆரம்பித்தான்.

திரும்ப, மைதிலியைப் பார்த்த போது, அவள் கண்களில் சிரிப்புடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்!

இவள் தெரிந்தே என்னிடம் விளையாடியிருக்கிறாள். எனக்கு அது பிடித்திருந்தது. பதிலுக்கு நானும் அவளிடம் விளையாட எண்ணி, அவளை கோபமாக முறைத்துப் பார்த்து, எடுத்த புத்தகத்தை செல்ஃபிலேயே பட்டென்று வைத்தேன்.

அவள் முகம் வாடிவிட்டது.